Home » Articles » புத்தக சவால்

 
புத்தக சவால்


மித்ரன் ஸ்ரீராம்
Author:

வாழ்வில் வெற்றி காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

“அது என்ன சவால்” என்று தொலைபேசியை தொல்லைப் பேசியாக மாற்றிய இனிய நெஞ்சங்களே !

சவால்களைச் சந்திக்கலாமா?

உங்களை தேர்ந்த “புத்தகப்புழுவில்”  இருந்து “புத்தகத் திமிங்கலமாக” மாற்றப்போகும் சவால்களைச் சந்திக்கலாமா?

52 வாரங்கள் – 52 புத்தகங்கள் :-

ஒரு வாரத்துக்கு ஒரு புத்தகம் என்று 52 வாரத்துக்கு 52 புத்தகங்களை நீங்கள் படிக்க வேண்டும்.

உங்களுக்கு விருப்பமான துறையில் (Self Development, Fiction, Horror, Detective Novel போன்று) புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து படியுங்கள்.

இது உங்கள் படிக்கும் வேகத்தையும் தூண்டும்.

12 மாதங்கள் – 12 புத்தகங்கள் :-

52 என்பது பெரிய, கடினமான இலக்கு என்று நினைத்தால், மாதம் ஒரு புத்தகம் என்று வருடம் 12 புத்தகங்களைப் படியுங்கள்.

காலத்தை வெல்லும் சவால் :-

சாண்டில்யன், கண்ணதாசன், பாரதி, பாரதிதாசன், கல்கி போன்று காலத்தைக் கடந்தும் சாதனை படைத்த ஆசிரியர்களின் நூல்களைத் தேர்ந்தெடுங்கள். ஒரு வருடத்துக்குள் அந்த ஆசிரியரின் அணைத்து நூல்களும் படித்துவிடுவது என்பது இலக்கு.

5 புத்தக சவால் :-

மற்ற மூன்று சவால்களைப் போல அல்ல இது!. 5 தனித்தனி துறை சார்ந்த புத்தகம் – ஒரு மாதத்துக்குள் படித்து முடிக்க வேண்டும்.  அது மட்டுமல்ல, ஒரு மணி நேரத்தில் அந்த 5 புத்தகத்தின் விமரிசனங்களை 100 வார்த்தைகளுக்கு மிகாமல் – ஒரு மணி நேரத்தில் எழுத வேண்டும்.

(இந்த சவாலின் நோக்கம், உங்களை அருகில் உள்ள நூலகத்துக்குள் செல்ல வைப்பது)

நண்பர்களுக்கு சவால் :-

உங்கள் Social Media நண்பர்களுக்கு, உங்கள் விருப்பமான புத்தகங்கள் 10 ன் பட்டியலையும்,  ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தையும் தந்து – அவர்கள் படித்து முடித்தவுடன் – அந்த சவாலை அவர்கள் அவர்களது நண்பர்களுக்கு எடுத்து செல்வது.

சவாலில் வெற்றி பெறும் உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் ஒரு புத்தகத்தைப் பரிசாக கொடுங்கள்.

A- Z சவால் :-

இந்த சவாலின் Rule  மிகவும் எளிது.

A  என்று தொடங்கும் தலைப்பு உள்ள புத்தகத்தை ஒரு வாரத்தில் படித்து முடிக்க வேண்டும்.

2 வது வாரம் B என்று தொடங்கும் தலைப்பு.  இப்படியே 26 வாரங்களில் 26 புத்தகங்களை படித்து முடித்திருக்க வேண்டும்.

ஆறு மனமே ஆறு – ஆண்டவன் கட்டளை ஆறு !

ஆண்டவன் கட்டளை மட்டும் அல்ல, அறிஞர்களின் கட்டளையும் ஆறு தான் !

அவை தான் இங்கே “சவால்கள்’ என்ற போர்வையில் உங்களை சந்திக்க வந்திருக்கிறது !

ஒரு நீண்ட நெடிய ஓட்டப்பந்தயத்தில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று 3 பேருக்கு மட்டுமே மேடையில் இடம் !  ஆனால், களத்தில் எத்தனை கால்கள்.  அனைவரும் பாராட்டுதற்கு உரியவர்களே.

இந்த சவால்கள் பக்கம் நான் வரவில்லை – ஆனால், புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் எனக்கு இருக்கிறது !  எளிமையான வழிகள் ஏதேனும் இருந்தால் ஏற்றுக்கொள்கிறேன் – என்று சிலரது மனம் சொல்லும் குரல் எனக்கு கேட்கிறது !

நண்பர்களே, இதோ உங்களுக்கான எளிய முறைகள் :-

  • நீங்கள் பிறந்த வருடத்தில் வெளி வந்த ஒரு புத்தகம்.
  • உங்கள் Initial – தலைப்பில் உள்ள ஒரு புத்தகம்.
  • வண்ணங்களின் பெயரை – தலைப்பில் கொண்ட ஒரு புத்தகம்.
  • ஒரு பெயரை (Name ) –  தலைப்பில் கொண்ட ஒரு புத்தகம்.
  • ஒரு என்னை (Number ) –  தலைப்பில் கொண்ட ஒரு புத்தகம்.
  • உங்கள் அபிமான நிறம் (Colour ) –  தலைப்பில் கொண்ட ஒரு புத்தகம்.
  • மனிதர்களே இல்லாத அம்சங்கள் கொண்ட ஒரு புத்தகம்.
  • ஒரு பாடலின் வரி, அல்லது திரைப்படத்தின் தலைப்பை – தலைப்பாக கொண்ட ஒரு புத்தகம்.

இதில் அனைத்தும், அல்லது ஏதாவது ஒன்றிரண்டு – என்று தேர்ந்தெடுத்து, உங்கள் படிக்கும் ஆவலை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

புத்தகங்கள் படிப்பதை “கடமையாக’ பார்க்காமல் “கலையாக” பாவித்து, மனம் ஒன்றி இந்த சவால்களை செயல் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்.

எத்தனையோ எழுத்தாளர்கள் விட்டுச் சென்ற பதிவுகள் – உங்களுக்கும், உங்கள் சந்ததிக்கும் சரித்திரமாக இருக்கட்டும் !

Cable TV Subscription உங்கள் மாதாந்திர செலவில் நீங்காத இடம் பிடித்திருப்பதைப் போலே, Magazine Subscription- ம் இனிமேல் இடம் பிடிக்கட்டும்.

உங்கள் வாழ்க்கை அர்த்தப்படட்டும்.

அடுத்த மாதம் !

எதிர் மறை  (Negative People) மனிதர்களிடம் இருந்து உங்களை எப்படி காத்துக்கொள்வது – அவர்களை எப்படி அணுகுவது என்று அறிந்து கொள்ளவோம்!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2015

என் பள்ளி
உலகின் முதல் திருநங்கை செய்திவாசிப்பாளர்
இளைய தலைமுறை எழுச்சி பெற
காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கும் யானைகள்
பாராட்டுகள் – பாராட்டு எல்லோருக்கும் பிடிக்கும்
வெற்றி தரும் விஜய தசமி
இரத்தசோகை
இசையும் இசைவும்
புத்தக சவால்
குழுநிலவு
வெற்றி பயணங்கள்
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!
காலப்பேனா ஞாபகக் பேழையில் செருகட்டும்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்
வேலையை நேசி… மகிழ்ச்சியை சுவாசி…