Home » Articles » அகல் விளக்கு ஏற்றுவோம்

 
அகல் விளக்கு ஏற்றுவோம்


சிதம்பரம் ரவிச்சந்திரன்
Author:

உள்ளத்தில் நம்பிக்கையை உறுதியாக வைத்திருந்தால் வந்த நோயையும் உடலை விட்டு விரட்ட முடியும் என்று சில ஆய்வுகளின் முடிவுகள் சொல்கின்றன. இதேபோல விரக்தி அதிகமானால் கொஞ்சமாக இருக்கும் வியாதியும் கூட உடல் முழுதும் வியாபித்து சீக்கிரமே படுத்த படுக்கையாக்கிவிடும் என்றும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன. ராட்டர்டாம் பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவப்பள்ளியில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ள மற்றொரு விஷயம் இதய அறுவை செய்துகொண்ட நோயாளிகளில் தன்னம்பிக்கையை இழந்தவர்கள் சீக்கிரமே அவர்கள் மரணத்தை வாசலுக்கு கூப்பிட வேண்டியதாயிற்று. போர்க்கைதிகளுக்கு இடையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நம்பிக்கையிழந்தவர்கள் விரைவாக மரணமடைகிறார்கள் என்று கூறுகிறது.

ஒரு போர்க்கைதியுடைய கதை இவ்வாறு சொல்கிறது. “விதிவசத்தால் போர்க் கைதியாக்கப்பட்ட ஒரு கப்பற்படை வீரன் உற்சாகமும், உடல்நலமும், மற்றவர்களுக்கு உதவுபவனுமாக இருந்தான். படைத்தலைவருடைய வாக்குறுதி வேலை செய்தது. அவர் சொன்னது இதுதான். ‘நல்ல முறையில் எல்லோருடனும், நன்றாகப் பழகுபவர்களுக்கும், மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கும் விடுதலை சுலபமாகக் கிடைக்கும்” என்று சொல்லியிருந்தார். ஆனால் வருடங்கள் கடந்துபோயின. வாக்குறுதி பொய் என்று தெரிந்தது. ஒரு நாளைக்கும் விடுதலை கிடைக்காது என்பது தெளிவாகப் புரியத் தொடங்கியது அந்தக் கைதிக்கு. கப்பற்படைவீரன் ஏமாற்றத்தில் மூச்சுவிடாமல் தத்தளித்தான். சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டான். யாரிடமும் பேசுவது இல்லை. படுக்கையிலேயே பொழுது முழுவதும் கிடந்தான். சில வாரங்களுக்குள்ளாகவே அவன் இறந்துபோனான். இந்தச் சம்பவத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்த ஒரு டாக்டர் கூறினார். விடுதலை கிடைக்கும் என்று நம்பிக்கை அவனை உற்சாகமாகவும், உடல்நலத்தோடும் உலவ வைத்தது. அந்த நம்பிக்கை இல்லாமல் போனபோது, அவன் மனதளவிலும், உடலளவிலும் தளர்ந்து போனான். மரணத்திற்குத் தன்னை தந்தான்.

ஒரு உளவியல் அறிஞர் சொல்வது, ‘நம்பிக்கை, உறுதியான உள்ளம், குறிக்கோள் ஆகிய இவைகள் மாமருந்தாக உடல்நலத்தைக் காப்பாற்றும்’ என்று கூறுகிறார்கள்.

புகழ் பெற்ற மத அறிஞரான “மோர்கன்மோல்ட்மேன்’ தன் சொந்த அனுபவத்தை இவ்வாறு கூறுகிறார். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அவர் இரண்டாம் உலகப்போர் நடத்த காலத்தில், சிறைக்கைதியாக பல கான் சன்ட்ரேஷன் கேம்புகளிலும் இருக்க வேண்டி வந்தது. அங்கு நேரிட்ட அனுபவங்கள் துக்கத்தைப்பிழிந்து எடுப்பனவாக இருந்தன. நரகத்தின் மறுபதிப்பாக இருந்தது அந்த இடங்கள். சாப்பிட சரியான உணவு கிடையாது. குளிர்காலத்தில் குளிருக்கு போர்த்திக் கொள்ள கம்பளி துணிகள் இல்லை. எலும்பைக்கூட உறையவைக்கும் கடுங்குளிர். கூடவே தொல்லையாக வரும் நோய்கள். அவரை பரிசோதித்துக் கொண்டிருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக தன் சொந்த நாட்டவர்களுக்கு தன் கண்முன்னாலேயே ஏற்படும் அவமானங்களும், பரிகாசங்களும், இழைக்கப்படும் கொடுமைகளும்…இந்தச் சூழலில் சக சிறைக்கைதிகள் பலரும் விரக்தியின் விளிம்புக்கே சென்று அதனால் நோய்கள் ஏற்பட்டு, இறந்தும் போனார்கள். ‘தனக்கும் இந்தத்துயரம் ஏற்பட்டிருக்கும்…ஆனால் தன்னைக் காப்பாற்றி மரணத்தில் இருந்து தன்னை பாதுகாத்தது ஆழ்மனதில் இருந்து கிளம்பி மேல் நோக்கி எழுந்து வந்த நம்பிக்கை என்ற ஐந்தெழுத்துக்கள் மட்டும்தான்…’ என்கிறார்அவர். 1948ல் மோல்ட்மேன் விடுதலையான போது, தன்னுடைய ஆராய்ச்சிக்குரியபாடமாக இருந்த அறிவியலை கைவிட்டு, மத ஆராய்ச்சியில் ஈடுபட ஆரம்பித்தார்.அந்தஆய்வுகளில் இருந்து பிறந்து வந்ததுதான் உலகப்புகழ் பெற்ற நூலான ‘நம்பிக்கையின்புனிதநூல்’ நம்பிக்கைக்கொடியை உயரத்தில் பறக்கவிட்டால்எ திர்காலத்தைப் பற்றிய பதட்டமும், கவலையும் கூட ஓடிவிடும். நாம் இடறி விழுந்தாலும், மறுபடியும் எழுந்து நின்று, உறுதியாக தரையில் கால்கள் பதித்து முன்னால் நடக்கச்செய்வது இந்தநம்பிக்கைதான்…மனதில் நிறைந்து நிற்கும் நம்பிக்கை, துன்பக்காட்டில்கூட துணிச்சலோடு தொடர்ந்து செல்ல நம்மைத் தூண்டி விடும். அவநம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்காமல்ந ல்லதைக்கொண்டு வரும்நாட்கள் தான்நம்முடையதுஎன்ற நம்பிக்கையைவளர்த்துக்கொண்டால் வாழும்நாட்கள் எல்லாமே நல்ல நாட்களாக மாறும். அவநம்பிக்கையும், ஏமாற்றங்களும், விரக்தியும் இன்று ஏராளமானவர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. தற்கொலைகள் அதிகரிப்பதன் ரகசியமும் இதுதான். அவநம்பிக்கைகள் அடர்ந்த இருட்காட்டில் நம்பிக்கைஎ ன்னும் அகல்விளக்கு ஏற்றுவோம்

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2014

என் பள்ளி
நலமாக வாழ நயமான நல்பத்துக் கூற்றுகள்
தயாராகுதல்
கரிம உணவுகள் (ஆர்கானிக் உணவுகள்)
அகல் விளக்கு ஏற்றுவோம்
தகவல் பரிமாற்றம்
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் கேழ்வரகின் பங்கு…
விரக்தி வீழ்த்துகிறது விடா முயற்சி வெல்கிறது
உலகையே ஒரு குலுக்கு குலுக்கியது
வெற்றி வேண்டுமா? – 2
தொழில் திறனை வளர்ப்பது எப்படி?
சிரிப்பு
அச்சம் என்பது மடமையடா…
தகவல்கள் இங்கே! முடிவுகள் எங்கே?
அடுத்தவர் நலனில் அக்கறை அகில உலகமே உச்சரிக்கும் பெயரை!
தன்னம்பிக்கை மேடை
உள்ளதோடு உள்ளம்