Home » Articles » பிறந்த குழந்தையின் தோல் பராமரிப்பு

 
பிறந்த குழந்தையின் தோல் பராமரிப்பு


இராஜேந்திரன் க
Author:

மனிததோலின் முக்கியமான பணிகள்

 • நீர் மற்றும் தாதுக்களை சமநிலைப் படுத்துதல்
 • வெப்பநிலையை சமநிலைப்படுத்துதல்
 • நோய்க்கிருமி தொற்றிலிருந்து பாதுகாத்தல்
 • காயங்களிலிருந்து பாதுகாத்தல்
 • சுற்றுப்புற நோய்கிருமி தாக்கத்திலிருந்து பாதுகாத்தல்
 • யூவி (UV) கதிர் தாக்கத்திலிருந்து பாது காத்தல்
 • நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்தல்
 • அழகை பராமரித்தல்
 • உணர்ச்சி உறுப்பாகவும், தாய்சேய் பிணைப்பை பலப்படுத்தவும் உதவுகிறது.

குழந்தை பிறப்பு என்பது ஒரு குழந்தை கருவறையிலிருந்து வெளியுலகத்திற்கு வருவதாகும். பிறந்த குழந்தையின் தோல் பெரியவர்களின் தோல் போன்றது தான் என்றாலும் அதன் தன்மைகள் மாறுபடும்.

இயற்கையாக குழந்தையின் தோல் அமைப்பில் உள்ள மாறுபாடுகள்

 • குழந்தையின் தோலின் பரப்பளவு/எடை அதிகம்.
 • டெர்மிஸ், எபிடெர்மிஸ் இடையே குறைவான பிணைப்பு இருக்கும்.
 • மெல்லிய தோல்
 • அதிகமான ஊடுருவும் திறன், குறைவான எதிர்ப்பு சக்தி மற்றும் குறைவான மெலனின் உற்பத்தி உடையது.
 • வியர்வை சுரப்பி மற்றும் செபேசியஸ் சுரப்பியின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் குறைவான செயல்பாட்டுத்திறன்.

தோலில் ஏற்படும் தாக்கங்கள்

 • டெர்மிஸ் எபிடெர்மிஸ் இடையே ஏற்படும் மாற்றங்களால் கொப்புளங்கள் ஏற்படுகிற வாய்ப்பு அதிகம்.
 • தோலில் குறைவான நீர்ச்சத்து, அதிகமான தசையின் நீர் உறிஞ்சும் தன்மையினால் தோலின் வெப்ப மாறுபாடுகள் ஏற்படலாம்.
 • தோலின் வளர்ச்சி முழுமை பெறாததால் நோய் கிருமி தாக்கம் அதிகரிக்கலாம்.
 • குறைவான மெலானின் உற்பத்தியினால் யூவி (UV) கதிர்களின் தாக்கத்திற்கான வாய்ப்பு அதிகம்.
 • சோப்பு போன்ற இரசாயன பொருள்கள் உபயோகிப்பதால் தோலில் வறட்சி ஏற்படும்.

பிறந்த குழந்தையின் தோல் பராமரிப்பில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை

 • குழந்தையை மென்மையாகக் கையாள வேண்டும்.
 • தேவையான நீர்சத்து கொடுக்க வேண்டும்.
 • தோலின் வறட்சியைத் தவிர்த்தல்.
 • தோல் மடிப்புகளில் உராய்வு விசையைக் குறைத்தல்
 • சூரிய கதிர்களிடமிருந்து பாதுகாத்தல்

குழந்தையின் பிறப்பில் நுண்ணுயிர் காலனியாக்கம் இல்லை. பிறந்தபின் ஸ்டெபைலோகாக்கை, குழந்தையின் அக்குள், கவட்டி, தலை பகுதிகளில் அதிகமாகத் தோன்ற ஆரம்பிக்கும்.

ஸ்டெபைலோகாக்கஸ் ஆரியஸ் நுண்கிருமி தாயிடம் மற்றும் செவிலியரிடமிருந்து தொற்றும் கிருமிகளாகும். தோலின் எபிடெர்மியஸில் உள்ள ஸ்குட்ராட்டம் கார்னியம் என்பது தோலின் பாதுகாப்பு படலமாகக் கருதப்படுகிறது. கொழுப்பானது தோலின் ஈரப்பதத்தை சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

குழந்தையின் தோல் பரப்பு அமிலத் தன்மையுடன் (pH5ன் கீழ்) இருக்கும். ல்ஏ அதிகமானால் தோலில் நுண்ணுயிரியின் எண்ணிக்கை அதிகமாகும். எனவே குழந்தையின் தோல் அமிலத்தன்மையை பராமரிக்க வேண்டும்.

வெர்னிக் கேசியோசாவின் செயல்பாடு (Vernix Caseosa)

Vernix Caseosa என்பது இயற்கையாகவே பிறந்த குழந்தையின் தோலில் ஒட்டியிருக்கும் கொழுப்பு நிறைந்த பொருள். இது சிசுவின் சர்மமெழுகு சுரப்பியால் உருவாக்கப்படுகிறது. இது எபிதீலியம், குழந்தையின் மென்மயிர், சர்மமெழுகு சுரப்பி ஆகியவற்றை உள்ளடக்கியது. இதில் நீர் 81%, கொழுப்பு 19%, புரதம் 10% உள்ளது.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2016

வழுக்காத வாழ்க்கை
உலக தத்துவ தினம்…
மனம் மாறினால் குணம் மாறலாம்…
கொங்கு நாட்டு மன்னன் வீரராஜேந்திர சோழன்
பிறந்த குழந்தையின் தோல் பராமரிப்பு
முயன்றேன்… வென்றேன்
காற்றாடி…
நம்பிக்கையை உள்வாங்கு – சந்தேகத்தை வெளியேற்று…
ஆனந்த வாழ்விற்கு….
பருவத்தே பயிர் செய்
தட்டுங்கள் திறக்கப்படும்…
வெற்றி உங்கள் கையில்….
ஒரு தீக்காடு; உள்ளே சிறு சிறு பூச்சிகளும் வெளிச்சமும்…
தன்னம்பிக்கை மேடை
புதியதை உருவாக்கு! புகழை  உனதாக்கு!!
உள்ளத்தோடு உள்ளம்