Home » Articles » அக்டோபர் மாத உலக தினங்கள்

 
அக்டோபர் மாத உலக தினங்கள்


மனோகரன் பி.கே
Author:

1. சர்வதேச முதியோர் தினம் (International Day for the Elderly) அக் -1

முதியோர்களைப் பாதுகாப்பது பற்றி உணர்த்தும் விதமாக ஐ,நா, அமைப்பால் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது,

உலகெங்கும் உள்ள மூத்த குடிமக்களை மதித்து, மரியாதை செலுத்திக் காப்பாற்ற வேண்டும் என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளிது,  இந்த தினத்தில்  அனைத்து வகையிலும் குடும்பம், சமூகம் மற்றும் தேசத்துக்குச் சேவை ஆற்றிய முதியோர்களை நினைவு கூர்ந்து நன்றி சொல்ல வேண்டும்.  அவர்களது அனுபவ அறிவு, ஆற்றல், சாதனைகள் ஆகியவற்றைப் புரட்டிப் பார்த்து ஊக்கம் கொள்ள வேண்டும்,

உலகம் முழுவதும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அவர்கள் மீதான கவனிப்பு குறைந்து வருகிறது,  முதியவர்கள் நலனில் அக்கறை கொண்டு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அவர்களுக்கு உதவ வேண்டும், அவர்களின் சீரிய பண்பு, தளராத உழைப்பு, தேசப்பற்று ஆகியவற்றைத் தொடர்ந்து காக்க உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் பாரம்பரிய குடும்ப அமைப்பான கூட்டுக் குடும்பம், முதியோர்களுக்கு உரிய பாதுகாப்பை அளித்தது.  இந்த அமைப்பில் அவர்களுக்கு உரிய அன்பும், அரவணைப்பும் மரியாதையும் கிடைத்து வந்தது,  இன்று உலகம் சுருங்கி வந்தாலும் உறவுகளுக்கு இடையே உள்ள தூரம் அதிகரித்துள்ளது. தனிக்குடித்தனங்கள் பெருகி வருவதால் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன.

முன்பெல்லாம் முதியோர் இல்லங்கள் என்பவை கைவிடப்பட்ட, ஆதரவற்ற முதியவர்களை வைத்துப் பராமரிக்கும் மையங்களாக இருந்தன,  இன்று வேறு மாதிரியான  முதியோர் இல்லங்கள், வசதிகள் மிக்க ‘ஹைடெக்’ இல்லங்கள் வரத் தொடங்கி விட்டன.

இன்றைய அவசர யுகத்தில்  தேவைகள் அதிகரித்து வருவதால் அதிக வருமானம் ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் இளைய சமுதாயம் உள்ளது,  இதன் காரணமாக இளைய தலைமுறைக்கும், மூத்த குடிமக்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகரிக்கிறது,  முதியவர்களின் தேவையை அறிந்து உதவும் மனப்போக்கு குறைந்து வருகிறது,  உடல் உபாதைகளால் அவர்கள் அவதிப்படும்போது அதை அவ்வளவாக மற்றவர்கள் பொருட்படுத்தாத போக்கு பெருகி வருகிறது,  மூப்புக்கே உரிய சில குணங்களால் மற்றவர்களுடன் ஒத்துப் போக இயலாததால் எங்கும் அடைக்கலம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

உங்களது குடும்பத்தில் இருக்கும் முதியோரை இதுவரை கவனிக்க மறந்து விட்டாலும் கூட, இன்று முதல் கவனிக்க உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்,  இதற்கு இத்தினத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுங்;கள்,  நாமும் ஒருநாள் முதியவராவோம் என்பதை மனதில் நிறுத்துங்கள்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2017

இரணமும் இதமும்
காலங்கள் மாறுமோ
அவசர சிகிச்சைப் பிரிவை அணுக வேண்டிய சூழ்நிலைகள்
முயற்றேன் வென்றேன்
கண்ணுக்குத் தெரியாத புனிதம்
ஆசையும் இயக்கமும்
மன்னிப்புக் கேட்கிறேன் மனசாட்சியே…
மதுரை வேளாண் கல்லூரியின் திட்ட இயக்குனருக்கு 2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த வேளாண் விஞ்ஞானி விருது
அக்டோபர் மாத உலக தினங்கள்
சோதனையை சிந்தித்து சாதனையை வெற்றிடு
ஏன் இப்படி?… இப்படித்தான்
என் பள்ளி
மனவயல்
கனவை நனவாக்குவது திறமையா? கடின உழைப்பா?
வாழ நினைத்தால் வாழலாம் – 9
வெற்றி உங்கள் கையில் – 46
உண்மை என்னும் வற்றாப் புகழ்
தன்னம்பிக்கை மேடை
எண்ணங்களைதூய்மைப்படுத்து! ஏற்றங்களை மேன்மைப்படுத்து!!
உள்ளத்தோடு உள்ளம்