Home » Articles » குவாண்டம் கம்ப்யூட்டர்

 
குவாண்டம் கம்ப்யூட்டர்


விக்ரன் ஜெ
Author:

கேயாஸ்தியரி, கண்டக்டிவிட்டி, சூப்பர் கண்டக்டிவிட்டி வரிசையில் அதிவேகமான தொழில்நுட்பம்

இந்த உலகம் நாம் நினைப்பதைவிட விசித்திரமானது மட்டுமல்ல, நம்மால் நினைக்க முடியாததைவிட விசித்திரமானது என்று குவாண்டம் இயக்கவியல் (Quantum Machanics) பற்றி ஜே.பி.எஸ். ஹால்டேன் என்ற உயிரியலாளர் கூறியுள்ளார்.

குவாண்டம் இயக்கவியல் என்பது அணுக்களுக்கு உள்ளே என்ன நிகழ்கிறது என்பதைப் பற்றி செய்யப்படும் இயற்பியல் ஆய்வு.

குவாண்டம் கணினியைப் பற்றி பார்ப்பதற்கு முன் தற்போதுள்ள வழக்கமான கணினிகள் எப்படி இயங்குகின்றன என்பதைப் பார்ப்போம்…

இன்றைய வழக்கமான கணினிகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அடிப்படைக் கட்டுமானமான ‘பிட்’ (Bit) எனப்படும் பைனரி டிஜிட் (Binary Digit, அதாவது Bit) மூலம்தான் இயங்குகிறது.

இரு எண்ணியல் முறையில் ‘பிட்’ என்பது 0,1 ஆகிய இரண்டு எண் மதிப்புகளில் ஒன்றையே கொண்டிருக்கும். இந்த பிட்டுகளால்தான் கம்ப்பூட்டர் இயங்குகிறது.

குவாண்டம் கம்ப்யூட்டரில் இந்த இரண்டு பிட்டுடன் மூன்றாவதாக ஒரு பிட் இருக்கும். அந்த மூன்றாவது பிட்டுதான் பல அதிசயங்களை செய்யப்போகிறது.

குவாண்டம் உலகில், அதாவது அணுக்களுக்கு உள்ளே துகள்கள் ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் இருக்க முடியும். இதற்கு இருநிலை இருப்பு ( super position) என்று பெயர்.

இந்த இருநிலை இருப்பு என்றபண்பின்படி குவாண்டம் பிட் ஒரே சமயத்தில் பல மதிப்புகளைக் கொண்டிருக்கும். இந்த குவாண்டம் பிட் சுருக்கமாக க்யூபிட் (Qubit) என்று அழைக்கப்படுகிறது.

ஆக, இந்த க்யூபிட்டை உபயோகித்து புரோகிராம் எழுதினால் அந்த கம்ப்யூட்டர் ஒரே நேரத்தில் போடும் கணக்குகள் ஏராளம். அதாவது, ஒரு 20 க்யூபிட் உபயோகித்து ஒரு 10 லட்சம் கணக்குகளை ஒரே நேரத்தில் போடலாம். தற்போதுள்ள வழக்கமான கணினிகள் இந்த கணக்குகளைப் போட பல மாதங்கள் கூட ஆகலாம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2016

வழிகாட்டி…
என் பள்ளி
முழுமையின் முக்கியத்துவம்
நிர்வாக மேலாண்மைக்கு சமயோசித அறிவு அவசியமா…?
உண்மையாய் செயல்படு நன்மையாய் வாழ்ந்திடு
சிகரமே சிம்மாசனம்…
வெற்றி உங்கள் கையில்
பாடம் சொல்லும் பறவைகள்
எப்படி ஜெயித்தார்கள்?
தன்னம்பிக்கை
குவாண்டம் கம்ப்யூட்டர்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்