Home » Articles » காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கும் யானைகள்

 
காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கும் யானைகள்


ஆசிரியர் குழு
Author:

அ.செல்வராஜீ

ஆராய்ச்சியாளர்

வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

மேட்டுப்பாளையம்  641301

போன் : 9626997808

மின் அஞ்சல் : selva1004@gmail.com

அழியும் பேருயிரான யானைகள் சுற்றுச்சூழலில் முக்கிய பங்கு வகிக்கிறது. 19-ம் நூற்றாண்டில் 50 விழுக்காடாக இருந்த காடுகள் இப்போது சுருங்கி 21 விழுக்காடாக குறைந்துவிட்டது. இந்த 21-ம் நூற்றாண்டில் உலகமயமாதல், நகரமயமாதல், தொழில் வளர்ச்சி, மக்கள்தொகைப்பெருக்கம், காடுகளை அழித்து விவசாய நிலமாகவும் கட்டிடங்கள் கட்டவும் பயன்படுத்தல் போன்றவற்றால் யானைகளின் வாழ்விடங்கள் குறைந்து அவை பெரும் பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. தற்போதைய கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மட்டும் யானைகளின் எண்ணிக்கை 27,000 முதல் 31,000 வரை உள்ளது.

நிலவாழ் உயிரினங்களில் யானைதான் உருவத்தில் மிகப்பெரியது. நாம் ஏன் யானைகளைப் பாதுகாக்க வேண்டும்? அதன் முக்கியத்துவம் என்ன? என்ற ஒரு கேள்வி நம்மில் பலபேருக்கு உண்டு. யானைகள் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினம். ஏன் என்றால், அவை காட்டில் பல உயிரினங்கள் உயிர்வாழ, காரணமாக இருக்கின்றன.

யானைகள் தொலைதூரம் நடப்பவை. அவை நாளொன்றிக்கு சராசரியாக 25 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள காட்டை நடந்து கடப்பவை. யானைகள் நடக்கும் இடமெல்லாம் ஒரு சாலையைப்போல் மாறி விடுகிறது. இன்று நாம் வனப்பகுதியில் பயன்படுத்தும் சாலைகள் பல காட்டில் நாம் குடியேறும் முன்பு யானைகள் பயன்படுத்திய பாதைகள்தான்.

காட்டில் யானைகள் நடப்பதால் உருவாகும் எல்லா வழித்தடங்களும் ஏதோ ஒரு நீர்நிலையை நோக்கியே செல்லும். கோடையில் நீரின்றித்தவிக்கும் மற்ற விலங்குகள் இந்த யானைப்பாதை வழியே சென்று நீர் இருப்பைக் கண்டறிகின்றன. காட்டில் திக்குத்தெரியாமல் சிக்கிக்கொள்ளும் மனிதர்களுக்கும் பல நேரங்களில் இப்பாதை பயன்படுகிறது.

நம் இந்திய திருநாட்டில் பெரும்பாலான காடுகள் இலையுதிர் மற்றும் முட்புதர்க்காடுகளாகும். ஆனால் அவற்றில் தான் பல அரிய உயிரினங்கள் காணப்படுகின்றன. ஒரு முட்புதர்காட்டில் புலி வாழ வேண்டுமென்றால் அக்காட்டில் யானைகள் இருக்க வேண்டும் என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. புலி போன்ற ஊண் உண்ணிகளுக்கு உணவாகும் மான் போன்ற தாவர உண்ணிகள் முட்புதர்க்காட்டில் வாழ வேண்டுமென்றால் அவை தடங்கிலின்றி நடமாடப் பாதைகள் வேண்டும்.

யானைகள் நாளொன்றுக்கு சராசரியாக 16 முறை சாணமிடுகின்றன. இந்த சாணம் பல்வேறு வகைகளில் பிற உயிரினங்களுக்குப் பயன்படுகின்றது. சாணம் நீர்நிலைகளற்ற தரைப்பரப்பில் விழும் போது அதனை நாடி பட்டாம்பூச்சிகள் வருகின்றன, என்பது வியப்பிற்குரிய ஒன்று. யானைக்கும் பட்டாம்பூச்சிக்கும் உறவு இருக்கிறது என்பது வியப்புதானே! குளிர்ந்த அதிகாலைப் பொழுதுகளில் புதிதாக விழுந்த இளஞ்சூட்டு யானைச்சாணத்தில் பட்டாம்பூச்சிகள் அமர்ந்து வெதுவெதுப்பைப் பெறுகின்றன. இதுதவிர சாணத்தில் சில தாது உப்புகள் காணப்படுகின்றன. இத்தாது உப்புகளை ஆண் வண்ணத்துப்பூச்சிகள் அதிக அளவில் உறிஞ்சுகின்றன. அவற்றின் இனப்பெருக்கத்திற்கு இத்தாதுக்கள் தேவைப்படுகின்றன.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2015

என் பள்ளி
உலகின் முதல் திருநங்கை செய்திவாசிப்பாளர்
இளைய தலைமுறை எழுச்சி பெற
காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கும் யானைகள்
பாராட்டுகள் – பாராட்டு எல்லோருக்கும் பிடிக்கும்
வெற்றி தரும் விஜய தசமி
இரத்தசோகை
இசையும் இசைவும்
புத்தக சவால்
குழுநிலவு
வெற்றி பயணங்கள்
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!
காலப்பேனா ஞாபகக் பேழையில் செருகட்டும்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்
வேலையை நேசி… மகிழ்ச்சியை சுவாசி…