Home » Articles » காலக் கணித மாமேதை

 
காலக் கணித மாமேதை


முனிராஜ் G
Author:

வெற்றிப் பாதையில் பயணப்படும் ஒவ்வொருவரும் தனக்கென்று ஓரு பாதையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அப்பாதையில் பயணப்படும்பொழுது பல்வேறு இடையூறுகள் தடைகற்கள் ஏற்படலாம். அவற்றைத் தாண்டிப் பயணித்தால் மட்டுமேதான் வெற்றி கிடைக்கும். அவ்வாறுதான் பிறந்த நாட்டிற்கும், வீட்டிற்கும் என்னால் ஆன ஏதேனும் ஒரு சாதனையை நிகழ்த்தி அதன்மூலம் என்நாட்டையே பெருமை அடைய வைக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் கால கணக்கீடு முறையைச் செய்து வெற்றி பெற்றவர். கோவையைச் சேர்ந்த முனிராஜ் வயது 51.

சென்றவாரம் ஏதேனும் ஒருநாளை நம்மிடம் கேட்டால் நம்மிடம் நிச்சயம் பதில் வராது. ஆனால் அடுத்த 100 கோடி ஆண்டுகளுக்கு ஒருவர் சரியான கால கணக்கை உருவாக்கியிருக்கிறார். இது ஒரு சாதாரண காரியம் அல்ல. மொத்த பண்டையும் தன் மனக்கணக்கில் வைத்து உடனுக்குடன் நாளை சொல்லும் வல்லமை பெற்றவர்.

நான் பிறந்தது சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை பெற்றோர் திரு.கணேசன் – சரஸ்வதி. அப்பா சொந்தமாக பிசினஸ் செய்து வந்தார். என் உடன் பிறந்தவர்கள் மொத்தம் ஆறுபேர். எனது சிறிய வயதில் தந்தை இறந்து விட்டார். குடும்பத்தின் பொறுப்பு எங்கள் மீது விழுந்தது. இதனால் படிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. எனினும் என் தாயார் எங்களை படிக்க வைக்க ஆசைப்பட்டார்கள்.

அவர்களின் வார்த்தைக்கு அடிபணிந்து பத்தாம் வகுப்பு வரை மட்டுமே என்னால் படிக்க முடிந்தது. நாளுக்கு நாள் எங்கள் குடும்பம் பொருளாதாரத்தால் பின்தங்கியே சென்றது. இதனால் வேலைக்கு சென்றால் மட்டும்தான் குடும்பத்தை வழி நடத்த முடியும் என்ற நிலையில் இருந்தோம் என்பதால் வேலைக்கு வந்தேன். அங்கு பரமேஸ்வரி அச்சகத்தில் பிழைத்திருத்தங்கள் செய்யும் பணியில் சேர்ந்தேன்.

ஒருமுறை அச்சகத்தில் வேலைப்பார்த்து கொண்டிருந்தபொழுது ஒரு பத்திரிகையில் நாள் மாறியிருந்ததை என்னால் அறியமுடிந்தது. அதை சரிப்பார்க்க அப்பொழுது எந்த ஒரு தொழிற்நுட்பமும் இல்லை. இதனால் என் மனக்கணக்கில் நாட்களைக் கணக்கிட்டேன். நான் சொல்லியது மிகச் சரியாக இருந்தது. இதைப்பார்த்து என்னுடன் பணியாற்றியவர்கள் என்னை மிகுந்து பாராட்டினார்கள்.

மற்றவர்கள் பாராட்டும் பொழுதுதான் தன்னுடைய சாதனை எத்தகையது என்று நமக்கே புரியும். அப்பொழுது தான் எனக்குள் இருந்த திறமை உதயமானது. எப்பொழுதும் நாட்களை கணக்கிட்டு கொண்டேதான் இருப்பேன்.

சிறுகசிறுக பழகிய இந்த முயற்சி இன்று நாளை உலகம் இருக்கும் வரையில் காலண்ரை கண்டுபிடிக்க முடிந்தது. என் ஆராய்ச்சியில் பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளேன். லீப் ஆண்டைத்தவிர, ஜனவரி, அக்டோபர் மாதங்களில் தேதியும் கிழமையும் ஒன்றாகவே அமைந்திருக்கும். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், டிசம்பர் மாதத்திலும் ஏப்ரல் ஜீலை மாதத்திலும் 31 ஆம் தேதி நீங்கலாக கிழமை ஒன்றாகவே இருக்கும்.

இப்படி பல உண்மைகளைக் கண்டறிந்து அதன் முலம் நூறு ஆயிரம் கோடி ஆண்டுக்கான காலண்டரைத் தயாரித்தேன். இதைப்பயன்படுத்தி கம்ப்யூடரை விட மிக வேகமாக தேதி கிழமையைக் கண்டறிந்து விடலாம். அது மட்டுமல்லாமல் பிறந்த தேதியும், பிறந்த ஆண்டையும் சொல்லிவிடலாம். மாதத்தையும் வைத்து அவர் எந்தக் கிழமை பிறந்தார். இனிவரும் ஒவ்வொரு வருடமும் எந்தக்கிழமை அவருக்கு பிறந்தநாள் வரும் என்பதை ஒரு நொடிப்பொழுதில் கண்டுபிடித்துவிடலாம்.

இதுவரை 400 ஆண்டு கால காலண்டரே கின்னஸ் சாதனையாக இருந்து வருகிறது. ஆனால் நான் 100 கோடி வருடத்திற்கும் மேல் கண்டுபிடித்திருக்கிறேன். என்னுடைய இந்த முயற்சி கின்னஸில் இடம் பெறவேண்டும் என்பதை இலட்சியமாக கொண்டிருக்கிறேன்.

சாதிக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்தோடு தொடங்கிய, இந்த இலட்சிய முயற்சியில் வெற்றி பெற்று விட்டேன். என்னுடைய வெற்றியை நாடறிந்து எனக்கு பல வழிகளில் ஊக்கமும் உந்துதலும் கொடுக்க வேண்டுகிறேன்.

என்னுடைய இந்த சாதனைக்கு மிகுந்த உறுதுணையாக இருந்து வருவது என் தாயார் மற்றும் எனது மனைவி மலர்க்கொடி, என் இரண்டு மகள்கள் தாரணி மற்றும் சரண்யா மற்றும் எனது சகோதர்கள் ஆகியோர்.

தன்னுடைய உழைப்பின் மூலம் எவரும் எளிதில் செய்ய முடியாத சாதனையைச் செய்து இன்று ஊருக்கும், நாளை நாட்டிற்கும்  பெருமை தேடித் தந்திருக்கும் முனிராஜ் அவர்களை தன்னம்பிக்கை வாழ்த்துகிறது. அரசாங்கமும், மற்றதனியார் அமைப்புகளும் இவரை சாதனையாளராக இலாகா மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை செய்ய வேண்டுகிறோம்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2015

என் பள்ளி
மனித வாசத்திற்கு அஞ்சும் பாம்புகள்
காலக் கணித மாமேதை
இரவா பகலா?
எழுந்து நட! சிகரம் தொட!
விடுதலை நெருப்பில் பூத்த தியாக தீபங்கள்
தாய்ப்பாலின் மகத்துவம்
வெற்றி உங்கள் கையில் 20 நேரம் இல்லையே…!
தானியங்கள் உதிராமல் இருக்க காரணமானதும் இரையை தேடி அலைந்த மனிதனை விவசாயம் செய்ய வழிவகுத்ததுமான ஜீன் (Gene) கண்டுபிடிப்பு
குணம் நாடி… குற்றம் நாடி…
தூண்டில்
இடைவெளியை பூஜ்யமாக்கும்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்