Home » Articles » மாற்றமே நம் முன்னேற்றம்…

 
மாற்றமே நம் முன்னேற்றம்…


செல்வகுமார் ரா
Author:

மனிதன் கருவில் தொடங்கி கல்லறை வரை ஒவ்வொரு தருணத்திலும் ஏதேனும் ஒரு மாற்றத்தைச் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறான். இந்த மாற்றம் தான் அவருக்கு ஆயுதமாகவும், கேடயமாகவும் இருக்கிறது. மாறு மறுக்கும் யாரையும் மிதித்துக் கொண்டு போகும் வேகத்தில் மாற்றங்களுக்கான அவசியங்கள் வேகமாய் வளர்ந்து கொண்டிருக்கின்றன. உங்கள் வாழ்விலும் சில சமயங்களில் உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் உணர்கிறோம்.

திட்டமிட்டு செயல்படுங்கள்:

தினசரி வேலைகளில் குடும்பத்திலும் நிறுவனத்திலும் செலவிடப்படும் செலவுகளில், உடனடியாக செய்ய வேண்டிய மாற்றங்களையும் பட்டியலிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனே அறிவிப்பு கொடுங்கள். மற்றவர்கள் ஒத்துழைப்பார்களா? மாட்டார்களா? என்கிற தயக்கத்தில், விட்டுபிடிப்பது இப்போதைய சூழலுக்கு நல்லதல்ல. எதிர்காலம் பற்றி  எச்சரிக்கை உணர்வு எல்லோருக்கும் உண்டு என்பதால், அவசியமான மாற்றங்களை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.

தொலை நோக்குப் பார்வை

உலகமெங்கும் பொருளாதார பின்னடைவின் புயலுக்கு ஒடிந்து விழுகின்ற நிறுவனங்கள் மாற்றங்களைப் பற்றி சிந்திக்காததால் தான் மண்ணைக் கவ்வுகின்றன. இன்றைய அவசர உலகில் கண் கூடா சவால்கள் கண்ணை மறைப்பதில் உள்ள தொலை நோக்குப் பார்வைத் தொலைத்து விடாதீர்கள். நீங்களும் உங்கள் உறவுகளும், சுற்றுப்புறத்தாறும் எதை நோக்கி முன்னேற வேண்டும் என்பதை உணருங்கள். நீங்கள் எதிர்பார்ப்பதை விட வேகமாக அவர்கள் உங்களுக்குத் துணை நிற்பார்கள்.

வெற்றியை நோக்கி ஒரு பயணம்

ஆடுகளத்தில் கிரிகெட் வீரர் ஒருவர் தனது அணியின் வெற்றிக்கு ஆட்டத்தின் கடினமான சூழலில் தனது மாற்றுச் சிந்தனையால் ஆட்டத்தின் நிலையை மாற்றி பந்து எல்லைக் கோட்டை தொடாத போதும் பக்கவாட்டில் அடித்துவிட்டு ஒன்று இரண்டு ஓட்டங்களை ஓடி எடுத்து தனது சிறு முயற்சினால் அணியினை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்கிறார். அவை உங்களுடன் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கே உற்சாகம் தந்து இன்னும் ஈடுபாட்டுடன் செயல்பட தூண்டும்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2017

எண்ணியதை செய்யுங்கள்
வாழ நினைத்தால் வாழலாம் -11
நிர்வாகம் ஒரு நடைமுறை சார்ந்த அறிவியல்
சத்துச் சேமிப்புக் கூடங்கள்
மற்றவர்களைத் தாழ்வாக நினைக்காதீர்கள்
மனமாற்றமும், மகத்தான வெற்றியும்
தீவிர மூச்சுப்பாதை சுவாச மண்டல நோய்கள்
முந்தின கை ஜெயிக்கும்
உங்கள் ஆசைகள் நியாயமானதா? முறையற்றதா?
எண்ணத்தின் மேன்மை கொள்…
தோல்வியைத் தொடர விடலாமா?
டிசம்பர் மாத உலகதினங்கள்
மணவயல்
வெற்றி உங்கள் கையில்
துபாய்க்கு வாங்க!
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
மாற்றமே நம் முன்னேற்றம்…
தன்னம்பிக்கை மேடை
நினைத்ததை முடித்திடு… நிலவிலும் கால் பதித்திடு…
உள்ளத்தோடு உள்ளம்