Home » Articles » மனோலயம்

 
மனோலயம்


அனந்தகுமார் இரா
Author:

உலகில் மிக வலிமையானவர் யார்? என்று கேட்டு சூரியனும் காற்றும் சண்டை போட்டுக் கொண்ட கதையை குழந்தைகள் பேசிக்கொண்டிருந்தன. மனவலிமைதான் அதை முடிவு செய்கின்றது என்று ஆணித்தரமாக பதில் கிடைத்தது உள்மனதில் இருந்து.

‘மனம் போல் வாழ்வு’ என்று ஒரு பொன்மொழி உண்டு. காண்பானை பொருத்தே காட்சி அமைகின்றது என்று இரமண மகரிஷி கூறியிருக்கின்றார். எண்ணற்ற கட்டுரைகளும் எழுத்தாளர்களும் இந்த பொருள் குறித்து ஏராளமாக எழுதி இருக்கின்றனர், இருந்த போதிலும் ‘மனம்’ குறித்த சந்தேகங்கள் தீர்ந்தபாடில்லை.

சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவர், என்னால் ஒரு பதினைந்து நிமிடம் சேர்ந்தாற்போல் தியானிக்க முடியவில்லை என்று கூறினார். தனி அறை இருந்தாலும், உடன் பணி புரிகின்றவர்கள் “என்னம்மா?! வேலை நேரத்திலே துட்ங்கறீங்க?” என்று கேட்டு கேலி செய்கின்றார்கள் என்று வருத்தப்பட்டார். ஏன் தியானிக்க நினைக்கையில் அல்லது யோகாசனம் செய்கையில் உங்கள் உட்புற கதவை தாழிட்டுக் கொள்ள வேண்டியது தானே?! என்று கேட்டபொழுது?…

ஓஹோ!? இப்படி கூட தாழிட்டுக் கொள்ள முடியுமா என்று கேட்டார்… ? ஆச்சரியமாக இருந்தது. பத்து நிமிட தனிமை கூட தன்னால் ஏற்படுத்திக்கொள்ள இயலுமா?  என்கின்ற ஐயத்தோடு மனம்’ வாழ்ந்துகொண்டு இருக்கின்றது. ஆல்பாஃ தியானத்தை, தான் பயிற்சி செய்து வருவதாக கூறினார். தியானிப்பவர்களால், எண்ணிய நிமிடத்தில், எண்ணிய மனநிலையை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்ற பொழுது மிகவும் ஆச்சரியப்பட்டார். நான் இன்னும் அந்த நிலையை அடையவில்லை என்று கூறினார்.

அந்த நிலையை அடைந்துவிட்டோம் என்று எண்ணுவதுதான், அடைவதற்கான முதல் மற்றும் முக்கியமான படி என்று கொஞ்ச நேரத்தில் தெளிவாக தெரிந்து கொண்டார்.

இந்தக்கட்டுரையில், எண்ணியர் திண்ணியராவதற்கான சின்ன சின்ன பயிற்சி முறைகளால் உண்மையிலேயே மன வீட்டுச் சாவியை கண்டறிந்து தேவையான பொழுது உள்ளே சென்று தேவையான உணர்வு உணவினை சமைத்துக் கொள்ள இயலும் என்பதை குறித்து பேசுகின்றோம்.  இந்த நம்பிக்கையின் அடிப்படையில், இந்த வருடத்திய மத்திய பணியாளர் தேர்வாடையம் நடத்தும் ஐ.ஏ.எஸ் முதன்மைத் தேர்வில், அதன் வராலாற்றிலேயே முதல் முறையாக நல்ல மனநிலை, நேர்மை, சேவை மனப்பான்மை, அன்பு, கருடை, பாசம் மற்றும் கடமை உணர்ச்சி இவை கலந்த சூழ்நிலைகளை கையாளும் திறமை, இவற்றை குறித்த விழுமியங்களை கற்றுத் தரும் பாடத்திட்டம் சேர்க்கப்பட்டு உள்ளது.

ஆங்கிலத்தில் அட்டிட்யூட் (Attitude) அப்டிட்டியூட் (Aptitude) என்று இரு சொற்கள் அந்த பாடத்திட்டத்தில் இருந்தன.  உடனே அதுகுறித்த தெளிவு நமக்கு பிறக்க வேண்டும்.  துறுதுறுவென சந்தேகத்தை  தீர்த்துக்கொள்ளும் ஆவல் உந்தித்தள்ள … தேடி தெரிந்துகொண்ட அந்த  வித்தியாசம் இன்னும் சில  பத்திகளைத் தாண்டி…  இப்படி ஆர்வத்தை அதிகரித்து … மறைத்து மீண்டும் வெளிப்படுத்துகின்ற நான் லினியர் ஸ்டோரி டெல்லிங் (Non Linear story Telling) எப்படி அதிக புழக்கத்தில் வந்தது என யோசித்தால்… சமீபத்தில் இரோஜஷ்குமார் மற்றும் சுஜாதா நாவல்கள் பத்து பத்தாய் எடுத்து வைத்துக் கொண்டு பயணிக்கையில், மாடிப்படி, தானியங்கி ஏற்றி, வீட்டு அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருக்கும் நேரம், கூட்டங்கள் ஒத்திவைக்கப் படுகையில், விட்டுப்போன மீதத்தை துட்ங்கும் முன்பு என ஓயாது படித்ததன், விளைவு என்று சொல்லலாம்.

இந்திய ஆட்சிப்பணி தேர்வு மாதிரி, முதன்மைத் தேர்வு வினாத்தாள் ஒன்றை ஆடைய (U.P.S.C) இடையதளத்தில் (இதுவும் முதல் முதலாகத்தான்) வெளியிட்டிருந்தனர்.  உங்களுக்குப் பிடித்த தலைவர் ஒருவரை சொல்லுங்கள், அவரை பிடித்ததனால் உங்கள் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய பண்பு நலன் மாற்றங்களாக எதை குறிப்பிடுகின்றீர்கள்? என்று ஒரு கேள்வி இருந்தது?

அதற்கு முன்பு, வழக்கம் போல இதற்கும் பதில் தருவோம்… சில பத்திகள் தாண்டுவோம்… ஒரு நல்ல குழந்தைகள் நுட்லகத்திற்கு சமீபத்தில்  விடுமுறைநாளில் குழந்தைகளை அழைத்துச்சென்று  மூன்று மணி  நேரத்திற்கு முழுக்க முழுக்க அவர்களுக்கு கதை, அறிவியல் புத்தகம் என படித்துக் காட்டினால் எவ்வளவு மனோலயமாக இருக்கின்றது? என உணரப்பட்டது.

இலயித்துப் போய் செய்கின்ற என்ன விஷயமாக இருந்தாலும் மகிழ்ச்சி மெது மெதுவாக பரவி, மனசை தாலாட்டுகின்றது. சமீபத்தில் நாகலா … மலைப்பகுதி (சித்துட்ர் மாவட்டம், நாகலாபுரம் வட்டம்) சத்திய வேடு வட்டாரம் அங்கே முறையே ஜில்லா, தாலுகா, மண்டல் என்று சொல்கின்றார்கள்)யில் இருந்த ஒரு நீர்வீழ்ச்சியில் மிதக்கையில் (அருவியின் கீழே சின்னத்தடாகம் இருந்தது)  மகிழ்ச்சி அளவு கோல் குறித்து நண்பர் ஆஷிஷ்குமார் தூத்துக்குடியின் முன்னால் ஆட்சியர் என சொல்லலாமா?)  பேசியது ஞாபகம் வருகின்றது.  சந்தோஷத்துக்கு சைஸ் (Size) (அதாவது அளவு) இருக்கா? என்று கேட்டபோது … ஆமாம்… சொல்லறதில்லையா? … இப்ப சந்தோஷம், அதிசந்தோஷம், பரம சந்தோசம், அலாதி சுகம், மிக்க மகிழ்ச்சி என்று ஏறத்தாழ்வு இருக்கிறது என்றார்.

குழந்தைகளோடு நூலகத்தில் படிப்பது அலாதி சுகத்தை … சுகந்தத்தை மனதுள்… தவழவிட்டது ஒரு வகை .  மால்களுக்குள் (mall) குளிர்பதன அறையில் சுவாசிக்கின்ற செடிகள் அருகே அமர்ந்து பசியில்லாத பொழுது உண்டு, பார்க்க வேண்டாத படங்களையும் பார்த்து அரை மயக்கமாக அகாலத்தில் வீடு சேர்கின்ற அவசர நாகரிக உலகில் … ஆரவலாமான சந்தோஷத்தை அவை தருகையில் அமைதியான சந்தோஷத்தை இவை தருக்கின்றன.  மனம் ஒன்றிப் போய் மகிழ்ச்சி அடைவது; மறதியோடும் மயக்கத்தோடும் மகிழ்வது இரண்டும் ஒன்றென நினைக்கின்றவர்கள் நிறைய உண்டு.

நகலாபுரம் நோக்கி நடக்கையில் குழந்தைகள் முழு தூரமும் நடப்பார்களா? என்ற கேள்வி இருந்தது.  சற்று நேரத்தில், ஓரமாக இருந்த, சிறிய குழியொன்றில் இருந்த நீர், குழந்தையின் காலணி மீது பட்டது. அவ்வளவுதான். துள்ளிக் கொண்டு குழந்தை ஓரமாக இருந்த ஒரு பாறை மீது அமர்ந்து கொண்டாள்.  அவள் பெயர் அவளைப் போலவே அழகானது.  குஷி.  ஆமாம். அதுவே பெயர்.  சந்தேகமில்லை.  குஷி .  ஐந்தாவது படிக்கலாம்.  இனி புது காலணி வேண்டும் என்றாள்.  நடுக்காட்டில் நடக்க முடியும் ஆனால் நீ சொல்வது நடக்காது என அவள் அப்பா சிரமப்பட்டு  விளக்கினார்.  அரை மனதோடு அவள் தொடர்ந்தாள்.

அழகான மலை. அற்புதமான இயற்கை. கற்கண்டு போன்ற, கண்ணாடி உருகி ஓடுவது போன்ற ஓடை.   எல்லாம் இலயித்து திரும்பும் நேரம், கன மழை.  குடை உட்பட எந்த உடையாலும் தடுக்க முடியாத அளவு தொடர், அடர் மழை முழுதாக இரண்டரை கிலோமீட்டர் திரும்பி நடக்க வேண்டும்.

வழுக்கி விடும் பாறைகள் வழியில்.  கிழித்துவிடும் என பயமுறுத்தும் முட்கள் கொண்ட செடிகள் பக்கவாட்டில், தெப்பலாக நனைந்தோம்.  முன்னதாக, குளித்துவிட்டு மாறுடை அணிந்து கொண்டோம். குளித்த ஆடைகளை நெகிழிப்பைக்குள் (பிளாஸ்டிக்) ஈரம் வெளிவர கூடாது என வைத்திருந்தோம். ஆனால் மழைக்கு எல்லாம் நனைய மற்றொரு பிளாஸ்டிக் பைக்குள் பணங்காசு, செல்லிட தொலைபேசி போன்றவற்றை ஈரம் உள்ளே வர கூடாது என வைக்க வேண்டி வந்தது.  நகரத்திற்குள் நாலு துளி விழும் முன் தயங்கி ஒடுகின்றவர்கள்.

வாழ்க்கையில் இயற்கை எவ்வளவு விசித்திரங்களை கற்றுத் தருகின்றது. காடே வெள்ளக்காடாய் போனது. வழிகாட்டி இல்லாவிட்டால்… இருந்தும் சொல்லாவிட்டால்… தண்ணிக்குள்ளே எங்கே… கால் வைப்பதென… ஆழந்தெரியாமல்… காலைவிட தெரியாமல் போயிருக்கும்.

இப்போது குஷியைப் பார்த்தால் … அவள் பேரைப்போலே ஒய்யாரமாக குதியாட்டம் போட்டுக் கொண்டு இருந்தாள்.   மனது எப்படி மாறிப்போய்விட்டது பாருங்கள். மழை, இயற்கை அவளை நனைத்துப் பிழிந்துவிட்டது. தயக்கம் வழிந்தோடிவிட்டது.  சுமந்து சென்ற எல்லாமே நனைந்து போயிருந்த பொழுதும் மனசு இலேசானதாக உணர்ந்தோம். தெரிந்த அரைகுறைத் தெலுங்கில் சத்தியவேடு சுப்பாராவோடு, சம்சாரித்த (மலையாளத்தில் பேசின என்று அர்த்தம்) சந்தோஷம் நீண்ட நேரம் ஒட்டிக்கொண்டு வந்தது?  வெளியூர்க்காரர் இருட்டுக்கும் உள்ளுர்க்காரர் ஆற்றுக்கும்

பயப்படமாட்டார் என்கின்ற பொன்மொழிக்கு பொருள் புரிந்தது.

ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு (ஏன் எப்பொழுது பார்த்தாலும் ஐ.ஏ.எஸ் மட்டுமே சொல்லிக்கொண்டு, எல்லாமே ஒரே தேர்வுதானே)  உள்ள புது பாடத்திட்டத்தில் இன்னும் என்னவெல்லாம் மனரீதியாக உள்ளதென பார்க்கலாம்.  தத்துவம், மேலை கீழை நாடுகளின் தத்துவ மேதைகள் அவர்கள் சொன்ன விஷயங்கள், சமூக கண்ணோட்டத்தில் உளவியல் அதாவது சமூக உளவியல், உணர்வுப் பகிர்வு (ங்ம்ல்ஹற்ட்ஹ்) அதாவது அடுத்தவங்களோட மனச புரிஞ்சுக்க முயற்சிக்கின்றது, இப்படி பல விஷயங்கள் புதுசா இருக்குங்க.

புத்தக வேண்டுதல் பட்டியலே! இல்லாமல் எல்லாம் புதுசா ஆரம்பிக்கிறாங்க; போட்டியாளர்கள். அதனால அடுத்த வருஷம் எழுதலாம் என நெனச்சான் நண்பன் கமலக் கண்ணன்.   அதனாலேயே! ஏன்

இந்த வருஷம் எழுதலாம்னு நெனக்க கூடாது என்றான் வெறும் கண்ணன்… இந்த பழக்கப்பட்ட போட்டி உலகில்  பழக்கப்படாத மனோதத்துவ பாடத்தோடு பழகிப் பார்த்தால் இனிக்கின்றது.

முன்பு எழுப்பிய கேள்விக்கு விடை சொல்வோம். அப்டிட்டியூட் (Aptitude) ஒரு விஓயத்தை கற்றுக்கொள்கின்ற திறமை என்று சொல்லப்படுகின்றது.  அட்டிட்டியூட் (attitude) எனில் அவ்வாறு கற்றுக் கொள்கின்ற திறமையை பயன்படுத்துவதற்கு இருக்கின்ற ஆசை என்று சொல்கின்றனர்.  இந்தக் கட்டுரைலயிலேயே நம்ப பார்த்த குஷிக்கும் ஈரத்திற்குமான பொருத்தத்தை பற்றி எடுத்துக் கொள்வோம். குஷி ஈர காலணியோடு நடக்க கற்றுக்கொண்டழ அப்டிட்டியூட் மாற்றம்.  அவள்  சந்தோஷமாக முகமலர்ச்சியோடு சிரித்துக்கொண்டே, தான் ஈரக்காலில் நடக்க முன்பு அவஸ்தைப்பட்டோம் என்பதையே மறந்து மனம் இலயித்துப் போய் நடந்தது அட்டிட்டியூட் மாற்றம். இதை எழுதும் போது கூட ஒரு முறை ‘ட’வுக்கும் ‘ப’வுக்கும் மாறிப்போய் குழப்பம் வந்தது. தத்துவமே இப்படிப்பட்ட பாடம்தான்.  மனோதத்துவம் படித்தால் மனோலயம் வருமென்று சொல்கின்றார்கள்.  படிக்காவிட்டால், வரும் வாய்ப்பு குறைவு, என்று சொல்லலாம்.

அடுத்தாக பிடித்த தலைவர் யார் என்றும்… அவரின் பாதிப்பால் உங்களிடம் எழுந்த பண்பு நலன் மாற்றம் குறித்தும் கேட்கப்பட்டிருந்த கேள்விக்குப் போவோம்.  இந்தக் கேள்வியை அப்படியே எடுத்து கண்டை மூடிக்கொண்டு ஐந்தாம் வகுப்புக்கு மேலான (இப்போதெல்லாம் எல்.கே.ஜி,யிலேயே அலெக்ஸாண்டர் குதிரை பூசெபாலஸ்… பேரை கேட்கறாங்கப்பா) பேருடைய கேள்வித்தாளிலும் வைத்துவிடலாம்.

ஒரு ஆட்சிப்பணி தேர்வு பதில்தாளில் இந்தக் கேள்விக்கான பதில் எப்படி இருக்க வேண்டும் என்று வடிவமைக்க கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு (இதுவும் பூசெபாலஸே) யோசிக்கையில் … ரிச்சர்ட் ஏ. பேரோன் என்கின்ற பேராசிரியர் எழுதிய சமூக உளவியல் புத்தகம் கிடைத்தது.

அதில் தலைமைப்பண்பு பற்றி பல குணநலன்களைகுணாதிசயங்களை அலசி ஆராய்ந்திருக்கிறார். அதில் சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே தருகின்றோம்.  உலகப் புகழ் பெற்ற தலைவர்களிடம் குணநலன் ஒற்றுமை இருக்கா? என்று பார்த்தால் வேறுபாடுகள்தான் அதிகமாக இருக்கறதா, ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறாங்க. விடாமுயற்சி, வீரம் போன்ற சில விஷயங்களை சொன்னாலும் தலைவர்கள் ஒவ்வொருத்தரும் வித்தியாசப்பட்டு நிக்கிறாங்களாம்.

பொதுவாக தலைவர்கள் இரண்டு வகையாம் சரித்திரமாற்றம் ஏற்படுத்தும் தலைவர்கள் அல்லது சாதாரண மாற்றம் ஏற்படும் தலைவர்கள். மகாத்மாகாந்தி மாதிரியானவர்கள் முதல்வகை.   கல்பனா சாவ்லா போன்றவர்கள் இரண்டாவது வகை.

இந்தப்புத்தகத்தில் காதல் என்றும் ஒரு தலைப்பு இட்டு அதை விளக்கமாக ஆராய்ச்சியும் செய்யப்பட்டுள்ளது.  யு.பி.எஸ்.ஸி கேள்வியிலும் பாலின வேறுபாடுகள் மற்றும் இருபாலாருக்கான அலுவலக ரீதியான தகவல் பரிமாற்றம் குறித்த கேள்விகள் வர வாய்ப்புள்ளது.  ஒரு கேள்வி எடுத்துக்காட்டில் தரப்பட்டும் உள்ளது.  புரிதல் சிக்கல்களை இந்நதப் பாடம் தீர்த்துவைக்க வாய்ப்புள்ளது.  உதாரணமாக நட்பு, காதல் வேறுபாடு குறித்து பேச தொடங்குகையில் இப்புத்தகம் பின்வருமாறு சொல்கிறது. “பொதுவாக காதலில்  விழுந்தேன் என்று சொல்கின்றோம்நட்பில் விழுந்தேன் என்று சொல்வதில்லை !!” படித்துக் கொண்டிருக்கையில் நேரம் போவதே தெரியாமல் அழைத்து செல்கின்றது  மனோதத்துவ முறையில் வடிவமைக்கப்பட்ட இப்புத்தகம்.

செகுவேராவின் பைக் பயணங்கள் குறித்த புத்தகம் ஒன்றை நெடுநாளாகத் தேடியலைந்தும் கிடைக்கவில்லை.  மதுரையிலிருந்து மனம் அறிந்தது போல் வந்து சேர்ந்தது.  புரட்டிய போது முதல் வரியே மனதை புரட்டிப் போட்டது. எழுத்தளாரே, சற்று வயதான பிறகு, தனது எழுத்தக்களையே பார்த்து, இதை எழுதிய நான், இப்போது இல்லை. இடை எழுதிய நான் எனக்கே இன்னொருவனாக தெரிகின்றேன் என்று ஆரம்பித்திருப்பார். ‘அவன், ஆளே, மாறிப் போய்ட்டாண்டா? என்று சொல்லிக் கேட்டிருக்கிறோமல்லவா? மனோலயம் மாறிவிடுகையில் வாழ்க்கையில் சுருதி மாறிவிடுகின்றது. அதைத்தான் சொல்ல வருகின்றோம். எது எப்படியானாலும்… மழை பொழிகையில் நம் காலணியை! என்ன செய்யப் போகின்றோம்!!

நனைத்து விடுவோமா!! சந்தோஷமாக!?

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2013

உள்ளத்தோடு உள்ளம்
“விருந்தோம்பல்”
தன்னம்பிக்கை மேடை
சாம்பியன் உருவான கதை
நோபல்பெற்றுத்தந்த‘கடவுள் துகள்’
மரித்துப் போகும் வரை சாதனை “நிக் வாலெண்டா”
படிப்பது எப்படி?
மார்ஸ் மிஷன்
ரஸியா சுல்தான்
எப்படி ஜெயித்தார்கள்
நீங்கள்சாதனையாளரே!
உலகைமாற்றிய சிறுபொறி
உழைப்பில் ஆர்வம்! உயர்வில் ஆனந்தம்!!
மனோலயம்