Home » Articles » மார்ஸ் மிஷன்

 
மார்ஸ் மிஷன்


நாகராஜ் கே
Author:

சூரியனைச் சுற்றி வரும் நான்காவது கிரகமான செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா முதல்முதலாக செயற்கைகோளை அனுப்புகிறது. 20 கோடி கி.மீ. தூரம் பயணம் செய்து 1350 கிலோ எடையுள்ள செயற்கை கோளை செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்ப அக்டோபர் 28ம் தேதிக்கு ஸ்ரீ ஹரிகோட்டா தயாராகி வருகிறது.

ஆங்கிலத்தில் ‘மார்ஸ்’ என்றழைக்கப்படும் செவ்வாய் கிரகம் செந்நிறத்தில் இருக்கும். போர்க் கடவுள் என்று பொருள்படும் மார்ஸ் கோபம், ரத்தம் இவற்றின் குறியீடாக பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய மக்கள் கருதுகிறார்கள்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மேம்பட்டதாக இருக்கும் இந்த செயற்கை கோளுக்கு மங்கள்யான் என்று பெயர். மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் (எம்.ஓ.எம்) என்று அழைக்கப்படும் இத்திட்டத்தின் திட்ட மதிப்பீடு 450 கோடி. 500 விஞ்ஞானிகளின் ஓய்வில்லாத உழைப்பால் 13 மாதங்களில் இதைச் சாதித்துள்ளது இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ). செவ்வாயில் உயிர்கள் சாத்தியமா? என்ற கேள்விக்கான விடையைத் தேடிச் செல்லும் மங்கள்யான் செயற்கைகோளில் ஐந்து உபகரணங்களைக் கொண்டு செல்கிறது.

கரியமில வாயு சார்ந்த உயிரின இருப்புக்கான உறுதியான ஆதாரமாகக் கருதப்படும் மீதேன் வாயு இருப்பை அறிந்துகொள்ள, 15 கிலோ எடை கொண்ட ஒரு சாதனமும், அதி நுணுக்கம் வாய்ந்த ஒரு கேமரா செவ்வாய் கிரகத்தின் மேல் பகுதியை வண்ணப்படமாக எடுத்து அனுப்பும்.

செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேற முடியுமா என்னும் கேள்விக்கு பதில் அறிய வாயு மண்டலத்தை ஆய்வு செய்ய ஒரு உபகரணம் என ஐந்து உபகரணங்களை எடுத்துச் செல்கிறது மங்கள்யான்.

கிரகங்களுக்கு இடையேயான பயணத்தை மேற்கொள்ளும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் ஸ்ரீ ஹரிகோட்டா, சதீஸ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி 25 ராக்கெட்டில் செல்லும் மங்கள்யான் விண்கலம் செவ்வாயில் தரை இறங்கியது. செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரப் போகிறது. மங்கள்யான் செய்கைகோள் ஒரு மாத காலத்திற்கு பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும். பின்னர் ராக்கெட் மோட்டார் மற்றும் 852 கிலோ எரிபொருள் மூலம் தனக்குத் தேவையான ஆற்றலை சேகரித்துக் கொண்டு நவம்பரில் பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து விலகிச் செவ்வாய்கிரகம் நோக்கிச் செல்லும்.

இதுநாள் வரை ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி கழகம், ஜப்பான், சீனா ஆகியவை மட்டுமே செவ்வாய் பயணத்தை மேற்கொண்டுள்ளன. இவற்றில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸைத் தலைமையாகக் கொண்டு 13 ஐரோப்பிய நாடுகள் இணைந்த ஐரோப்பிய விண்வெளிக் கழகம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. ஜப்பானும், சீனாவும் தோல்வியை அடைந்துள்ளன.

செவ்வாய் கிரகத்துக்கும் விண்கலம் அனுப்பும் இந்தியாவின் திட்டம் வெற்றி பெற்றால், உலக அளவில் நான்காவது நாடாகவும், ஆசிய அளவில் இரண்டாவது நாடாகவும் விளங்கும்.

25வது முறையாக செலுத்தப்படும் பி.எஸ்.எல்.வி. 44 மீட்டர் உயரம், 300 டன் எடை கொண்ட ராக்கெட் அமெரிக்காவின் செவ்வாய் கிரகத்தை ஆராய அட்லெஸ் மற்றும் டைட்டனிஸ் எனும் ராக்கெட்டுடன் ஒப்பிடும்போது குறைந்த செலவில் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் பூமியின் ஈர்ப்பு சக்தி முடிவடையும் இடத்தின் தூரமான 9,18,347 கி.மீட்டர் தூரம் செல்வதற்கு மிகக் குறைந்த அளவு எரிபொருளையே இந்த பி.எஸ்.எல்.வி.சி. 25 எடுத்துக் கொள்கிறது.

விண்ணில் செலுத்தப்படும் இந்த ராக்கெட்டை கண்காணிக்க இரண்டு கப்பல்களை பசிபிக் பெருங்கடலில் இந்தியா நிறுத்தியுள்ளது. அக்டோபர் 28ல் கிளம்பி 9 மாத பயணத்துக்குப் பின் மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை நெருங்கும்போது அதன் ஈர்ப்பு விசையால் கவரப்படும் வகையில் தன்னுடைய வேகத்தைக் குறைத்துக்கொள்ளும் படியாகவும், செவ்வாய் கிரகத்தைச் சுற்றி ஆறு மாத காலத்திற்கு நீள்வட்டப் பாதையில் சுழன்று செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் படியாகவும் செலுத்தப்படுகிறது.

உலக அளவில் 1960 முதல் இதுவரை 45 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் இவற்றில் பெரும்பாலானவை தோல்வியில் முடிந்துள்ளன. மிகச்சமீபத்தில் சீனா இந்தத் திட்டத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தியா இந்தத் திட்டத்தில் வெற்றி பெற்றால் சொந்த முயற்சியின் மூலம் சாதித்த இரண்டாவது நாடு என்ற பெருமை பெறும்.

இந்தியாவின் சூப்பர் பவர் அந்தஸ்துக்கான தேடலின் ஒரு பகுதியான மங்கள்யான் திட்டத்தின் மூலம் விண்வெளித் துறையில் தனது தொழில்நுட்ப ஆற்றலை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக கிடைத்துள்ளது.

பெட்டிச் செய்தி:

ஏன் அக்டோபர் 28?

செவ்வாய் கிரகம் 26 மாதங்களுக்கு ஒருமுறை தான் விண்கலம் செலுத்தும் வாய்ப்பைத் தருகிறது. அக்டோபர் 28ல் இந்தியாவை விட்டு விண்கலம் புறப்பட்டால் தான் அது பூமியின் புவி ஈர்ப்பு விசையில் இருந்து விடுபட்டு, செவ்வாயின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு, சரியாக செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் செல்ல முடியும்.

அக்டோபர் 28ல் அனுப்பினால் தான் சூரியன், பூமி, செவ்வாய் ஆகிய மூன்றும் 44 டிகிரியில் ஒன்று சேரும் நாளில் செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் மிகக்குறைந்த எரிபொருள் செலவில் நிலைநிறுத்த முடியும்.

அக்டோபர் 28ம் தேதி மாலை 4.27 மணிக்கு விண்கலம் சரியாகப் புறப்பட்டால் பூமிக்கும், செவ்வாய்க்கும் இடைப்பட்ட தூரமான 3850 லட்சம் கி.மீட்டரை 10 மாதங்கள் பயணித்து செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையை 2014 செப்டம்பர் மாதம் 24ம் தேதி அதிகாலை 4.27 மணிக்கு சென்றடையும். 2013ல் செலுத்தும் வாய்ப்பை தவறவிட்டால் 2016ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

15 கிலோ எடை கொண்ட மங்கள்யானில் உள்ள உபகரணங்கள்:

லைமன் ஆல்பா போட்டோ மீட்டர் – செவ்வாயின் மேல் பகுதியில்

ஹைட்ரஜன், டியூட்ரியம் பற்றி ஆய்வு செய்யும்

மீத்தேன் உணர்வான் – செவ்வாயில் மீத்தேன் உள்ளதா எனக்

கண்டறியும்

தன்மை அறியும் கருவி – செவ்வாயில் உள்ள அணுக்கள் மற்றும்

வாயு மண்டல மூலக்கூறுகளைப் பற்றி ஆய்வு செய்யும்

கலர் கேமரா – செவ்வாய் கிரகத்தின் பல்வேறு

பகுதிகளை வண்ணப்படமாக பிடிக்கும்

தெர்மல் இமேஜிங் ஸ்பெக்டரா மீட்டர் – செவ்வாயின் மேல் பகுதியில் தாது

வளத்தைப் பற்றி ஆய்வு செய்யும்

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2013

உள்ளத்தோடு உள்ளம்
“விருந்தோம்பல்”
தன்னம்பிக்கை மேடை
சாம்பியன் உருவான கதை
நோபல்பெற்றுத்தந்த‘கடவுள் துகள்’
மரித்துப் போகும் வரை சாதனை “நிக் வாலெண்டா”
படிப்பது எப்படி?
மார்ஸ் மிஷன்
ரஸியா சுல்தான்
எப்படி ஜெயித்தார்கள்
நீங்கள்சாதனையாளரே!
உலகைமாற்றிய சிறுபொறி
உழைப்பில் ஆர்வம்! உயர்வில் ஆனந்தம்!!
மனோலயம்