Home » Articles » கல்வியும் கலையும்

 
கல்வியும் கலையும்


மனோகரன் பி.கே
Author:

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக விளங்கிய மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 11ம் தேதி, 2008 முதல்  தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது.

கல்வித்துறைக்கு இவர் ஆற்றிய பணியை நினைவு கூறும் வகையில் இவரது பிறந்த நாள் ‘தேசிய கல்வி தினமாக’ கொண்டாடப்படுகிறது.  அபுல்கலாம் ஆசாத் 1888ம் ஆண்டு அரேபியாவில் உள்ள மெக்கா நகரில் பிறந்தார்.

சிறந்த இந்திய தேசியவாதியாகவும், சுதந்திரப் போராட்ட தியாகியாகவும் திகழ்ந்தவர் ஆசாத். 1992ம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான ‘பாரத் ரத்னா’ அவரது மறைவுக்குப் பின் வழங்கப்பட்டது.  நமது நாட்டின் கல்வித்துறையை வடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு.

சாகித்திய அகாடமி (1954), லலித்கலா அகாடமி, கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார்.  கல்விக்கான மத்திய ஆலோசனை குழு வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார்.

பெண்கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார்.  பல்கலைக்கழகங்களுக்கு கல்வித்துறைசார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார்.  வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார்.  ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்றகருத்தினைக் கொண்டிருந்தார்.  1951ல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து மும்பை, சென்னை, கான்பூர், தில்லி ஆகிய நகரங்களிலும் ஐஐடிக்கள் அமைக்கப்பட்டன.

ஆசாத் அவர்கள்தான் தேசிய கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர்.  ‘National Education Policy’ எனப்படும் தேசிய கல்வி கொள்கைக்கு  (1986) இதுதான் அடிப்படையாக விளங்கியது.  அனைத்து மாணவர்களுக்கும் சாதி, மத பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும் என்று ஆசாத் வலியுறுத்தினார்.  10’2’3  என்றபொதுவான கல்வி முறைக்கு வித்திட்டவரும் இவர்தான்.

1905ல் வங்கப் பிரிவினையின் போது ஆசாத் அரசியலில் நுழைந்தார்.  1920ல் திலகரையும், மகாத்மா காந்தியையும் சந்தித்தார்.  இச்சந்திப்பு அவரது வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது.  இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  அதற்கு பிறகு இந்தியா சுதந்திரத்தை வெல்கிறது (India Wins Freedom) என்றபுகழ்பெற்றநூலை எழுதினார்.  சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத் சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார்.  தனது எழுபதாவது வயதில் 1958ம் ஆண்டில் இவர் காலமானார்.

‘நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை, ஆரம்பப் பள்ளிகளில் உள்ளது’ என்று குறிப்பிட்ட அபுல்கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த தினத்தை தேசிய கல்வி தினமாகக் கொண்டாடும் வேளையில் கல்வி மற்றும் கலைச் செல்வத்தின் சிறப்புகள் குறித்து சிந்திப்போம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2015

என் பள்ளி
விவேகம் விடியலைத் தருகிறது
திட்டமிட்டு
கல்வியும் கலையும்
உங்களுக்காக சில உண்மைகள்
நட்பின் நெருக்கத்தை பேணி காப்பது எப்படி?
எதிர் மறை மனிதர்கள்
தூக்கமும் ஊக்கமும்
வாழ்வாதாரத்தைப் பெருக்கு…! வாழ்க்கைத் தரத்தை உயர்த்து…!!
இளைய தலைமுறை பற்றி இது விமர்சனமல்ல, ஆதங்கம்..
கன்னத்தின் அழியாத அழகு மச்சங்களே பேச்சுக்கலை
அடிப்படை உயிர்க்காப்பு வழிமுறைகள் (Basic Life Support)
எல்லை தாண்டு
நுனிப்புல்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்