Home » Articles » உங்கள் வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்

 
உங்கள் வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்


மணவழகன் ஜே
Author:

ஜே. மணவழகன்

ஆத்தூர்

94438 13657

ஒரு விழாவிற்கோ, கூட்டத்திற்கோ செல்லும்போது அங்கு நடைபெறும் நிகழ்ச்சி நிரல் பற்றி கேட்கிறோம். துவங்கும் நேரம், எவ்வளவு நேரம் நிகழ்ச்சி, யார் யார் பங்கு பெறுகிறார்கள். தலைப்புகள் அல்லது முக்கியமானவைகள் குறித்த விசயங்களைக் கேட்டுக் கொள்கிறோம். ஒரு மணி அல்லது இரண்டு மணிநேரம் நிகழ்விற்கு “நிகழ்ச்சி நிரல்” கேட்கிறோமே, “நமது வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்” குறித்து சிந்தித்திருப்போமா?

நூறு சதவீதம் நாம் திட்டமிட்டபடி வாழ்க்கை நடக்காது என்றாலும், நமது வாழ்க்கை குறித்த ஏதேனும் ஒரு திட்டம் அல்லது இலக்கு நம்மிடம் உள்ளதா? புள்ளி விவரப்படி மூன்று சதவீதம் மக்கள் மட்டுமே தங்கள் வாழ்க்கை குறித்த இலக்கை ‘எழுதி’ வைத்துள்ளனர். ஒரு சதவீதத்தினர் மட்டுமே தினசரி இலக்கின்படி வாழ்க்கை செல்கிறதா? என ஆராய்ந்து வாழ்கின்றனர்.
இலக்கு, இலட்சியம், குறிக்கோள் என்பதை குறித்து பெரும்பாலோர் சிந்திக்கின்ற அளவிற்கு (சிலர் சிந்திப்பதே இல்லை) எழுதுவதோ, அதனை கடைபிடிப்பதோ இல்லை.
உதாரணத்திற்கு உடற்பயிற்சி, யோகா, வாக்கிங் உடலுக்கு மிகவும் நல்லது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இதே இலக்கினை அடிக்கடி எடுக்கிறோம். அப்படியானால் அதன் பெயர் இலட்சியமா அல்லது ஆசையா? ஆசை என்பது அடிக்கடி மாறிக்கொண்டு இருக்கும். இலட்சியம் அல்லது இலக்கை எதற்காகவும் மாற்றக்கூடாது.
இலக்கினை இனியாவது நிர்ணயித்துக் கொள்வோம். அது குறித்து இனி சிந்திப்போம்.

எதில் இலக்கினை ஆரம்பிப்பது என்ற சந்தேகம் இருந்தால், நம் முன்னேற்றத்தில் உண்மையிலே அக்கறை கொண்டவர்களிடம் கூச்சப்படாமல் கேட்க வேண்டும். நமது ஆர்வம் எதில் உள்ளது, எதை செய்தால் சலிப்பு ஏற்படாமல் உள்ளது, எதை விரும்பிச் செய்கிறோம், இவை நமது வளர்ச்சிக்கு உதவுமா? முடிவெடுப்போம். நமது இலக்கு குறித்து தெளிவாக சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும். வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரலை கீழ்க்கண்டவாறு எழுதுங்கள்.

பெயர்:

வயது:

கல்வித்தகுதி:

தொழில் அனுபவம்:

ஆர்வம் உள்ளவைகள்:

இலக்கு:

அடைய வேண்டிய தேதி:

இலக்கை அடைய உள்ள தடைகள்:

1………

2………

3………

தடைகளைத் தவிர்க்கும் வழிகள்:

1………

2………

3………

4………

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2013

தன்னம்பிக்கை மேடை…
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி–பாண்டிய மன்னனும் என் உணர்வுகளும்
உனக்குள்ளே உலகம்-40–மாணவர்களைத் தாக்கும் ஆயுதங்கள்
சாதிக்க வயது தடையல்ல 73 வயது மூத்த குடிமகனின் சாதனை
பொய் கடிகாரம்
இந்தியா விரும்பும் ஆசிரியர்கள்
கனவு மெய்ப்பட
நம்மை நாம் நம்ப வேண்டும்
புகைப்படக் கலையில் புதிய மாற்றம்…
சான்றோர் சிந்தனை “காலம் மாறும்”
வளர்ச்சிக்கு வழி
சினத்தைக் கையாள்வது எப்படி?
உங்கள் வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்
நீங்கள் சாதனையாளரே
மனக்கண்ணாடி
விடாத முயற்சி தொடாத எல்லை… இல்லை