Home » Articles » விவசாயத்தின் இப்போதைய தேவை

 
விவசாயத்தின் இப்போதைய தேவை


செந்தில் நடேசன்
Author:

ஃபோர்பஸ் (Forbes) பத்திரிக்கை ஆசியாவிலேயே இந்தியாவில்தான் அதிக அளவு கோடீஸ்வரர்கள் உள்ளார்கள் என்று கூறுகிறது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்திருக்கிறது.
தொழிற்சாலைகளில் அதிகப்படியான உற்பத்தி, மென்பொருள் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி, தொலைத்தொடர்புத் துறையிலும், சேவைத் துறையிலும் உயர்ந்த நிலையை அடைந்தது என்று பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு நிறுவனங்களின் அதிகமான முதலீடு தான் இத்தகைய வளர்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இப்படி உலகளவில், பல்வேறு பொருளாதார இடர்பாடுகளுக்கு இடையிலும், பல துறைகளிலும் நல்ல முன்னேற்றமடைந்த போதிலும் வேளாண்மையும், அதைச் சார்ந்த துறைகளும் மகிழ்வளிக்கும் அளவில் வளரவில்லை.
பல காரணங்களால் பரம்பரையாக விவசாயம் செய்யும் விவசாயிகளும் வேளாண்மையை வெற்றிகரமாக செய்ய இயலாத நிலைக்குத் தற்போது தள்ளப்பட்டுள்ளனர். இதனால் உணவு தானியங்களின் உற்பத்தி தேக்கநிலை அடைந்துவிட்டது. வேளாண் உற்பத்தியை, குறிப்பாக உணவு தானியங்கள் உற்பத்தியைப் பெருக்க துரிதமாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இத்தருணத்தில் விளைநிலங்களின் பரப்பளவும், குறைந்து கொண்டு போவது மிகவும் கவலைப்பட வேண்டிய ஒரு நிலைப்பாடாகும்.
உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய சூழ்நிலை ஒருபுறம் இருந்தாலும், உற்பத்தி செய்த உணவுப் பண்டங்களை முறையாக சேமிப்பது என்பதும் மிகப்பெரிய சவால். விவசாயிகள் உற்பத்தி செய்யும்போது பருவநிலை சாதகமாக இருந்தால் உற்பத்தி மிக அதிக அளவில் கிடைக்கிறது. உதாரணமாக, தக்காளி போன்ற காய்கறிகள் சந்தையில் ஏற்படும் ஏற்றஇறக்கங்களை அனைவரும் கண்கூடாகப் பார்க்கிறோம். கோடைகாலத்தில் தக்காளி விலை அதிகமாகவும், அடைமழை காலங்களில் தக்காளி உற்பத்தி அதிகமாக இருந்தால் அதைச் சேமித்து பதப்படுத்தும் வசதி இல்லாத காரணத்தால் தக்காளியின் விலை கிலோ 1 ரூபாய் வரை குறைந்தும் விடுகிறது.
உற்பத்தியைப் பெருக்குவது மட்டும் ஒருபுறம் இருக்க உற்பத்தி செய்த உணவுப் பொருட்களை சந்தையில் போதுமான விலை கிடைக்கவில்லை என்றால் எப்படி பதப்படுத்தி, மதிப்பீட்டுப் பொருளாக விற்பனை செய்வது போன்ற உத்திகளைக் கையாண்டால் விவசாயம் இலாபகரமான தொழிலாக செய்வது மட்டும் அல்லாமல், தொடர்ந்து விவசாயம் செய்யும் மக்களின் எண்ணிக்கையும் குறையாது.
விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாயம் செய்தால், உணவு உற்பத்தி பன்மடங்கு உயரும். விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்தலாம். நாட்டில் மற்ற துறைகளின் வளர்ச்சிக்கும் நல்ல உதவிகரமாக இருக்கும்.
இஸ்ரேல் நாடு 3% அளவே நீரைக் கொண்டிருந்தாலும், வேலை ஆட்களே இல்லாத நிலையிலும், நிலத்திற்கு பதில் பாறை, சுண்ணாம்பு, பாலை நிலங்கள் என்றுள்ள நிலையிலும் எவ்வாறு விவசாய உற்பத்தித் திறனில் நம்பர் 1-ஆக உள்ளது என்பதை நாம் சிந்தித்துப் பார்த்தால், அந்நாட்டு விவசாயிகள் காலத்திற்கேற்ப புதிய கருவிகளையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவது தான்.
இன்று நிலவும் மிகவும் இக்கட்டான விவசாய சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை உள்ளவர்கள் தொழில்நுட்பங்கள், புதுமை மற்றும் அறிவார்ந்த செயல்முறைகளுக்கு அதிமுக்கியத்துவம் தருவார்கள். நேர்மறை மனோபாவம் கொண்ட இவர்கள் எல்லாப் பிரச்சனைகளுக்கும், அதற்குள்ளேயே தீர்வுகளைக் காண்பார்கள். இவர்களுக்கு விவசாயத் தொழில் ஒரு சுமையோ, சாபமோ, வறுமையோ அல்லஙு

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2012

ஏமாற்று வேலைகள்…..எச்சரிக்கை நடவடிக்கைகள்!
சாதிக்கலாம் வாங்க
நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்
உங்கள் பிள்ளைகள் புத்திசாலிகளாக வேண்டுமா?
உலக மக்கள் தொகை தினம்
விவசாயத்தின் இப்போதைய தேவை
எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!!
விவசாயம் + தொழில்நுட்பம்
wifi வலையமைப்பு
அம்மாவின் கைகள்
பாதை மாறிய பயணங்கள்
அந்நிய முதலீடும் பண வீக்கமும்
உற்சாக ஊற்று உங்களுக்குளே
மாறுவேஷம்
உங்களால் முடியும்
எழவேண்டும் தன்னம்பிக்கை கலாச்சாரம் …