Home » Articles » என் பள்ளி

 
என் பள்ளி


ஆசிரியர் குழு
Author:

அ. சுப்பிரமணியம்,

பி.ஏசி, எம்.ஏ, எம்.எட், எம்ஃபில், டி.ஏ.பி. ஜி.சி.டி.இ

மாவட்டக்கல்வி அலுவலர் (ஓய்வு)

நாமக்கல்.

கொங்கு மண்டலம் புகழ் காஞ்சிக்கூவல் நாட்டின் நடுவூராய்த் திகழும் கூவலூரில் ஏழை மாணாக்கர் விடுதியோடு அண்ணல் மறைந்த ஆண்டு நினைவாக, சாந்தமூர்த்தியின் சத்தியம் அன்பு மார்க்கமுடன், மாந்தருக்குள் சேவை செய்யும் வாழ்வினையும் புகட்டிடும் பெரு நோக்கத்துடன், 02-06-1948 இல் எம்பள்ளி உருவாகியது. காந்தீயச் செம்மல்     K.K சுப்பண்ணகவுண்டர், அவர் திருமகன் முன்னாள் மத்திய அமைச்சர் K.S. இராமசாமி முன்னின்ற நிர்வாகத்தில் வைர விழா நடைபோட வரும் பள்ளியே “”கூவலூர் காந்தி கல்வி நிலைய மேனிலைப் பள்ளி.”

1950 – 1962 கால கட்டத்தில் கோபியைச் சுற்றி 10 கி.மீ சுற்றளவில் பள்ளிகள் இல்லாத சூழ்நிலையில் எம்மைப் போன்ற மாணவர் பெற்ற தவப்பயனாக 60 ஏக்கர் நிலக் கொடையில் ஆரம்பமானது.

இப்பள்ளியால் எம் போன்று பல ஆயிர மாணவர்கள் பெற்ற பயன் சொல்லிமாளாது. காலை வழிபாட்டுடன் சிவபுராணமும், வார வழிபாட்டில் ஆன்மீக போதனையும், ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி உள்ளிட்ட விழாக்களில் தக்களியில் நூல் நூற்றலும், தியானப் பயிற்சியும், தேசியப் புகழ் பெற்ற சான்றோர் பேருரைகளும் குறிப்பாக எம்மை வாழ்வில் சைவ உணவு மன உறுதியையும், ஒப்பற்ற நல் பண்பாட்டையும் வளர்த்தன.

பள்ளிக்கு வருகை தரும் பெரியோர்களில் திரு. காமராஜர், சி.எஸ், கி.வ.ஜ, வாரியார், நெ.து. சுந்தரவடிவேலு, ம.ரா.போ. குருசாமி, க.கு. கோதண்ட ராமன், சாந்தலிங்க அடிகள் ஆகியோர் ஆற்றிய பேருரைகள் கல்வியொடு நல்ல ஒழுக்க ஈடுபாட்டை வளர்க்க உதவின.

ஈராண்டுகள் எமக்குத் தலைமை ஆசிரியராய் வழிகாட்டிய எளிய தோற்றமுடன் பள்ளிக்கு நடந்தே வரும் கதர்ஜிப்பா, கோவண வேட்டி, குடை, குடுமி சகிதமாய் மாணவருடன்  வரும் O.S. துரைசாமி அய்யர் அவர்களின் மிடுக்கும் கண்டிப்பும் இன்றைய ஆசிரியர்க்கு முன் மாதிரி.

அடுத்து 4 ஆண்டுகள் தலைமை ஆசிரியர் திரு S.V. வெங்கடரமணன் கற்பித்த கணிதம் எமக்கு சிறப்புப் பாடமாகவும், இளநிலைப் பட்ட பாடமாகவும் கணிதத்தைப் பயிலவும், எமது ஆசிரியப் பணியில் சிறந்த கணிதம் போதிக்கக் கூடிய திறன் பெறவும் பெரிதும் உதவின. அவர் கற்பித்த ஆங்கிலப் பாடமும், இலக்கணமும் (Formal Grammar) ஆங்கில முதுகலைப் பட்டம் பெறவும், P.G. ஆசிரியராக மேல்நிலையில் முத்திரைப் பதிக்கவும் பல வழிகளில் முன் மாதிரிப் பணியாற்ற பேருதவி செய்ததை எப்படி மறக்க முடியும்.

9, 10 வகுப்புகளில் தமிழ்  போதித்த “அண்ணாமலை’ ஆசிரியர் பாடல் பாடி நடத்தி முடித்தவுடன் மாணவர் அனைவரும் மனப்பாடமாக ஒப்பித்து விடுவர். இன்றும் அவர் போதித்த தமிழ் பாடல்கள் நினைவில் வெளி வருகின்றன.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2015

என் பள்ளி
விவேகம் விடியலைத் தருகிறது
திட்டமிட்டு
கல்வியும் கலையும்
உங்களுக்காக சில உண்மைகள்
நட்பின் நெருக்கத்தை பேணி காப்பது எப்படி?
எதிர் மறை மனிதர்கள்
தூக்கமும் ஊக்கமும்
வாழ்வாதாரத்தைப் பெருக்கு…! வாழ்க்கைத் தரத்தை உயர்த்து…!!
இளைய தலைமுறை பற்றி இது விமர்சனமல்ல, ஆதங்கம்..
கன்னத்தின் அழியாத அழகு மச்சங்களே பேச்சுக்கலை
அடிப்படை உயிர்க்காப்பு வழிமுறைகள் (Basic Life Support)
எல்லை தாண்டு
நுனிப்புல்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்