Home » Articles » கனவு மெய்ப்பட

 
கனவு மெய்ப்பட


சித்ரகலா S
Author:

தன் துறையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிப்பது எவ்வளவு கஷ்டமோ அதைவிடக் கஷ்டம் அந்த இடத்தைத் தக்க வைப்பது. நிகழ்காலத்தில் அதற்குச் சரியான உதாரணம், டென்னீஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ்.

டென்னிஸ் ரேங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து, அதை இழந்து, மீண்டும் அதை எட்டிப் பிடித்திருக்கும் செரினாவின் போராட்டக் கதை… அத்தனை வலி… போராடுபவர்களுக்கான வழி…!

முதலில் ஒரு சின்ன ஃபிளாஷ்பேக் செரினாவின் தந்தை ரிச்சர்ட். ஒரு டென்னிஸ் பைத்தியம். தனது மகள்கள் புகழ்பெற்ற டென்னிஸ் பிளேயர்கள் ஆக வேண்டும் என்று முடிவெடுத்தவர், செரினா மற்றும் அவரது அக்கா வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் சிறுமிகளாக இருக்கும்போதே அவர்களிடம் குட்டி டென்னிஸ் பேட்டைக் கொடுத்துவிட்டார்.

தன் துறையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிப்பது எவ்வளவு கஷ்டமோ அதைவிடக் கஷ்டம் அந்த இடத்தைத் தக்க வைப்பது. நிகழ்காலத்தில் அதற்குச் சரியான உதாரணம், டென்னீஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ்.

டென்னிஸ் ரேங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து, அதை இழந்து, மீண்டும் அதை எட்டிப் பிடித்திருக்கும் செரினாவின் போராட்டக் கதை… அத்தனை வலி… போராடுபவர்களுக்கான வழி…!

முதலில் ஒரு சின்ன ஃபிளாஷ்பேக் செரினாவின் தந்தை ரிச்சர்ட். ஒரு டென்னிஸ் பைத்தியம். தனது மகள்கள் புகழ்பெற்ற டென்னிஸ் பிளேயர்கள் ஆக வேண்டும் என்று முடிவெடுத்தவர், செரினா மற்றும் அவரது அக்கா வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் சிறுமிகளாக இருக்கும்போதே அவர்களிடம் குட்டி டென்னிஸ் பேட்டைக் கொடுத்துவிட்டார்.

ஆனால் சகோதரிகள் பயிற்சிக்குச் சென்ற இடத்தில் ஆப்பிரிக்க வழிவந்த அமெரிக்கர்கள் என்பதால், நிறத்தாலும், இனத்தாலும் சக வீரர்களால் அவமானத்திற்கு ஆளானார்கள். அதனால் ரிச்சர்ட் தானே தன் மகள்களுக்கு டென்னிஸ் கற்றுக்கொடுத்தார். இதனால் தன் குழந்தை பருவத்தின் இயல்பான சந்தோசங்களைப் பறிகொடுத்து, எந்நேரமும் பயிற்சி என்றே கஷ்டப்பட்டிருந்ததாலும் ஒவ்வொரு வெற்றியின் போதும் செரினா தவறாமல் சொல்லும் வார்த்தைகள் ‘ஐ லவ் மை டாட்’.

செரினா எந்த அளவுக்கு வெற்றியைத் தீவிரமாகத் துரத்தினாரோ, அதே அளவுக்கு வலிகளும், காயங்களும் அவரைத் துரத்தின. 1995ம் ஆண்டு முதன்முறையாக சர்வதேச டென்னிஸில் அறிமுகம் ஆகும்போது செரினாவின் வயது 13 தான்.

முதல் சுற்றிலேயே தோல்வி. விரக்தியில் டென்னிஸ் கோர்ட்டை விட்டு வெளியேறியவர், ஒரு வருடம் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை. முழுதாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு, கடும்பயிற்சி மற்றும் முயற்சிக்குப் பின் 1997ல் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 304ம் இடம் பிடித்தார்.

அப்போது ஏழாவது ரேங்கில் இருந்த மேரி பியர்ஸையும், நான்காவது இடத்தில் இருந்த மோனிகா செலஸையும் செரினா அடித்து துவம்சம் செய்ய, ‘யார் இந்த பொண்ணு’ என்று டென்னிஸ் அரங்கின் கவனத்தை ஈர்த்தார். தொடர் வெற்றிகளின் காரணமாக வருடக் கடைசியிலேயே செரினா ரேங்க் 99க்கு உயர்ந்தது.

செரினாவின் பலம் அவரது சர்வீஸ். கிட்டத்தட்ட கறுப்புக் குதிரை மாதிரி இருக்கும் செரினாவின் ஒவ்வொரு சர்வீஸும். மணிக்கு 208 கி.மீ. வேகத்தில் பறக்கும். மற்ற எந்தப் பெண் வீராங்கனைகளிடமும் இல்லாத அஸ்திரம் இது.

சர்வீஸ் வேகத்தோடு வியூக விவேகங்களும் கூட்டணி வைக்க, முதல்நிலை வீராங்கனை மார்டினா ஹிங்கிஸைத் தோற்கடித்து முதல் கிராண்ட்ஸ்லாம் வெற்றி, அமெரிக்க ஓப்பன் சாம்பியன் என அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் இரண்டே வருடங்களில் டாப் 5 ரேங்குக்குள் வந்தார்.

ஆனால் அந்த வருடமே தோல்விகளும் அவரைத் துரத்தின. ஓய்வு இல்லாத தொடர் பயிற்சி அவருக்குக் கால் வலியைப் பரிசாகத் தந்தது. 2000, 2001 முழுக்க செரினா மருத்துவமனைக்கும், வீட்டுக்கும் தான் அலைந்து கொண்டிருந்தார். கால்வலி, தசைநார் கிழிந்தது, இடுப்பு வலி எனப் போட்டிகளின் போதே கோர்ட்டில் சுருண்டு விழும் செரினாவை டென்னிஸ் உலகம் கவலையோடு கவனித்துப் பின் மறந்துவிட்டது.

2010ல் காலில் கண்ணாடி கிழித்து 18 தையல்கள் போடப்பட்டன. 2011ல் நுரையீரலில் ரத்தக்கட்டிகள் உருவாகின. ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை குறைந்து போய் மரணப் படுக்கைக்கே சென்று மீண்டுவந்தார்.

2013 ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓப்பனில் காலிறுதிக்கு முன்னேறினார். கால் மூட்டுவலி பாடாய்படுத்த, மருத்துவர்கள் சகிதம் தான் மைதானத்துக்குள் அடியெடுத்து வைத்தார். ஆனால் சிறிது நேரத்திலேயே வலி வேலையைக் காட்டியது.

ஆனாலும் மனம் தளராமல் கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் ஆடிவிட்டுத்தான் டென்னிஸ் கோர்ட்டை விட்டு வெளியே வந்தார். அந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலும் அது செரினாவின் மன உறுதியைக் காட்டியது.

இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவிலும் 30 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 46 ஒற்றையர் பிரிவு பட்டங்கள், 4 ஒலிம்பிக் தங்கம் என 10,590 புள்ளிகளோடு செரினா மீண்டும் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை என்ற இடத்தைப் பிடித்திருக்கிறார்.

‘எனக்கு டென்னிஸ் மட்டுமே தெரியும். வலிகளைத் தாண்டி நான் டென்னிஸைக் காதலிக்கிறேன். வீல் சேரில் தூக்கிச் செல்லும் நிலைமை வந்தாலும், டென்னிஸ் கோர்ட்டை விட்டு வெளியேற மாட்டேன். இது இப்போது மட்டுமல்ல; எப்போதும் என் நினைவில் இருப்பது. இந்த எண்ணமே என்னை வெற்றி நோக்கி உந்தித் தள்ளுகிறது’. இது செரினாவின் ஸ்டேட்மெண்ட். அது தான் நமக்கும்!…

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2013

தன்னம்பிக்கை மேடை…
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி–பாண்டிய மன்னனும் என் உணர்வுகளும்
உனக்குள்ளே உலகம்-40–மாணவர்களைத் தாக்கும் ஆயுதங்கள்
சாதிக்க வயது தடையல்ல 73 வயது மூத்த குடிமகனின் சாதனை
பொய் கடிகாரம்
இந்தியா விரும்பும் ஆசிரியர்கள்
கனவு மெய்ப்பட
நம்மை நாம் நம்ப வேண்டும்
புகைப்படக் கலையில் புதிய மாற்றம்…
சான்றோர் சிந்தனை “காலம் மாறும்”
வளர்ச்சிக்கு வழி
சினத்தைக் கையாள்வது எப்படி?
உங்கள் வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்
நீங்கள் சாதனையாளரே
மனக்கண்ணாடி
விடாத முயற்சி தொடாத எல்லை… இல்லை