Home » Articles » என் பள்ளி

 
என் பள்ளி


சதீஷ்குமார்
Author:

உடுமலைப்பேட்டை பூளவாடிக்கு அருகில் உள்ள பொம்மநாயக்கன்பட்டி என்ற குக்கிராமத்தில் பிறந்த நான் ஆர்.கே.ஆர். மேனிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பள்ளியில் படிக்கும்போது நான் சராசரி மாணவன் தான். லட்சிய மாணவனாக எப்போதும் இருந்தது கிடையாது. மாணவப் பருவத்தில் மிகவும் அராஜகமாகச் செயல்பட்டேன். எப்போதும் அலட்சியமாகவே நடந்து கொண்டேன். நிறைய தவறுகள் செய்தேன். ஒருமுறை பஸ் மீது கல்லெரிந்து கலாட்டா கூட செய்திருக்கிறேன். இதெல்லாம் நான் ஆர்.கே.ஆர். பள்ளியில் சேவருதற்கு முன்.

எப்போது இந்த பள்ளியில் சேர்ந்தேனோ அன்றிலிருந்து என் வாழ்க்கைப் பாதை மாறத் தொடங்கியது. ஒழுக்கம்னா என்ன? படிப்புன்னா என்ன? விளையாட்டுன்னா என்ன? வாழ்க்கைன்னா என்ன? நாட்டுப்பற்றுன்னா என்ன? என்று அனைத்தையும் இந்த பள்ளிதான் எனக்குக் கற்பித்தது.

இன்று இந்திய கடற்படையில் விமான தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றுகிறேன் என்றால் அதற்கான விதையை விதைத்தது இந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. ஆர். கே. ராமசாமி ஐயாவும், அந்தப் பள்ளியின் ஆசிரியர்களும் தான்.

தலைமையாசிரியர் ஆர்.கே.ஆர். அவர்கள் மிகவும் அற்புதமான மனிதர். சவால்களை எதிர்கொள்ளவும், தடைகளைத் தகர்க்கவும், சாகசங்களை ரசிக்கவும் கற்றுக்கொடுத்தார். மிகவும் உத்வேகத்தை ஊட்டக்கூடிய நபர். ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் எனக்குள் விதைத்தவர். வாழ்க்கையை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஏதாவது சாதிக்க வேண்டும் என்று என்னை நல்வழிப்படுத்தியவர்.

வாழ்க்கை முழுவதுமே தேடலும், விடாமுயற்சியும் கொண்டவனாக என்னை மாற்றியமைத்ததில் இப்பள்ளியின் ஆசிரியப் பெருமக்களுக்கு முக்கிய இடமிருக்கிறது. வாழ்க்கை என்பது நமக்கு என்ன கிடைத்திருக்கிறது என்பதைப் பொறுத்தது அல்ல, அதை எப்படி பார்க்கிறோம் என்பதைப் பொருத்தது என்று எனக்கு அந்த ஆசிரியர்கள் தான் கற்றுக்கொடுத்தார்கள்.

ஒவ்வொரு வீழ்ச்சியில் இருந்தும் மீண்டெழுந்து வெற்றியைப் பெற வேண்டும் என்ற தன்னம்பிக்கையையும், உத்வேகத்தையும் கொடுத்ததால் தான் நான் இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறேன். 6ம் வகுப்பில் தோல்வியைத் தழுவி இந்தப் பள்ளியில் வந்து சேர்ந்த நான் பத்தாம் வகுப்பில் 478 மதிப்பெண்களைப் பெற்றேன். அதற்குக் காரணமான அருமையான, நுட்பமான ஆசிரியர்களைப் பெற்றது என் அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன்.

ஆர்.கே.ஆர். மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போது எனக்கு ஏற்பட்ட இலக்குகளில் முக்கியமானது கடற்படையில் சேர்வதுதான். கடினமான பரிட்சையிலும், நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற்றால் தான் அந்தப் பதவியல் சேர முடியும். உடல் வலிமை, மன வலிமை என பல வகைகளிலும் தேர்வு நடக்கும் என்பதையெல்லாம் எனக்கு எடுத்துக்கூறியதுடன் அவற்றில் வெற்றி பெறுதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள உதவி செய்தவர்கள் இந்தப் பள்ளியின் ஆசிரியர்கள்.

பிற துறைகளோடு ஒப்பிடும்போது விமான தொழில்நுட்ப பணி மிகவும் கடுமையானது. இந்தப் பணியில் சேர்வதற்கு எதிர்கொள்ள வேண்டிய சிரமங்களை நினைத்துப் பார்க்கவே முடியாது. இந்தப் பணியில் சேர்வதற்கு நடத்தப்பட்ட தேர்விலாக இருக்கட்டும், தேர்ச்சி பெற்ற பின்னர் பயிற்சியிலாகட்டும் என்னுடன் கலந்து கொண்டவர்கள் பட்ட கஷ்டத்தை இன்று நினைத்தாலும் கடினமாகத் தோன்றும். ஆனால் எனக்கு அந்த கஷ்டம் இல்லை. ஏனென்றால் அந்தப் பயிற்சியை சிறு வயதில் இருந்தே எனக்கு இந்த பள்ளி கற்றுத் தந்திருந்தது.

தினமும் அதிகாலையில் எழுவது, படுக்கையில் இருந்து எழுந்ததும் மைதானத்தைச் சுற்றி ஓடுவது, உடற்பயிற்சிகள் செய்வது, வேறு சில பயிற்சிகள் முடித்துவிட்டு களைத்துப்போய் குளிக்கப்போவது என்று நான் பள்ளியில் செய்தவைகளையே அங்கும் செய்ய வேண்டி இருந்ததால் எனக்கு பெரிய அளவில் கஷ்டம் தெரியவில்லை.

இப்படி ஒவ்வொரு விசயத்திலும் மாணவர்களின் இயல்பான இலக்கைக் கண்டுபிடித்து வளர்த்தெடுப்பதில் ஆர்.கே.ஆர். மேல்நிலைப் பள்ளி தலைசிறந்த பள்ளி என்றே கூறுவேன்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2013

உனக்குள்ளே உலகம்-34
என் பள்ளி
வேகமாய் வருகிறது வெற்றி – 5
டாப் 10 பொறியியல் படிப்பு
மர்மமாய் இருக்கும் மனசு – 4
படிப்பது சுலபம்
பசுமரத்தாணி
புனித யாத்திரை – கயிலயங்கிரி
சிகரத்தை நோக்கி…
வெற்றிக் கனிகளைச் சுவையுங்கள்
அண்டார்டிகாவில் பாதாள ஏரியில் நுண்ணுயிரிகள்
வேலை கலாச்சாரம்
பிப்ரவரி மாத முக்கிய தினங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
சமூக நலனுக்கு பாதையாகு! சம காலத்தில் மேதையாகு!!