Home » Articles » உழவுத் தொழிலுக்கு வாருங்கள்

 
உழவுத் தொழிலுக்கு வாருங்கள்


மாரிமுத்துராஜ் A.G
Author:

உழவுத்தொழில் என்பது இந்த மண்ணின் அடையாளம் ஆகும்.

உலகத்தில் உயர்ந்த தொழில் ஒன்று உண்டு என்றால் அது உழவுத்தொழிலே! உழவுத் தொழிலுக்கு ஈடு இணை எதுவுமே இங்கில்லை.. உயிர்கள் அனைத்தையும் காப்பாற்றும் உழவுத் தொழிலே முதன் முதலில் மனிதகுலம், இம்மண்ணில் செய்த தொழில். நம் மூதாதையர்களால் போற்றி வளர்க்கப்பட்ட இத்தொழில், இன்னும் சில காலத்தில் இம்மண்ணிலே கொடிகட்டி பறக்கப்போவது உறுதி.

எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. எங்க அப்பா எங்க நிலத்தில் உழவு செய்ய, அதிலே எங்க அம்மா விதை விதைக்க, விதை முளைத்து பயிராகும் போது கூடவே வளரும் களைகளை, எங்க சொந்தக்காரர்களைக் கூப்பிட்டு பிடுங்கி, வளர்ந்த பயிரை, இரவு, பகலாக உயிரைக் கொடுத்து, அங்கேயே கிடையாய்க் கிடந்து, தண்ணீர் பாய்ச்சி பூச்சி மருந்து தெளித்து, ஆடு, மாடு மனுச, மக்க, கண்ணுபடாமா, ஒவ்வொரு நாளும், பார்த்து பார்த்து விளஞ்ச வெள்ளாமையை அறுவடை செஞ்சு, அதை பக்குவமா பாடம் பண்ணி, சிந்தாம, செதராமா, மாட்டு வண்டியில ஏற்றி வீடு போயி கொண்டு சேர்க்கம் போது எங்க குடும்பத்துல இருந்த குதூகலத்திற்கு அளவே கிடையாது. அந்த சந்தோசம், மகிழ்ச்சி, பேரானந்தம் எந்த லோகத்திலும் கிடைக்காது போங்க. என் புள்ளைகள் என்ன பாவம் செஞ்சுச்சோ, அந்த சந்தோசம் என்னன்னு தெரியாமலே வளருது. இதற்குக் காரணம் காலம்தான். உழவுத்தொழிலின் உயர்வை அவர்கள் கண்ணில் காட்டாமல் மறைத்து விட்டது.

உழவுத்தொழில் என்பது இந்த மண்ணின் அடையாளம் ஆகும். உழவு, நிலத்தின் மேல் மண்ணை வளமாக்குவதுடன், அதை மென்மையாக்கவும் உதவுகிறது. நிலத்தில் பயிர் செய்யும் முன் அந்நிலத்தை, உழவேண்டும், பிறகு மண் கட்டிகளை உடைத்து விட்டு, உழுத மண்ணை ஓரிருமுறைபுரட்டிப்போட்டு சரிபடுத்தி, பின்பு பாத்திகட்டி அந்தப் பாத்திக்குள், மழைநீர் மற்றும் பாசன நீரை மின் மோட்டர் கொண்டோ கவளை மற்றும் ஏற்றம் கொண்டோ இறைத்து நிலத்தினுள் உட்புக வழி செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், மண் அரிப்பும், நீர் இழப்பும் தவிர்க்கப்படுவதுடன், மண்ணில் உள்ள நுண் துளைகள் வழியாக நீர் கீழே சென்று, நிலத்தடி நீராகி, மீண்டும் கிணற்றுக்குள் வந்து சேரும். எவ்வளவு அற்புதமான அறிவியில் இது! இதுமட்டுமா?

மேல் மண்ணை உழவு செய்வதால், அதில் வளரும் பயிருக்குத் தேவையான காற்று அந்த மண்ணுக்குள் செல்கிறது. அதோடு பயிறுக்குத் தேவையான ஈரப்பதமும், காற்றும், மண்ணில் இருந்தே கிடைக்க வழிவகுக்கின்றது. மேலும், காற்றின் தன்மையை அடிக்கடி மாற்றிக் கொள்ளவும், மண்ணின் வெப்ப நிலையை அதிகப்படுத்திக் கொள்ளவும் ஏதுவாகிறது. இவை எல்லாம் எவ்வளவு பெரிய விசயங்கள்!

பயிரிட இருக்கும் நிலத்தை உழவு செய்தவதால், மேலும் பல நன்மைகள் விளைகின்றன. முந்தைய பயிரின் கழிவுப் பொருட்கள், களையப்பட்டு, நிலம் தூய்மை அடைகிறது. பூமியை நன்கு உழும்போது, நிலத்தில் சூரிய ஒளிபட்டு, பூச்சிகள் எல்லாம் மண்ணின் மேல் பாகத்திற்கு வருகின்றன. இவ்வவாறு வரும் பூச்சிகளை பறவைகள், கொத்திக் கொண்டு சென்று விடுகின்றன.  இப்படி, பல்வேறு பலன்கள், உழவு செய்வதால், பயிரிடும் நிலத்திற்கு கிடைக்கின்றன என்பது இன்றுள்ள எத்தனை பேருக்குத் தெரியும்!

உழவு என்பதே, மனிதன் மரக்கலப்பையை மண்ணில் அழுத்தி, அதை மாட்டைக் கொண்டு ஓட்டி, ஒரே நேர்கோட்டில் இழுத்துச் செல்லும் தொழிலாகும். இதனால், நிலத்தின் மேல் மண்ணை அது திறந்து விடுகின்றன. இதுவே மரபு சார்ந்த உழவுத் தொழிலாக நீண்டநாள் பின்பற்றப்பட்டு வந்தது.

அதனைத் தொடர்ந்து இரும்புக் கலப்பையைப் பூட்டி உழுகின்றமுறைவந்தது. காலப்போக்கில், பயிர்த் தொழிலுக்கு தேவையான வேலையாட்கள் கிடைக்காத நிலை உருவானதும், டிராக்டர் கொண்டு உழவு செய்யப்பட்டது.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2016

இங்கு இவர் இப்படி
உழவுத் தொழிலுக்கு வாருங்கள்
குழந்தை உணவு
ஓடுவது கடிகார முள் அல்ல, உன்னுடைய வாழ்க்கை
கலைவரிசை
கறுப்புப் பணத்திற்குக் கடிவாளம்
திசைமாறிய பயணம்
வாழ்வாங்கு வாழ மனவளம் வேண்டும்
சிகரமே சிம்மாசனம்
என் பள்ளி
வெற்றி உங்கள் கையில்
தலைமை கொள்
வாணிகத்தில் வளர்ச்சியைப் பெற தனி மனிதனின் பங்கு
ஸ்ரீலங்கா சுற்றுலா
மனக்கிளர்ச்சி – வெற்றிக்கு முதல்படி…
தன்னம்பிக்கை மேடை
திறமையை எருவாக்கு! வெற்றியை உருவாக்கு!!
உள்ளத்தோடு உள்ளம்