Home » Articles » துபாய்க்கு வாங்க!

 
துபாய்க்கு வாங்க!


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

சொர்க்கமே ஆனாலும் நம்ம ஊரு போலாகுமா? என்ற திரைப்பாடலின் நினைவுடன் துபாய் பயணம் செல்வோம்.

வாய்ப்பிருப்பவர்கள் வாழ்நாளில் ஒரு முறை துபாய் சென்று வர முயற்சி செய்யலாம்.

ஏனென்றால்…

குறிஞ்சி (மலை), முல்லை (காடு), மருதம் (வயல்) நெய்தல் (கடலை ஒட்டிய பகுதி) மற்றும் பாலை (மணல்) என்ற 5 வகையானவற்றுள், துபாயில் உள்ளது கடைசி இரண்டு மட்டுமே.

அரபிக்கடல் மற்றும் பாலைவனங்கள் தான் இங்கு தான் உள்ளன. வளைகுடா நாடுகள் எண்ணெய் வளம் மிக்கவை; ஆனால், துபாயில் வெறும் 5 சதவீதம் மட்டுமே எண்ணெய் வளம் உள்ளதாய் தெரிவிக்கின்றனர்.

இங்கு ஆறு (RIVER) ஏதுமில்லை. ஆனால், சாலை ஓரங்களில் பசுஞ்செடிகள் பராமரிக்கப்படுகின்றன.

டோல்கேட் உள்ளது; ஆனால் எந்த வாகனமும் அங்கு நிறுத்துவதே கிடையாது.

இடது புறம் வாகன ஓட்டம்; மக்கள் தொகையைப் போல் 3 மடங்கு அதிகமான எண்ணிக்கையில் கார்கள் உள்ளன.

காலை, மாலை கடுமையான போக்குவரத்து நெரிசலும் உண்டு. உலகின் மிக உயர்ந்த கட்டடம் புர்ஜ் கலீபா உள்ளது துபாயில் தான்.

மன்னராட்சி ஆனாலும் மந்திரிகளும் உண்டு. மக்கள் ஓட்டுப் போட வாய்ப்பே இல்லை; ஏனெற்றால் தேர்தல் என்பதே இங்கு கிடையாது.

அரபிக் கடலை, அதன் கரையில் தோண்டி கால்வாயாக்கி, ஊருக்குள் ஓடச் செய்துள்ளனர். பல இடங்களில் தேக்கியும் வைத்து பீச் என்று உபயோகிக்கின்றனர். அலைகளற்ற அமைதியான அரபிக்கடலில் ஜுமெய்ரா பீச், குளியலுக்கு சுகமானது.

(UAE) ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஏழுமா நிலத் தொகுப்பில் (STATE) துபாயும் ஒன்று. மற்றவை; அபிதாபி, சார்ஜா, புஜைரா, அஜ்மான், ராஸ் அல் கைமா மற்றும் உம் அல் குவைய்ன்.

இவற்றுள் துபாய் இயக்கும் விமான கம்பெனி எமிரேட் ; அபுதாபி இயக்குவது- எத்திகாடு ; சார்ஜா இயக்குவது ஏர் அரேபியா.

கோவையிலிருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் நாங்கள் 26 பேர் ஒரு சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் புறப்பட்டு, சார்ஜாவுக்கு காலை 7 மணியளவில் சென்றோம்.

இரண்டு மணி நேரம் தானே என எண்ண வேண்டாம். பறக்கும் நேரம் சுமார் 3.30 மணி. நேர வித்தியாசம் 1.30 மணி. 5 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிநேரம் வானத்தில் கடல் மீது பறந்தாலும், நேர வித்தியாசம் காரணமாக கோவையில் காலை 8.30 ஆக இருக்கும் போது சார்ஜாவில் 1.30 மணி நேரம் குறைவாக காலை 7 மணியாக இருக்கும்.

கோவை அன்பர்கள் சென்னை, கொச்சி சென்று சிரமப்பட்டு விமான கட்டணம் குறைவு என்பதை தவிர்த்து, சிரமமின்றி சிறிது கட்டணம் கூடுதலாயிருந்தாலும் கோவையிலிருந்தே செல்லலாம். இந்த நிறுவனமே விசாவுக்கும் உதவுகின்றனர். ஏழு மாநிலங்களுக்கும் (UAE) ஒரே விசா தான்.

சார்ஜாவில் திகில்:

எல்லோரும் விமானத்திலிருந்து இறங்கி எமிக்ரேசன் (குடியேற்ற) சோதனையில் கண்களைப் போட்டோ எடுத்துக் கொண்ட பின், வெளி வந்து பயணப் பொட்டிகளை சேகரித்தோம்.

இனிய தம்பதி ஒருவரது பெட்டிக்குப் பதில் வேறொரு பெட்டி அதே போன்று இருந்தது. அதில் வேறு பெயர் இருந்தது. ஆக இவர்களது பெட்டியை அந்த நபர் மாற்றி எடுத்துச் சென்று விட்டார் என உறுதியானது.

புகார் செய்த பின், கையிலிருந்த பெட்டியின் திறந்திருந்த முன்பக்க ஜிப்பினுள் கை விட்டுப் பார்த்தால், அந்த நபரது சார்ஜா செல் நெம்பர் எழுதியிருந்தது.

இந்த விபரம் புகார் பகுதியில் தெரிவித்ததால் அவர்கள் அந்த நபருடன் பேசி, பெட்டியை மாற்றி எடுத்துச் சென்ற விபரம் கூறினர். அவரும் பதைப்புடன் ஆமாம் என்றார். நல்ல வேளையாக முன்புறமே நின்றிருந்தார். இருவரிடமும் பெட்டியை மாற்றிக் கொள்ளுங்கள் எனக்கூறினார்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2017

எண்ணியதை செய்யுங்கள்
வாழ நினைத்தால் வாழலாம் -11
நிர்வாகம் ஒரு நடைமுறை சார்ந்த அறிவியல்
சத்துச் சேமிப்புக் கூடங்கள்
மற்றவர்களைத் தாழ்வாக நினைக்காதீர்கள்
மனமாற்றமும், மகத்தான வெற்றியும்
தீவிர மூச்சுப்பாதை சுவாச மண்டல நோய்கள்
முந்தின கை ஜெயிக்கும்
உங்கள் ஆசைகள் நியாயமானதா? முறையற்றதா?
எண்ணத்தின் மேன்மை கொள்…
தோல்வியைத் தொடர விடலாமா?
டிசம்பர் மாத உலகதினங்கள்
மணவயல்
வெற்றி உங்கள் கையில்
துபாய்க்கு வாங்க!
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
மாற்றமே நம் முன்னேற்றம்…
தன்னம்பிக்கை மேடை
நினைத்ததை முடித்திடு… நிலவிலும் கால் பதித்திடு…
உள்ளத்தோடு உள்ளம்