Home » Articles » கரிம உணவுகள் (ஆர்கானிக் உணவுகள்)

 
கரிம உணவுகள் (ஆர்கானிக் உணவுகள்)


இராஜேந்திரன் க
Author:

கரிம உணவுகள் என்பது பூச்சிக்கொல்லி மருந்துகள், எஞ்சிய கழிவுகள், கதிர்வீச்சுகள் மற்றும் செயற்கை முறையில் தயாரிக்கப்படுவதைத் தவிர்த்து, இயற்கையான சூழ்நிலையில் பயிரிடப்பட்டு, உற்பத்தி செய்து, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளாகும்.

உணவுகளுக்கும், உணவு வகைகளுக்கும், கரிம வகை உணவுகளுக்கும் உள்ள வித்தியாசங்கள்

இயற்கையான உணவுகள் என்பது, செயற்கையான சுவைகள், செயற்கையான வண்ணங்களைத் தவிர்ப்பவை. இயற்கையான உணவுகள் பெரும்பாலும் செயற்கையான முறையிலேயே பதப்படுத்தப்படுகின்றன.

கரிம உணவுகள் என்பது, பயிரிடப்படுதல், உற்பத்தி செய்தல் மற்றும் பதப்படுத்துதல் என அனைத்துமே இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் எந்தவிதமான செயற்கை முறையும், ரசாயன முறையும் பயன்படுத்தப்படுவதில்லை.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் கரிம உணவுகள்

இந்தியாவில் 5.2 மில்லியன் நிலப்பரப்பு கரிம வகை உணவு விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. இதில் 0.5 மில்லியன் நிலப்பரப்பு மட்டுமே அங்கீகாரம் பெற்றுள்ளது. சராசரியாக 6,00,000 விவசாயிகள், கரிம வகை உணவு விவசாயங்களில் ஈடுபட்டுள்ளனர்.

சில வகை உணவுகளாவன

தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், மசாலாப் பொருள்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், கொட்டை வகைகள், சர்க்கரை, தேன், பால் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருள்கள் மற்றும் மற்ற விலங்கு வகை உணவுகள்.

குழந்தைகளுக்குக் குறிப்பாக, தவழும் குழந்தைகள் மற்றும் குறுநடை போடும் குழந்தைகளுக்கென தனி வகையான கரிம உணவுகள் இந்தியாவில் நடைமுறையில் உள்ளன. அவையாவன,

தயிர் வகைகள், பிஸ்கட், பழ வகைகள், குழந்தைகளுக்கான நொறுக்குத் தின்பண்டங்கள், தாய்ப்பாலை நிறுத்தியவுடன் குழந்தைகளுக்குத் தேவைப்படும் சத்துள்ள உணவுப் பொருள்கள் என பலவகை உணவுப் பொருட்கள் உள்ளன.

கரிம வகை உணவுகள் கிடைக்கும் இடங்கள்

சூப்பர்மார்க்கெட், ஐந்துநட்சத்திரஹோட்டல்கள், மருத்துவமனைகள், ஆயுர்வேதமருத்துவமனைகள். நாம்வழக்கமாகவாங்கும்உணவுகளின்விலையைவிட, கரிமஉணவுகள் சற்று விலைமிக்கது. ஏனென்றால், கரிம உணவுகள் பயிரிடப்படும் பூச்சிக்கொல்லி மருந்து உபயோகிக்காத நிலங்களாக இருக்க வேண்டும். இதைத்தவிர்த்து, பதப்படுத்தப்படும் உணவுகளும்கெடாமல் இருக்கபயன்படுத்தப்படும் முறைகளும்வி லை மிக்கது.

கரிமஉணவில்அடங்கியசத்துக்கள்

கரிமஉணவில் உடலுக்கு நன்மைபயக்கும் பலவகைசத்துக்கள் அடங்கி உள்ளது. குறிப்பாக, உயிர் வெளியேற்ற எதிர்பொருள் (ஆன்டி-ஆக்ஸிடென்ட்), வைட்டமின்கள்ஏ, சி மற்றும் இ, மூளைவளர்ச்சிக்குத்தேவையானஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆல்பாலினோலியிக் அமிலங்கள், இரும்பு, புரதம், ஜிங்க், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியசத்துக்கள் அடங்கியுள்ளன என ஆய்வின் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

கரிம உணவுகளில் குறைந்த அளவு மட்டுமே நைட்ரேட் உள்ளதால், கருவில் இருக்கும் குழந்தைகள், இருதயநோய்கள், நியூரல் டியூப் குறைபாடு களிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. இதனைத்தவிர, குழந்தைகளுக்கு புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு மிகவும் குறைவு.

கரிம உணவுகளை உட்கொள்ளும் பாலூட்டும் தாய்மார்களுக்கு லினோலிக்அமிலம் அதிகமாக கிடைப்பதால், பிற்காலத்தில் புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்கள் வராமல் தடுக்கலாம்.

தீமைகள்

சில சமயங்களில் இந்த வகை கரிமஉணவுகள், நுண்ணுயிர் கிருமிகளால் பாதிக்கப்படலாம்.

கரிம உணவுகளின் தரத்தைக் கண்டறியும் முறை

இந்தியாவில் நேஷனல் புரோகிராம் உயிர்ம புரோட்டாக்கால் அமைப்பு 2000ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அமைப்பு, விவசாயிகள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களுக்கு கரிம உணவுகளின் உற்பத்தி, பதப்படுத்துதல், விற்பனை செய்தல் குறித்து, சிலவழி முறைகளை வகுத்துள்ளது.

இந்த வழிமுறைகளின்படி தயாரிக்கப்படும் அனைத்து கரிமஉணவுகளும், இந்திய ஆர்கானிக் முத்திரையைப் பெற்றிருக்கும்.

 இரண்டு வகைகளான சதவிகிதங்களில் (%) கரிமஉணவுகள் முத்திரை பதிக்கப்பட்டுள்ளன. இவைகள் யு.எஸ்.டி.ஏ.அமைப்பால்அங்கீகரிக்கப்பட்டுசதவிகிதப்படுத்தப்பட்டவைஆகும்.

 100% ஆர்கானிக் முத்திரை பதிக்கப்பட்ட உணவுகள் முழுவதுமான கரிம உணவுகளாகும்.70% ஆர்கானிக் முத்திரை பதிக்கப்பட்ட உணவுகள், சிலவகையான கரிம உணவுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை அல்ல.

தரமான கரிம உணவுகளைத் தயாரிக்கும் முறை

விவசாயம் செய்யப்படும் நிலப்பரப்பு குறைந்தது மூன்று வருடங்களாவது எந்தவகையான பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தாமல் இருக்கவேண்டும். விவசாயம் செய்யும்போது எந்தவகையான பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளையும் பயன்படுத்தாமல் இருக்கவேண்டும். வளர்ச்சியைத் தூண்டும் ஊசிகள், ஆன்டி-பயாடிக் மருந்து உபயோகிக்காமல் இருத்தல், கரிம உணவுப்பொருள்கள் பெறப்படுகின்ற விலங்குகளை இயற்கையான, தரமானமுறையில்வளர்த்தல், கரிமஉணவுகள், மனித உடல்நலத்திற்கு நன்மை அளிக்கக்கூடியவையா என்பதை ஆதாரபூர்வமாக விளக்குவதற்கு எவ்வித சான்றும் இல்லை. எதுவாக இருந்தாலும், கரிம உணவுகள் மனித உடல்நலத்திற்கு நன்மை அளிக்கக் கூடியவையே.

 

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2014

என் பள்ளி
நலமாக வாழ நயமான நல்பத்துக் கூற்றுகள்
தயாராகுதல்
கரிம உணவுகள் (ஆர்கானிக் உணவுகள்)
அகல் விளக்கு ஏற்றுவோம்
தகவல் பரிமாற்றம்
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் கேழ்வரகின் பங்கு…
விரக்தி வீழ்த்துகிறது விடா முயற்சி வெல்கிறது
உலகையே ஒரு குலுக்கு குலுக்கியது
வெற்றி வேண்டுமா? – 2
தொழில் திறனை வளர்ப்பது எப்படி?
சிரிப்பு
அச்சம் என்பது மடமையடா…
தகவல்கள் இங்கே! முடிவுகள் எங்கே?
அடுத்தவர் நலனில் அக்கறை அகில உலகமே உச்சரிக்கும் பெயரை!
தன்னம்பிக்கை மேடை
உள்ளதோடு உள்ளம்