![]() |
Author: சுவாமிநாதன்.தி
|
சாதனையாளர்கள் செய்து முடித்த அருங்காரியத்தைப் பார்க்கும் போது, நாமும் இது போல செய்து முடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து முயற்சியை தொடங்குபவர்கள் உண்டு. அவரைப் போல நாமும் மருத்துவராக வேண்டும். இவரைப் போல பேச்சாளராக வேண்டும் என்றெல்லாம் அசைப்படுகிறோம். முயற்சி செய்கிறோம்.
வெற்றி என்பது மந்திர வித்தையல்ல. அது எளிதற்ற இடர்பாடுமிக்க கடின உழைப்பு சார்ந்த ஒன்று. ஒருவர் பெற்ற பட்டம், கௌரவமான வேலை, கட்டிய அழகான வீடடு, ஆசைப்பட்டு வாங்கிய கார், சேர்த்து வைத்திருக்கும் மதிப்புமிக்க நகைகள், சமூகத்தில் இன்று அடைந்திருக்கும் பெயர் புகழ்,; எதுவுமே எளிதாக சுலபமான வழியில் யாருக்கும் வந்ததல்ல. அதனால்தான் கடின உழைப்புக்கு ஈடு இணையில்லை என்கிறோம்.
பலர் வெற்றிக்காக கனவு கண்டு கொண்டிருக்கும் போது, சாதனையாளர்கள், வெற்றியாளர்கள் விழித்தெழுந்து அதை அடைவதற்க்காக கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். போதுமான கடின உழைப்பால் நாம் எதையுமே அடைந்து விட முடியும். கடின உழைப்பிற்கான விலை, நற்பலன், வெகுமதி, சம்பளம் எல்லாம் தாமதமாக கிடைக்கிறது. சோம்பேறித்தனத்திற்கான விலையோ உடனடியாக கிடைக்கிறது.
நம்மால் சிறப்பாக செய்ய முடியும் என நமக்கு தெரிந்திருந்தால் சிறப்பாக செய்யலாம். நாம் போராடாமல், கடும் முயற்சி செய்யாமல் உழைக்காமல் வெற்றி பெற முயற்சி செய்வது என்பது விதை விதைக்காமல், தண்ணீர் பாய்ச்சாமல், களை எடுக்காமல், அறுவடை செய்ய செல்வது போன்றது.
கடின உழைப்பும், கட்டுப்பாடும் இல்லாமல் மிக உயர்ந்த நிலைக்கு, உயர் பதவிக்கு, நாம் மேற்கொள்ளும் தொழிலின் உச்சிக்கு செல்வது மிகவும் கடினம்.
நாம் முயற்சி மேற்கொள்ளாமல், நம் கனவுகள் மட்டும் காரியங்களை ஒரு போதும் முடிப்பதில்லை. நம் வாழ்வில் சிறப்பான ஒரு இலக்கை அடைய வேண்டும் என்கிற கட்டுக்கடங்காத உணர்வு, தீ மனதிற்க்குள் இருக்கும் போது, நாம் அதை செய்ய முடியுமா முடியாதா என்கிற நம்பிக்கையும் தெளிவும் இருக்கும். எவ்வளவு இடர்பாடுகள் வந்தாலும் தொடர்ந்து தமது இலக்கில் ஒட்டிக் கொண்டு இருப்போம்.
வெற்றியாளர்கள் கடினமாக உழைப்பதோடு தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு விரும்பத்தக்கவராக இருப்பார்கள். காரியத்தை தள்ளிப் போடுபவர்களுக்கும், கால தாமதம் செய்பவர்களுக்கும் பலன் உடனே தெரிந்து விடும். கடின உழைப்பாளிகளுக்கு பலன் நீண்ட காலத்தில்தான் தெரியும்.
இந்த இதழை மேலும்

Share

October 2017




















No comments
Be the first one to leave a comment.