Home » Articles » பெண் குழந்தைகள்

 
பெண் குழந்தைகள்


இராஜேந்திரன் க
Author:

கருவுற்ற காலத்தில் பெண்கள் சத்தான உணவுப் பொருட்களை உண்ண வேண்டும். தன்னுள் மற்றொரு உயிரைச் சுமக்கின்ற காரணத்தினால் இருவருக்குமான உணவை உண்ண வேண்டும். அக்கால கட்டத்தில் உடல்நலத்துடன் மனநலத்தையும் பாதுகாக்க வேண்டும். மனத்தில் தேவையற்ற எண்ணங்களைச் சிந்தித்தல், கவலைப்படுதல் போன்றவை, கருவில் இருக்கும் குழந்தையின் மனநிலையைப் பாதிக்கும். எனவே கருவுற்ற காலத்தில் நல்ல எண்ணங்களையே சிந்திக்க வேண்டும். ஆன்மிக புத்தகங்களை வாசிக்கலாம். மனத்திற்குப் புத்துணர்வைத் தரக்கூடிய இசையைக் கேட்கலாம். கருவுற்ற காலத்தில் தாய் செய்யும் ஒவ்வொரு செயலும் குழந்தையைப் பாதிக்கும். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களும் அப்பெண்ணின் மனநிலைக் கேற்ப நடந்துகொள்ள வேண்டும். அதிக ஓய்வு, சத்தான உணவு, அன்பான உபசரிப்பு போன்றவை கருவுற்ற பெண்களுக்கு அவசியமானவை ஆகும்.

அழிந்து வரும் பெண் இனம்

இன்னும் சில ஆண்டுகளில் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் மனித சமுதாயத்தின் அங்கமாக இருக்கக் கூடிய பெண் இனம் சேர்க்கப்பட்டு விடும் என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அறியாமையால் மக்கள் வாழ்ந்த அந்தக் காலத்தில் தான் பெண்கள் கேவலமாக நடத்தப்பட்டார்கள். இன்று நாகரீகம் பேசும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வாழும் பெண்கள் அனுபவிக்கும் சுதந்திரம் கூட அவர்களாக அடைந்து கொண்டதல்ல, பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னால் கிடைத்த ஒன்றே!

நமது இந்திய தேசத்தின் மொத்த மக்கள் தொகை விகிதத்தில் ஆண் பெண் விகிதம் மிகவும் அபாய கட்டத்தில் உள்ளது. 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் இருக்கின்றார்கள். மேலும் 0-6 வயதுக்குட்பட்ட மக்கள் தொகை விகிதத்தில், 1000 ஆண் குழந்தைகளுக்கு 793 பெண் குழந்தைகளே உள்ளன.

இந்த நிலை நீடித்தால் கலாச்சார சீரழிவு போன்ற எண்ணற்ற விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. பெண்கள் மீதான வன்முறையும், வன்கொடுமையும் மேலும் அதிகரிக்கும். ஒரு பெண்ணைப் பலர் அடக்கியாள நினைப்பார்கள். இந்த அளவு பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் வீழ்ச்சியைச் சந்திப்பதற்கு காரணம் என்னவெனில், கருவிலேயே பெண் குழந்தைகள் கண்டறியப்பட்டு, அழிக்கப்படுவது தான் காரணம். இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 50 லட்சம் பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுவதாக ஆய்வு சொல்கிறது. படித்தவர்கள், பாமரர்கள் என்றில்லாமல் பெண் சிசுக்கொலைகள் நமது நாட்டில் நடந்து வருவது வருந்தத்தக்க விஷயம். இதிலிருந்து இந்த படித்த நவீன யுகத்திலும், 2020ல் உலக வல்லரசு என்று மார்தட்டிக் கொள்ளும் நம் நாட்டில் இப்படியெல்லாம் நிகழும் நிகழ்வுகள் நம்மைக் காட்டுமிராண்டிகளாகத் தான் காட்டுகின்றன.

பெண்களைச் சுமையாக நினைப்பது காலகாலமாக அவர்கள் மனதில் ஊறியிருக்கிறது. வரதட்சணை தரவேண்டுமே என்ற காரணத்துக்காகவே பெண் குழந்தையை மறுக்கிறார்கள். வேறு வீட்டுக்குப் போகிறவள் என்பதால் அவளுக்கு படிப்பு மறுக்கப்படுகிறது. கிராமங்களில் அதிக உடலுழைப்பு தேவைப்படுகிற வேலைகளுக்குப் பெண் லாயக்கற்றவள் என்பதாலேயே அவளது பிறப்பு நிராகரிக்கப்படுகிறது. அப்படியே மீறி பிறந்தாலும் கள்ளிப்பாலுக்கும் நெல்மணிக்கும் அவர்கள் தப்புவதில்லை.

படிக்காதவர்கள் என்றில்லை, இந்த விஷயத்தில் படித்தவர்களின் மனநிலையும் பாமரத்தனமாகத் தான் இருக்கிறது. ஸ்கேன் செய்யும் போது கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைச் சொல்லக்கூடாது என்று அரசாங்கம் தடை விதித்தாலும் அதையும் மீறி கருக்கலைப்புகள் நடக்கத்தான் செய்கின்றன. ஆண்களை விட பெண்கள் தான் பெண் குழந்தை வேண்டாம் என்கின்றனர். பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாகிற நிலை இங்கு மட்டுமே நடக்கிறது. பெற்ற தாயே தன் பெண் குழந்தையைக் கொன்ற கொடூரத்தைச் செய்தியாக தினசரிகளில் படிக்கின்றோம். குழந்தையைப் பெற்றுக் கொள்வதும், பெற்றுக் கொல்வதும் தங்கள் தனிப்பட்ட உரிமை என்ற சிலரது நினைப்பு இன்று ஒட்டுமொத்த சமூகத்தையே பாதித்திருக்கிறது.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2016

சிகரமே சிம்மாசனம்…
பெண் குழந்தைகள்
முயன்றேன் வென்றேன்….
காந்தியடிகளின் ஆன்மீக வழிநெறிகள்
அதிசய மாற்றத்தின் ரகசியம்
நம்மை முதுமையாக்கும் உணவுகள்
பிரச்சனை…
வலிகளைத் தாண்டிய வரலாறு
விரும்பிய தருணங்களைத் திரும்பிப் பார்க்கிறேன்
வெற்றி உங்கள் கையில்….
எண்ணத்துப்பூச்சி…
பருவத்தே பயிர் செய்…
சர்வதேச அகிம்சை தினம்
தன்னம்பிக்கை மேடை
மனதின் உயர்வே! மனிதனின் உயர்வு!
உள்ளத்தோடு உள்ளம்