Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

கடலோர காவல்படையின் சார்பாக அமெரிக்கா சென்ற பயண அனுபவங்கள்?

கே. வெள்ளியங்கிரி

அடிவல்லி, உடுமலை

“பயண அனுபவங்களை மறக்கமுடியாத அனுபவங்கள்” என்பர். அது போல எனக்கும் இந்தஅனுபவம் மறக்கமுடியாத அனுபவமாகவே இருந்தது. வெளிநாட்டுபயணங்களில் பலவித அனுபவங்களை நாம் பெற முடிகிறது. இதுவே ஒரு கல்வியாகும். மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குத் தரப்படும் பயிற்சிக்காக அமெரிக்கா சென்றிருந்தேன். இது என் இரண்டாவது அமெரிக்க பயணம். வாஷிங்டன் DC (இது அமெரிக்காவின் தலைநகரம்) மற்றும் நியூயார்க் நகரில் பயிற்சி நடந்தது. NYBD இது நியூயார்க்மாநகரகாவல்துறை ஆகும். இந்தபயிற்சி நிறுவனம்தான் உலகிலேயே மிகப் பெரிய காவல் துறையாக கருதப்படுகிறது.

இத்துறையுடன் பிறதுறைகளுடன் இணைந்து பயிற்சி நடத்தப்பட்டது. இதில் 2001, செப்டம்பர் 9, நியூயார்க்கின் இரட்டை கோபுரங்களைத் தீவிரவாதிகள் தாக்கிய போது அந்தத் தீவிரவாத தாக்குதலை நேர்கொண்ட அதிகாரிகள், பாஸ்டன் மராத்தான் குண்டுவெடிப்பின் போது தீவிரவாதி களைத் துரத்திப் பிடித்த அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடி, அவர்களின் அனுபவங்களையும் ,எதிர்கொண்ட முறைகள் பற்றியும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் ஒரு புதிய நாடாக இருந்தாலும் 30 கோடி மக்களைக் கொண்ட ஒரு பெரிய நாடாகவே இருக்கிறது. இந்தியாவை விட நான்குமடங்கு நிலப்பரப்பு அதிகம். இயற்கை வளங்கள், மனித வளம் அதிக அளவில் இருக்கும் நாடு. தொழில்நுட்பம், கல்வி, வர்த்தகம், விளையாட்டுத் துறை மற்றும்ஆராய்ச்சி துறையில் நல்ல முன்னேறிய நாடு எனக் கூற முடியும்.

இவர்கள்தேசியபாதுகாப்புக்கு (உள்நாட்டு, வெளிநாட்டு) மிகவும்முக்கியத்துவம் தருகிறார்கள்.செப்டம்பர் 9 நியூயார்க்நகரில்நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் மிகவும் கவனமாகபாதுகாப்புக்கொடுத்து வருகிறார்கள். இதைமேலும் பலப்படுத்த தாய்நாடு பாதுகாப்புத்துறையை ஏற்படுத்தி காவல்துறை உட்பட அனைத்துதுறைகளையும் அதன் கீழ் கொண்டுவந்துள்ளார்கள். இதன்மூலம் அமெரிக்காவுக்கு வருகின்ற அனைத்துப் பயணிகளையும் தீவிரமாக பரிசோதிக்கிறார்கள். ஒருநாள் மட்டும் 11 இலட்சம் விமானப் பயணிகள் விமான நிலையங்களில் தீவிர சோதனைக்குஉட்படுத்தப்படுகிறார்கள்.

சட்டத்திற்குப் புறம்பான எந்த ஒரு பொருளையும் அமெரிக்காவிற்குள் கொண்டு வர அனுமதிப்பதில்லை. அமெரிக்காவிற்குள் வரக்கூடிய சரக்குகப்பல்கள் அமெரிக்காவிலேயே சோதனை செய்கிறார்கள். புறப்படும் நாட்டிலேயே இக்கப்பல்களைப் பரிசோதனை செய்கிறார்கள். அமெரிக்காவிற்குச் செல்லும் ஒவ்வொருவரையும் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். தங்கள் நாட்டில் சட்டத்திற்குப்  புறம்பாக குடியேறுபவர்களைத் தடுக்க மிகவும் பொறுப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். இதற்காகபெரும்முயற்சி எடுக்கிறார்கள்.

சட்டத்திற்குப் புறம்பாக அந்நாட்டில் குடியேறுவது  இங்கு மிகப்பெரும் பிரச்சனையாக இருக்கிறது. உள்நாட்டைப் பாதுகாக்கும் காவல்துறைக்கு மிகப்பெரிய வசதிகள் செய்து கொடுத்திருக்கிறார்கள். நியூயார்க் நகர காவல்துறைக்கு ‘ஹெலிகாப்டர்கள்’ ரோந்து பணிக்காக தரப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்மூலம் கேமராக்களைக் கொண்டு  ஒவ்வொரு தெருவையும் கண்காணிக்கிறார்கள்.

கணினி தொழில்நுட்பம், துப்பாக்கி தடவியல்தொழில்நுட்பம், புலனாய்வுதொழில்நுட்பம் போன்றவை நிலையாக பயன்படுத்தப்படுகின்றது. அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றது. நமது நாட்டில்வேறு விதமான பிரச்சனைகளை சமாளித்து அதைச்சார்ந்த அனுபவங்கள் நமக்கு நிறைய இருக்கின்றது. இந்த அனுபவங்களை எல்லாம் அமெரிக்கதுறையினர் நம்மிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

அமெரிக்காவாய்ப்புகள் பல நிறைந்தநாடாக  இருக்கிறது. இங்குபடிப்பறிவும், தொழில்நுட்பவல்லமையும், உழைக்க விருப்பமும், புதிதாக எதையாவது கண்டுபிடிக்கவேண்டிய முனைப்பும் இருந்தால் உயர்ந்த நிலைக்கு வந்துவிடலாம். இதன் மூலம் பெருமைகளும் பெரிதளவில் கிடைக்கின்றது. அந்தவகையில் இந்தியாவிலிருந்து சென்ற மருத்துவர்கள், கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள், தொழில்அதிபர்கள், விஞ்ஞானிகள் போன்றவர்கள் சிறந்து விளங்கி வருகிறார்கள்.

பொள்ளாச்சியைச்சேர்ந்த கார்த்திகேயினி என்ற டாக்டரையும், அவரது கணவர் கம்ப்யூட்டர் இன்ஜினியரான சிங்காரவடிவேலு அவர்களையும் அங்கு சந்தித்தேன். அவர்கள் எனது நண்பர்கள். இவர்கள் அயராத உழைப்பால் அங்கு உயர்ந்த  நிலையில் இருக்கிறார்கள். எனினும் எளிய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் வாழும் இளைஞர்கள் பலருக்கு கல்விக்கென உதவிகள் செய்து கொண்டு வருகிறார்கள்.

பிறகு என்னுடன் கல்லூரியில் படித்த கோவையைச் சேர்ந்த மன்சூர் அலி என்பவரது குடும்பத்தைச்சந்தித்தேன். மன்சூர்அலி அங்கு ஒரு சிறந்த ஆராய்ச்சியாளராக உயர்நிலையில் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். இப்படி பல நண்பர்கள் இருந்தாலும் அவர்களை எல்லாம் பார்க்க முடியவில்லை. ஒரு சிலரை மட்டும் சந்திக்கவாய்ப்பு கிடைத்தது.

இந்தியாவிலிருந்து சென்ற சத்தியனெத்தல்லா என்ற இளைஞன் உலகிலேயே மிகப்பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியான மைக்ரோசாப்ட் கம்பெனியில் முதன்மை அதிகாரியாக இருக்கிறார் என்ற செய்தியை அறிந்து மகிழ்வடைந்தேன். இது பெருமைப்படக்கூடிய நிகழ்வு. இந்த செய்தியை படிக்கும் இளைஞர்களான  நீங்கள் உங்களின் கல்வித்தரத்தையும், தொழில்நுட்ப மேலாண்மையையும், வேலை பார்க்கும் ஆர்வத்தையும், தலைமைப் பண்பையும், தொழில்திறனையும் வளர்த்துக் கொண்டால் அமெரிக்காவில் வேலையில் சேரமுடியும் என்பது மட்டுமல்லாமல் வேலைக்குச் சேர்ந்த பிறகு பிறநாட்டு மக்களோடு நடக்கும்போட்டிகளில் வெற்றி பெற்று பல நிறுவனங்களில் உயர்பதவியைப் பெறமுடியும்.

இறுதிகாலங்களில் நீங்கள்  ஈட்டிய செல்வங்களை வைத்து தாய்நாட்டிற்கு திரும்பி ஒரு சிறந்த தொழில்தொடங்கி பல்லாயிரக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு வேலை தர முடியும்.

நாசாவிற்கு சென்றிருந்தேன். அங்கு சந்திரனில் சென்ற விஞ்ஞானி சார்லஸ்போல்டன் அவர்கள் தரையிறங்க சிரமப்பட்ட தருணம் அது. அப்பொழுது “இதை வெற்றிகரமாக செய்வீர்களா?” என்ற கேள்வி எழுந்தது.“தோல்வி என்பது எனக்கு பொய்யான வார்த்தை. அந்த வார்த்தை என் வாழ்வில் இருக்கவே இருக்காது என்று கூறினார். எவ்வளவு பெரிய ஆபத்தான சூழ்நிலையாக இருந்தாலும் தோல்வியே இருக்காது என்று சந்திரனிலிருந்து அந்தவிஞ்ஞானி கூறியவார்த்தைகள் இந்தியாவரும்வரை என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

தோல்வியைக் கண்டு அஞ்சாதவர்கள் அமெரிக்க விஞ்ஞானிகள். பலமுறை தோற்றபிறகு தான் மின்சார விளக்கைக்கண்டு பிடித்தார் தாமஸ் ஆல்வா எடிசன். விமானத்தைக் கண்டுபிடித்த ரைட்சகோதரர்கள், தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம்பெல், இயற்பியல் தத்துவஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் போன்றவர்கள் உலகறிந்த சான்றோர்கள்.

 சிங்கார வேலு மற்றும் மன்சூர் அலி, கார்த்திகேயினி ஆகிய தமிழ்மக்கள் அமெரிக்காவில் சாதித்ததைப்போல உங்களாலும் சாதிக்கமுடியும்.அதற்கான தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். பயிற்சியை இன்று, இப்பொழுது தொடங்குங்கள்.அதுதான் பிறந்த நாட்டிற்கும், பெற்றெடுத்த பெற்றோருக்கும் பெருமையும், மகிழ்ச்சியும் தரும் என்பதில் சற்றும் ஐயப்பாடில்லை.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2014

என் பள்ளி
நலமாக வாழ நயமான நல்பத்துக் கூற்றுகள்
தயாராகுதல்
கரிம உணவுகள் (ஆர்கானிக் உணவுகள்)
அகல் விளக்கு ஏற்றுவோம்
தகவல் பரிமாற்றம்
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் கேழ்வரகின் பங்கு…
விரக்தி வீழ்த்துகிறது விடா முயற்சி வெல்கிறது
உலகையே ஒரு குலுக்கு குலுக்கியது
வெற்றி வேண்டுமா? – 2
தொழில் திறனை வளர்ப்பது எப்படி?
சிரிப்பு
அச்சம் என்பது மடமையடா…
தகவல்கள் இங்கே! முடிவுகள் எங்கே?
அடுத்தவர் நலனில் அக்கறை அகில உலகமே உச்சரிக்கும் பெயரை!
தன்னம்பிக்கை மேடை
உள்ளதோடு உள்ளம்