Home » Articles » சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்

 
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்


கிரிஜா இராசாராம்
Author:

மனிதன் என்பவன் இப்பூவுலகில் தோன்றி வளர்ந்த பின் மறையும் வரை எத்தனையோ நிகழ்வுகளைச் சந்திக்கிறான். அவனது வாழ்வில் கதைகளும் தங்கள் பங்கை அளிக்கின்றன. தன்னுடைய குழந்தைப் பருவத்தில் தன் தாய் உணவு ஊட்டும் பொழுதிலும், இரவில் படுக்கையில் தூங்கும் பொழுதும்  தொடங்கும் கதை மீது அவன்  கொண்ட ஆர்வமானது, அவனுடைய இளமைப்பருவத்திலும், குடும்பத் தலைவனாய் குடும்பத்தை வழிநடத்தும் பருவத்திலும் தொடர்ந்து பின் அவன் இப்பூவுலகை விட்டு பிரியும் கட்டத்தில் ராமாயனக் கதைகள் கேட்டுக் கொண்டே இறைவனடி சேரும் தருவாயில் நிறைவடைகிறது.

கதைகள் எப்படிப்பட்ட வகையில் எழுதப்பட்டிருந்தாலும் எல்லா விதக் கதைகளுக்கும் ஒரு தொடக்கம், ஒரு பிரச்சனை, அதில் வரும் கதாபாத்திரங்கள், கதையின் மையக்கரு, பிரச்சனையின் உச்சக்கட்டம், பிரச்சனையால் ஏற்படும் பாதிப்பு, பிரச்சனைக்கான தீர்வு மற்றும் முடிவு ஆகியவைகளைக் கொண்டிருக்கும்.

சிவாஜி என்ற மராட்டிய வீரனின் வெற்றிக்கு காரணம் அவருடைய தாயார் ஜீஜாபாய் கூறிய மகாபாரதமும், ராமாயணமும் இவற்றின் கதைகளை கேட்டால் தான் இன்று அவர் வரலாற்றில் இடம் பிடித்தவராக இருக்கிறார். அவரைப் போலவே நம் தேச தந்தையாகப் போற்றும் மகாத்மா காந்தி உலக மக்களால் போற்றப்பட்டவராக இருக்கக் காரணம் அரிச்சந்திரனின் நாடகமும்,  சிரவணன் பற்றிய கதையும் ஆகும்.

கதைகள், நம் வீட்டில் உள்ள ஜன்னல் மூலம் வெளியில் நிகழும்  நடவடிக்கைகளை பார்த்து அவற்றின் விபரங்களைத் தெரிந்து கொள்வது  போல், கதைகள் உலகில் நடைபெறும் நிகழ்வுகளை நம் கண் முன்னே கொண்டு வரும் ஜன்னல்கள் ஆகும். நற்பண்புகள் என்ற விதைகளை குழந்தைகள் மனம் என்ற நிலத்தில் விதைத்த நல்லதொரு வாழ்வை அவர்கள் வாழ வழி வகுப்பவை கதைகள் ஆகும். கதைகளில் சிறப்பம்சங்களை ஒரு சில சிறுகதைகளை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டு அதன் மூலம் விவரிக்க உள்ளது இந்தக் கட்டுரை.

குள்ளநரியும் முரசும்

மனதையரியம் உள்ளவனே வாழ்க்கை என்ற போர்களத்தில் வெற்றி அடைவான் என்ற மையக்கருத்தை விளக்கும் கதை குள்ளநரியும் முரசும்.

கோமையா என்ற குள்ளநரி ஒருநாள் பசியால் மிகவும் வாட்டமுற்றது. காடுகளில் அலைந்து திரிந்தும் அதற்கு உணவு கிடைக்கவில்லை. பின் யாருமில்லாத வெரிச்சோடிய போர் களத்தை அடைந்தது. அப்போது பலத்த காற்று வீசியது. போர் வீரர்கள் விட்டு சென்ற முரசில் மரத்தன் கிளைகள் மோதியதால் பயப்படும் படியான சப்தம் அதனால் எழுந்தது. குள்ளநரி பயத்தால் முதலில் ஓடத்துவங்கியது. பின் தன்னுடைய மனதைரியத்தை வரவழைத்து அந்த சப்தம் எதனால் வருகின்றது என்று தெரிந்த பின்பு செல்வதே சிறப்பு உணர்ந்து சப்தம் வந்த திசையை நோக்கி சென்று அதன் காரணத்தையும் தெரிந்து கொண்டு, மகிழ்ச்சியுடன் அந்த முரசின் அருகில் இருந்த  உணவினையும் உண்டு பின் தண்ணீரையும் அருந்தி தன் பசியைப் போக்கிக் கொண்டது.

தன்னுடைய தாய், தந்தையைப் பிரிந்து ஒரு குழந்தை பள்ளிக்கூட வாசலில் நுழையும் போது தொடங்கும் அந்த அச்சமின்மை அவனது ஒவ்வொரு பருவத்திலும் தொடர்ந்து அவனது வாழ்க்கையைச் சிறப்படையச் செய்கின்றது. மனிதனின் வாழ்க்கை ஒரு பயணம் போன்றது. தரை மார்க்கமாக, கடல் மார்க்கமாக மற்றும் விண்வெளி மார்க்கமாக பயணம் மேற்கொள்ளும் பொழுது, அந்த ஓட்டுநரின் மனதைரியத்தால் தான் பயணிகள் எவ்வித பயமுமின்றி பயணிக்கின்றனர். அப்படித்தான் ஒரு குடும்பத்தலைவரின் அச்சமின்மையால் அவனுடைய குடும்பத்தையும் மக்களையும் முறையாக வளர்த்து வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்கிறார். மனதில் என்று அச்சம் நீங்குகிறதோ அன்றே அவன் வாழ்க்கையை வெல்ல தயார் ஆகிவிட்டான் என்று நினைத்துக் கொள்ளலாம்.

இரண்டு பாம்புகள்

ஒருவனினங எதிரிகள் இருவர் அவர்களுக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டால் வெற்றியாளன் அந்த ஒருவன் தான். என்ற மையக்கருத்தைக் கொண்டு இக்கதை எழுதப்பட்டது. இக்கதை மற்றொரு கருத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. அதாவது ஒருவன் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினால் அவன் எதிரிகளின் மகிழ்ச்சியை அழிக்க வல்லவன் என்பதாகும்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2017

எண்ணியதை செய்யுங்கள்
வாழ நினைத்தால் வாழலாம் -11
நிர்வாகம் ஒரு நடைமுறை சார்ந்த அறிவியல்
சத்துச் சேமிப்புக் கூடங்கள்
மற்றவர்களைத் தாழ்வாக நினைக்காதீர்கள்
மனமாற்றமும், மகத்தான வெற்றியும்
தீவிர மூச்சுப்பாதை சுவாச மண்டல நோய்கள்
முந்தின கை ஜெயிக்கும்
உங்கள் ஆசைகள் நியாயமானதா? முறையற்றதா?
எண்ணத்தின் மேன்மை கொள்…
தோல்வியைத் தொடர விடலாமா?
டிசம்பர் மாத உலகதினங்கள்
மணவயல்
வெற்றி உங்கள் கையில்
துபாய்க்கு வாங்க!
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
மாற்றமே நம் முன்னேற்றம்…
தன்னம்பிக்கை மேடை
நினைத்ததை முடித்திடு… நிலவிலும் கால் பதித்திடு…
உள்ளத்தோடு உள்ளம்