Home » Articles » ஓடுவது கடிகார முள் அல்ல, உன்னுடைய வாழ்க்கை

 
ஓடுவது கடிகார முள் அல்ல, உன்னுடைய வாழ்க்கை


சுவாமிநாதன்.தி
Author:

‘காத்திருக்கும் நேரத்தில்

கையில் புத்தகம் வைத்திருந்தால்

அதைக் படித்து காத்திருக்கும் நேரத்தை

வீணடிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.’

நேரம் நம் அனைவருக்கும் இலவசமானது தான்.ஆனால்,அது எப்போதும் விலை மதிப்புமிக்கதாகவே உள்ளது. நாம் ஒருபோதும் நேரத்தின் எஜமானர்களாக முடியாது. நேரத்தை நம்மால் பிடித்து வைக்கவும் முடியாது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தான் முடியும்.

வாழ்வில் ஒருமுறை நாம் இழந்த நேரத்தை திரும்ப பெறமுடியவே முடியாது. நமக்கு மிகவும் அரிதான இந்த தேவையான நேரத்தை, மிகவும் மோசமாகப் பயன்படுத்துபவர்களே நம்மில் அதிகம்.

அரிதிலும், அரிதான நிகரற்ற ஒரு பரிசை யாருக்கேனும் நீங்கள் தர முடியுமென்றால், அது உங்களுடைய நேரம்தான்.

நேரம் பணத்தை விட மதிப்பு வாய்ந்தது. உங்களால் பணத்தைக் கூட சம்பாதித்து விட முடியும். ஆனால், நேரத்தை உங்களால் பெறவே முடியாது.

குறிப்பிட்ட இடத்திற்கு ஒரு நிமிடம் தாமதமாக செல்வதை விட, ஒரு மணி நேரம் முன்னதாகவே சென்று விடுவது மிகவும் மேலானது. நேரம் உருவாக்கப்பட வேண்டிய ஒன்று.

எனக்கு நேரம் இல்லை, என மறுப்பதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால், அதைச் செய்ய எனக்குத் துளியும் விருப்பமில்லை, என்பதாகும்.காலமும், கடல் அலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை, என்பது பழமொழி.

போதுமான நேரம் இல்லை, என்று சாக்குப் போக்கு சொல்வதை ஏற்கவே இயலாது. நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நேரமோ, அதே அளவு நேரம்தான் குடியரசுத் தலைவருக்கும் பிரதம மந்திரிக்கும் உள்ளது.

எல்லா செல்வமும் உடைய ஒருவரை நான் ஒரு போதும் தேடவில்லை. ஆனால், என்னுடன் நேரத்தைச் செலவிட முடிந்த ஒருவரே தேவை. அவர் எல்லாவற்றையும் விட மேலானவர்; என நான் கருதுகிறேன்.

வாழ்வில் நாம் திரும்பப் பெறமுடியாதவை மூன்று: அவை 1. சொல்லிவிட்ட வார்த்தை 2. தவறவிட்ட வாய்ப்பு, 3. கடந்து விட்ட நேரம் ஆகியவைகளாகும். நேரம் வேகமாகப் பறக்கிறது. நாம் நல்ல விமானியாக இருந்து காலத்தைப் பயன்படுத்த வேண்டும்.

நேரம் எல்லாவற்றையும் மாற்றுகிறது. எந்த வகையில் நாம் நம் நேரத்தை செலவழிக்கிறோமோ, அதுதான் வாழ்வில் நாம் யார் என்பதைத் தீர்மானிக்கிறது. இழந்த செல்வத்தைச் சாம்பாதித்து விடலாம். இழந்த உடல் நலத்தைச் சரி செய்து விடலாம். ஆனால், இழந்த நேரத்தைப் பெறவே முடியாது.

பறவை உயிருடன் இருக்கும்போது எறும்புகளை உண்கிறது. பறவை இறந்து விட்டால், எறும்புகள் பறவையை உண்கின்றன. ஒரு மரத்திலிருந்து பல லட்சம் தீக்குச்சிகளைத் தயாரித்து விடலாம். ஆனால், ஒரே ஒரு தீக்குச்சி பல மரங்களை எரித்துவிடும். எந்த நேரத்திலும் மனிதனின் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மாறலாம். அதனால், யாரையும் ஒரு போதும் காயப்படுத்தி பேசுவதோ, குறைவாக மதிப்பிடுவதோ கூடாது. இன்று நீங்கள் சக்தி வாய்ந்தவராக இருக்கலாம். நாளை அந்த நிலை மாறிவிடும் ஏனென்றால், நேரம் உங்களை விட பல மடங்கு சக்தி வாய்ந்தது.

நமக்கு நேரம் நிறைய இருந்தும்,. குறைவான பணிகளை மட்டும் செய்து கொண்டு இருக்கிறோம் என்றால், அதை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2016

இங்கு இவர் இப்படி
உழவுத் தொழிலுக்கு வாருங்கள்
குழந்தை உணவு
ஓடுவது கடிகார முள் அல்ல, உன்னுடைய வாழ்க்கை
கலைவரிசை
கறுப்புப் பணத்திற்குக் கடிவாளம்
திசைமாறிய பயணம்
வாழ்வாங்கு வாழ மனவளம் வேண்டும்
சிகரமே சிம்மாசனம்
என் பள்ளி
வெற்றி உங்கள் கையில்
தலைமை கொள்
வாணிகத்தில் வளர்ச்சியைப் பெற தனி மனிதனின் பங்கு
ஸ்ரீலங்கா சுற்றுலா
மனக்கிளர்ச்சி – வெற்றிக்கு முதல்படி…
தன்னம்பிக்கை மேடை
திறமையை எருவாக்கு! வெற்றியை உருவாக்கு!!
உள்ளத்தோடு உள்ளம்