Home » Articles » நோபல்பெற்றுத்தந்த‘கடவுள் துகள்’

 
நோபல்பெற்றுத்தந்த‘கடவுள் துகள்’


நாகராஜ் கே
Author:

பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்துள்ள எண்ணற்ற துகள்களின் நிறைக்குக்காரணம், கண்ணுக்குத் தெரியாத பெருங்கடலான ஆற்றல் எங்கும் நிறைந்திருப்பது தான் என்று கூறியபீட்டர் ஹிக்ஸ், ஃப்ரான்ஸ்வா ஆங்லெர் ஆகிய இரு இயற்பியலாளர்களுக்குத் தான் இந்த ஆண்டு இயற்பியலுக்கான  நோபல் பரிசு.

ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பீட்டர் டபுள்யு. ஹிக்ஸ், பெல்ஜியத்தில் உள்ள லிபர் டி பிரஸெல்ஸ் பல்கலைக்கழகத்தின் ஃப்ரான்ஸ்வா ஆங்லெர் தனக்குக் கிடைக்கும் நோபல் பரிசுத் தொகையான ஏழரை கோடி ரூபாயைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

‘ஹிக்ஸ் போஸான்’ என்று இதை முதலில் கூறிய ஹிக்ஸ் பெயரால் இத்துகள் அழைக்கப் பட்டாலும் ஊடகங்களால்  கடவுள் துகள்  என்ற பெயர் பிரபலமாகிவிட்டது.

கடவுள் துகள் பற்றிய கருதுகோள் 1964-ளிலேயே உருவாகிவிட்டது. ஆனால் ஒரு தலைமுறை விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்து, கடந்த ஆண்டில் ஹிக்ஸ் போஸானைக் கண்டுபிடித்தனர்.

சுவிட்சர்லாந்தில் உள்ள ‘செர்ன்’ ஆய்வகத்தில் துகள் தாக்குவிப்பான்களில் கோடிக்கணக்கான முறை அணுகுத்துகள்களை மோதவிட்டுப் பார்த்ததில் ஒரு வழியாக கடந்த ஆண்டு ஹிக்ஸ் போஸானின் இருப்பு உறுதி செய்யப்பட்டது.

செர்ன் அறிவியலாளர்கள் அணுவின் அமைப்பைப் பற்றி உருவாக்கிய படித்தர வடிவம் (Standard Model) மூலம் பிரபஞ்சத்தின் அடிப்படைக்கட்டுமானப் பொருட்களையும், அதற்கு ஆதாரமான விசைகளையும், அவற்றிற்கு இடையேயான தொடர்பையும் கண்டுபிடிக்கும் முயற்சியின் முழுமை தான் இந்த ஹிக்ஸ் போஸான்.

இந்த படித்தர வடிவத்தை பொறுத்தவரை, பிரபஞ்சம் பாகுபோல் செய்லபடும் ஆற்றலால் இந்த பிரபஞ்சமே நிரம்பி இருக்கிறது. அதன் ஊடாகச் செல்லும் துகள்களுக்கு அந்த ஆற்றல் நிறையைக் கொடுக்கிறது. அந்த ஆற்றல் புலம்தான் ஹிக்ஸ் புலம்.

காந்தத்தைச் சுற்றி காந்தப்புலம் இருப்பதைப் போலத்தான் ஹிக்ஸ் போஸானைச் சார்ந்து ஹிக்ஸ் புலம் இருக்கிறது. இந்தப் புலம் இல்லையென்றால் எலக்ட்ரான்கள் போன்ற அடிப்படைத் துகள்கள் ஒளிவேகத்தில் சென்று ஒன்றையொன்று இறுக்கிக் கொள்ளும், அதன் பிறகு அணுக்களும் இருக்காது. நாமும் இருக்கமாட்டோம் என்றும், இந்த பிரபஞ்சமானது துல்லியமான, இயற்கை விதிகளுக்கு உட்பட்டு இயங்குவதற்கு காரணம் ஹிக்ஸ் போஸான் என்று உறுதிப் படுத்தினார்கள் இந்த அறிவியலாளர்கள்.

இதில் காணப்படும் குறைகளும், இடைவெளிகளும் தான் நாம் உட்பட எல்லாவற்றையும் விநோதமானவையாகத் தோன்றச் செய்கின்றன. ஹிக்ஸ் போஸான் என்பது இயற்கையுடன் தொடர்புடையது.இயற்கை சீராகவும், ஒழுங்கான அமைப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பிரபஞ்சத்தின் அடிப்படை விசைகள்யாவுமே இயற்கையானது. எல்லாவற்றிற்கும் சீர்மையையும், ஒழுங்கையும் ஏற்படுத்த முயல்வதால் தான் 1954ல் ஆராய்ச்சியாளர்கள் ரிங்யாங், ராபர்ட் எல்.மில்ஸ் ஆகியோர் ஆய்வுகளை மேற்கொண்டு அறிவித்த தன் தொடர்ச்சியான விளைவுகள் தான் ஹிக்ஸ் போஸானின் கண்டுபிடிப்பு.

1964ல் மூன்று வெவ்வேறு இயற்பியல் அறிஞர்கள் ஹிக்ஸ் துகள் குறித்து வெவ்வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

ஆனால் ஹிக்ஸ் துகள் குறித்து முதலில் பதிப்பித்தவர்கள் டாக்டர் ஆங்லெரும், அவருடைய சகா ராபர்ட் பிரௌட்டும்தான். ராபர்ட் பிரௌட் 2011ல் இறந்து விட்டார். ஹிக்ஸ் துகள் கண்டு பிடிப்பில் ராபர்ட்முக்கு முக்கிய பங்கு உண்டு என்றாலும் இறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்குவதில்லை என்ற மரபின் காரணமாக அவருக்கு வழங்கப்படவில்லை.

டாக்டர் ஆங்லெர் பெல்ஜியம் நாட்டின் எட்டர்பீக் நகரைச் சேர்ந்தவர்.பொறியியல் இயற்பியல் படித்தவர். கார்னல் பல்கலைக்கழகத்தில் ஆய்வில் ஈடுபட்டபோது டாக்டர் பிரௌட்டுடன் சேர்ந்து கொண்டார்.

இவர்கள் இருவரும் இந்தக் கோட்பாடு குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்த போதுதான் இங்கிலாந்தின் நியூகேசலைச் சேர்ந்த டாக்டர் ஹிக்ஸ் தன்னுடைய பாணியில் இத்துகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்.

ஹிக்ஸ் அனுப்பிய ஆய்வறிக்கையை செர்னில் உள்ள ‘பிசிக்ஸ் லெட்டர்ஸ்’ பிரசுரிக்க மறுத்து விட்டது. எனவே போட்டியாளரை ‘பிசிகல் ரெவ் யூலெட்டர்ஸ்’ நிறுவனத்துக்கு அனுப்பினார். அதில் தான் புதிய துகள் குறித்து அடிக்குறிப்பாக கூறியிருந்தார்.அதுதான் தற்போது ஹிக்ஸ் துகளாக உலகப் புகழ்பெற்ற கடவுள் துகள்.

இதற்கிடையில் லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த டாம் கிப்பின், ரோசஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கார்ல்ஹேஜன், பிரௌன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜெரால்ட்குரால்நிக் என்ற மூன்று இயற்பியலாளர்கள் தங்களுடைய ஆய்வுகளை அறிக்கையாகத் தயாரித்து, அதைப் பிரசுரிக்க அனுப்பிய போது தபால்துறை வேலை நிறுத்தத்தில் இருந்ததால் ஹிக்ஸ், ஆங்லெர் பிரௌட் ஜோடி தயாரித்த இரண்டு அறிக்கை மட்டுமே வந்தது. அன்றில் இருந்தே இதை யார் கண்டுபிடித்தது என்ற சர்ச்சை நடந்தது.

கடந்தாண்டு ஜூலை 4ம் தேதி இறுதியாக அறிவிக்கப்பட்டதும் சர்ச்சை முடிவிற்கு வந்தது. அன்று தான் ஹிக்ஸூம், ஆங்லெரும் முதல் முறையாக சந்தித்துக் கொண்டனர்.

ஹிக்ஸ் துகள் குறித்த ஆய்வை ஆயிரக்கணக்கான அணுத்துகள் இயற்பியலாளர்கள் செர்ன்நகரில் உள்ள அறிவியல் ஆய்வகத்தில் ஆண்டுக் கணக்கான மேற்கொண்டனர். இந்தக் கண்டுபிடிப்புக்கான நோபல் விருதின் பெருமையில் இவர்களுக்கும் பங்கு இருக்கிறது.

உயிரணுக்களுக்கு இடையே மூலக்கூறுகளை கொண்டு செல்லும் முறையை ஆய்வுசெய்த தற்காக மருத்துவத்திற்கான நோபல்பரிசை அமெரிக்க விஞ்ஞானிகள் ஜேம்ஸ் ரோத்மேன், ராண்டி செக்மேன், ஜெர்மனியில் பிறந்து தற்போது அமெரிக்காவில் ஆய்வு செய்யும் தாமஸ் சுவேதாப் ஆகியோர் பெறுகிறார்கள்.

செல்கள் அனைத்தும் மூலக்கூறுகளை உற்பத்தி செய்து அனுப்பும் பணிகளை மேற்கொள்கின்றன என்பதைத் தான் இவர்கள் நிரூபித்துள்ளனர். உதாரணமாக, நமது கணையம் பகுதியில் உள்ள செல்கள், இன்சுலினைத் தயாரித்து ரத்தத்தில் கலக்கச் செய்கின்றன. நரம்பு மண்டலத்தில் உள்ள செல்கள் தகவல்கள் தொடர்பான குறியீடுகளை குறிப்பிட்ட இரசாயனங்களை உற்பத்தி செய்துமற்ற செல்களுக்கு அனுப்புகின்றன. இந்த செல்களுக்கு இடையே மூலக்கூறு எவ்வாறு செல்கின்றன, அதுவும் மிகத்துல்லியமாக சரியான நேரத்தில், மிகச்சரியான இடத்தில் எப்படி நிகழ்கிறது என்பதைத் தான் இவர்கள் கண்டறிந்துள்ளனர்.

உயிர்தொழில் நுட்பத்துறை சார்ந்த தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய முன்னேற்றத்ததை ராண்டி செக்மேனின் ஆய்வு ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரின் ஆய்வுசெல்கள் உற்பத்தி செய்யும் நொதிகளில் ஏற்படும் மாறுபாடு குறித்தும், செல்கள் உற்பத்தி செய்யும் மூலக்கூறுகளை பிசிறில்லாமல் எடுத்துச் செல்வதற்கான ஜீன்களின் நொதிகள் எவை என்பதையும் கண்டறிந்துள்ளார். அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் செல் உயிரியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் ராண்டி செக்மேன் செல்கள் உற்பத்தி செய்யும் புரத மூலக்கூறுகள் எவ்வாறு தான் சென்று சேரவேண்டிய இலக்கைத் துல்லியமாக அடைகின்றது என்பதைக் கண்டறிந்துள்ளார். யேல் பல்கலைக்கழகத்தில் செல் உயிரியல் துறைத் தலைவராக பணிபுரியும் ஜேம்ஸ் ரோத்மேன் செல்களில் இருந்து மூலக்கூறுகள் எவ்வாறு துல்லியமாக அனுப்பி வைக்கப்படுகின்றன என்று கண்டறிந்துள்ளார். ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் தாமஸ் சுவேதாப்.

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2013

உள்ளத்தோடு உள்ளம்
“விருந்தோம்பல்”
தன்னம்பிக்கை மேடை
சாம்பியன் உருவான கதை
நோபல்பெற்றுத்தந்த‘கடவுள் துகள்’
மரித்துப் போகும் வரை சாதனை “நிக் வாலெண்டா”
படிப்பது எப்படி?
மார்ஸ் மிஷன்
ரஸியா சுல்தான்
எப்படி ஜெயித்தார்கள்
நீங்கள்சாதனையாளரே!
உலகைமாற்றிய சிறுபொறி
உழைப்பில் ஆர்வம்! உயர்வில் ஆனந்தம்!!
மனோலயம்