Home » Cover Story » உள்ளத்தில் திடம்!! வரலாற்றில் இடம்!!

 
உள்ளத்தில் திடம்!! வரலாற்றில் இடம்!!


சுந்தரமூர்த்தி எஸ்.கே
Author:

டாக்டர் எஸ்.கே. சுந்தரமூர்த்தி, M.S., FRCS (Edin., UK), DORCS (Eng)
நிறுவனர், லோட்டஸ் கண் மருத்துவமனை
நேர்முகம் : என். செல்வராஜ்
டாக்டர் எஸ்.கே. சுந்தரமூர்த்தி, உலகப் புகழ்பெற்ற கண் அறுவை சிகிச்சை நிபுணர், லோட்டஸ் கண் மருத்துவமனையின் நிறுவனர், சிறந்த ஆசிரியர், மனிதநேய மிக்கவர், சிறந்த பேச்சாளர், சமூக சேவையில் ஆர்வம் உள்ளவர்.
தமிழ்நாடு மருத்துவக்குழு, அகில இந்திய கண் மருத்துவ சங்கம் மற்றும் தமிழ்நாடு கண் மருத்துவச் சங்கத்தின் உறுப்பினர்.
பேகோ சர்ஜரி, லாசிக் மற்றும் எபிலாசிக் சர்ஜரி உள்ளிட்ட அதிநவீன மருத்துவ முறைகளைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர். கண் மருத்துவத் துறையில் புதிய தொழில் நுட்பக்கருவிகளைத் தமிழக அளவில் முதன் முதலில் அறிமுகப்படுத்தக்கூடியவராக இருந்து வருபவர்.
கண்பாதுகாப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம்
நகர் மற்றும் கிராமப்புறங்களில் இலவச கண் பரிசோதனை
கண் பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி உள்ளிட்டவைகளை லோட்டஸ் கண் மருத்துவமனை மூலம் நடத்தி வருபவர்.
லயன்ஸ் கிளப்பின் சர்வதேச ஐ கேர் எக்ஸலன்ஸ் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளவர்.
ஒவ்வொரு மனிதரும் ‘நல்ல மனிதன்’ என்று பெயரெடுத்து வாழ்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுதல் வேண்டும் என்பவர். இச்சிறப்புகளுக்குரிய அவரை நாம் டாக்டர் செந்தில் நடேசன் அவர்களுடன் நேர்முகம் கண்டோம். “திடமான உள்ளமும், தெளிவான பார்வையும் இருந்தால் வளமான வாழ்வு நிச்சயம்” என்றவருடன் இனி நாம்…
உங்களுடைய இளமைக்காலம், கல்வி குறித்து…
நான் பிறந்தது கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள செல்வக்குமரன்பாளையம் கிராமத்தில். தந்தை காளியண்ண கவுண்டர், தாய் சின்னம்மாள், மூத்த சகோதரர் என அளவான விவசாயக் குடும்பம். எங்கள் ஊர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். ஐந்தாம் வகுப்பிற்கு மேல் நான், சகோதரர், இருவரில் ஒருவர் மட்டுமே படிக்கட்டும், விவசாயத்தில் ஈடுபட ஒருவர் இருக்கட்டும் என தந்தை உத்தரவிட எனது படிப்பு முடிவுக்கு வந்தது. 3 வருடங்கள் தந்தைக்குத் துணையாக தோட்டத்தில் வேலை செய்தேன். அந்தச் சமயத்தில் எனது மூத்த சகோதரர் எதிர்பாராத விதமாக காலமானார். அவரை இழந்து தவித்துக் கொண்டிருந்த நேரத்தில், மாடு ஒன்றிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. கால்நடை மருத்துவரை அழைத்து வருவதற்காக கோபி விரைந்தேன். அப்போது டைமண்ட் ஜுபிலி பள்ளியில் 6ம் வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என்கிறஅறிவிப்பு பலகையைக் கண்டேன். படிக்க வேண்டும் என்கிறஆர்வத்தில் பள்ளிக்குள் சென்று நுழைவுத்தேர்வு எழுதி வந்துவிட்டேன். எங்கள் ஊர் ஆசிரியர் அந்தப்பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் என் நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணைப் பார்த்துவிட்டு என் தந்தையிடம் வந்து பேசினார். நல்ல மதிப்பெண்ணை சுந்தரமூர்த்தி எடுத்துள்ளான் பள்ளிக்கு அனுப்பி வையுங்கள் என்றார். நடந்த விபரத்தை தந்தையிடம் கூறினேன். பள்ளிக்குச் செல்ல அனுமதித்தார். என்னுடன் படித்தவர்கள் எல்லாம் மூன்று வகுப்புகள் முன்னே இருக்க, நான் 6ம் வகுப்பில் வயது முதிர்ந்தவனாக சேர்ந்தபோது கேலியும், கிண்டலும் இருந்தது. அதை பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளாமல் என்னுடைய இலக்கு கேலி செய்பவர்களுக்குப் பதில் தருவதல்ல… சாதிப்பது என்று பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தேன். பள்ளியில் இலக்கிய மன்ற செயலாளராக உயர்ந்தேன். நாடகங்கள் எழுதி அதில் நடிப்பது, கவிதைகள் எழுதுவது என வளர்ந்தேன். பி.யூ.சி. முடித்து உயர்கல்விக்குச் செல்லும்போது, தந்தையும், நண்பர்களும் என்னை மருத்துவப் படிப்பு படிக்கச் சொன்னார்கள். அதன் பேரில் சென்னை ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படித்து முதன்மை மாணவனாக வந்தேன்.
எம்.பி.பி.எஸ். முடித்தவுடன் மத்திய அரசின் மொபைல் யூனிட் ஹாஸ்பிட்டலில் 3 மாத காலம் கண் மருத்துவப் பிரிவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அரசுப்பணி கிடைத்தது. திருப்பூரில் ஐந்து வருடங்கள் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தேன். அப்போது சங்கர நேத்ராலயா, டாக்டர் பத்ரிநாத் அவர்கள் அமெரிக்காவில் இருந்து நம் நாட்டுக்கு வருகை புரிந்ததைக் கேள்விப்பட்டு அவரை சந்தித்தேன். அவரிடம் பணிபுரிய விருப்பம் கொண்டேன். அதற்காக தந்தையின் விருப்பத்தை மீறி அரசு பணியிலிருந்து விலகி அவரிடம் பணியில் அமர்ந்தேன். பின்பு ஐந்து வருட காலம் அரசுப் பணியில் ஈட்டிய பணத்தைக் கொண்டு மதுரை மருத்துவக் கல்லூரியில் 1980ம் வருடம் ங.ந. பட்டப்படிப்பு படித்தேன். அதன் பின்பு அங்கிருந்து லண்டன் சென்று எப்.ஆர்.சி.எஸ் (FRCS) படிப்பை எடின்பர்க் ராயல் காலேஜில் படித்தேன். ஊதஇஞ படிப்பை எடின்பர்க் இங்கிலாந்தில் முடித்தேன். படிப்பு முடிந்ததும் 7 வருடங்கள் அங்கிருந்த Guys, St. தாமஸ் போன்ற மருத்துவமனைகளில் பணியாற்றினேன். அப்போது துபாய் போன்றநாடுகளிலிருந்து 2ணீ இலட்சம் ரூபாய் சம்பளம் கொடுப்பதாக என்னை பல மருத்துவமனைகள் அழைத்த போதும் நான் செல்லவில்லை. கோவைக்கு வந்து பணியாற்றவேண்டும் என்கிற ஒரே எண்ணத்தில் அங்கிருந்து இங்கு வந்தேன்.
லோட்டஸ் கண் மருத்துவமனையின் தோற்றம், வளர்ச்சி குறித்து?
கோவை வந்தவுடன் பல்வேறு நிகழ்வுகளால் மீண்டும் வெளிநாட்டிற்கே கொஞ்சகாலம் சென்று பணிபுரியலாம் என்கிற எண்ணம் தோன்றியது. என் எண்ணத்தை சுவாமி சச்சிதானந்தாவிடம் கூறினேன். அவர் எங்கும் செல்ல வேண்டாம், இங்கேயே உங்கள் சேவை தொடரட்டும், நாங்கள் உடன் இருக்கிறோம், தனியாக மருத்துவமனையை உருவாக்குங்கள் என்றார். அவரின் ஆலோசனைப்படி லோட்டஸ் கண் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி அறுவை சிகிச்சை அறக்கட்டளையை (கர்ற்ன்ள் யண்ள்ண்ர்ய் தங்ள்ங்ஹழ்ஸ்ரீட் பழ்ன்ள்ற்) 1992ம் ஆண்டு துவக்கினேன். இரண்டு, மூன்று மருத்துவர்களை வைத்து மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது. 1994ம் ஆண்டு, கேட்ரேக்ட் (இஹற்ஹழ்ஹஸ்ரீற்) சர்ஜரி செய்வதற்கான அதிநவீன முறையை கோவைக்கு கொண்டு வந்தேன். மும்பாய் மற்றும் அகமதாபாத்தில் மட்டுமே இந்த சிகிச்சை முறைஅப்போது இருந்தது. இம்முறை கோவைக்கு வந்தபோது நல்ல ஆதரவு கிடைத்தது. ‘லோட்டஸ்’ கண் மருத்துவமனை வளர்ச்சியை நோக்கிப் பயணத்தை துவக்கியது. அதே ஆண்டு அன்னூர் கணேசபுரம், சங்கீத் நூற்பாலையின் உதவியுடன் 50 பேருக்கு இலவசமாக ‘கேட்ரேக்ட்’ கண்சிகிச்சை செய்யப்பட்டது. தையல் இல்லாமல் துவாரத்தின் வழியாக அறுவை சிகிச்சை செய்து ஐஞக இலவசமாக பொருத்தப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் இலவச ஐஞக சிகிச்சைமுறை நடைமுறையில் இல்லை. இதுவும் கோவையில் முதன்முறையாக செய்யப்பட்டது சாதனையாக அமைந்தது. இந்தச் சூழலில் எதிர்பாராத விதமாக 1996ம் ஆண்டு என் மனைவி கலைவாணியையும், தந்தையையும் இழந்தேன். இவர்களின் இழப்பு எனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. 1997ம் ஆண்டு என் மனைவியின் இழப்பில் கிடைத்த காப்பீட்டுத் தொகையைக் கொண்டு மல்டிஸ்கேன் லேசிக் கருவியை வாங்கினேன்.
2002ல் அவினாசி சாலையிலும், 2004ல் சேலத்திலும் புதிதாக லோட்டஸ் கண் மருத்துவமனையை உருவாக்கினேன். இதே ஆண்டு தென்கிழக்கு ஆசியாவிலேயே முதலில் எபிலாசிக் சிகிச்சையை லோட்டசில் அறிமுகப்படுத்தினேன். மருத்துவமனை நன்கு வளர்ச்சி அடைந்தது.
தற்பொழுது திருப்பூர், மேட்டுப்பாளையம், கொச்சின் உள்ளிட்ட ஏழு மையங்களில் லோட்டஸ் கண் மருத்துவக் கிளைகள் நிறுவப்பட்டுள்ளது.
வித்தியாசமான, எல்லோரும் விரும்பிய செயல்பாடு ஒன்றிற்கு கிடைத்த பாராட்டு இதுவென்று நீங்கள் கூறவிரும்புவது?
2006ம் ஆண்டு சர்வதேச அளவில் 350 பேரைக் கொண்ட கருத்தரங்கு ஒன்றைநற்ஹழ் இழ்ன்ண்ள்ங் (ஸ்டார் குரூஸ்) என்றகப்பலில் நடத்தினேன். உலகத்தில் முதன் முறையாக கண் மருத்துவக் கருத்தரங்கு அரபிக் கடலில் நடத்தப்பட்டது அதுவே முதன் முறையாகும். இந்நிகழ்வு ‘லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ல் பதிவு செய்யப்பட்டது. மேலும், 2006ம் ஆண்டிலேயே ஒரே மாதத்தில் அதிகப்படியான லேசிக் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கு எங்கள் மருத்துவனை இந்தியாவில் முதன்மையானதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆஹன்ள்ஸ்ரீட் & கர்ம்க்ஷ என்றசர்வதேச நிறுவனம் எங்களைக் கௌரவித்தது.
கண் சம்பந்தமாக கல்வித்துறையில் நீங்கள் செய்து வரும் சாதனைகள் குறித்து?
அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைந்து பி.எஸ்.சி. ஆப்டோமெட்ரி என்ற4 வருட பட்டப்படிப்பை நடத்தி வருகிறோம். அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆப்தால்மிக் நர்ஸிங் என்றபடிப்பையும் வழங்கி வருகிறோம். மிகவும் ஏழ்மையான குடும்ப சூழ்நிலையிலிருந்து வரும் பெண்களுக்கு இலவசமாக உணவு, தங்குமிடம் அனைத்தையும் வழங்கிய செவிலியர் பயிற்சி அளிக்கிறோம்.
தேசிய தேர்வுத் துறையுடன் (ஈசஆ) இணைந்து பட்டப் படிப்பும், பயிற்சியும் அதற்கான தேர்வையும் நடத்தி வருகின்றோம். லோட்டஸ் கண் மருத்துவமனை ICO (International Council of Ophtholmol) அங்கீகாரம் பெற்ற மருத்துவமனை. இதன்மூலம் உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் லோட்டஸில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
நம் நாட்டில் கண் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி எந்த அளவில் உள்ளது?
கண் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் நம் நாட்டில் நடப்பதேயில்லை என்பதுதான் உண்மை. ஒவ்வொரு மாநிலத்திலும், மத்திய அரசாலும், மாநில அரசாலும் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி மையங்கள் நிறுவப்பட வேண்டும். இதனால் கண் சிகிச்சைக்கு செலவிடப்படும் தொகையை நாம் பெருமளவு குறைக்கலாம். ஆனால் இந்த ஆராய்ச்சிக் கூடங்களை நிறுவத் தேவைப்படும் பெருமளவுத் தொகையை அரசு ஏற்க முன்வர வேண்டும்.
மருத்துவத்தில், குறிப்பாக நீங்கள் இந்தத் துறையை தேர்ந்தெடுத்ததற்கான காரணம்?
எனது தாத்தாவிற்கு ‘கேட்ரேக்ட்’ பாதிப்பு ஏற்பட்ட போது, எங்கள் கிராமத்திலிருந்து அவரை குன்னூருக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றோம். அங்கு சிறந்த சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் போனது. அதேபோல், எனது மாமாவிற்குக் கண்ணில் ஏற்பட்ட பாதிப்பையும் சரிசெய்ய முடியாமல் போனது. இது போன்ற பல சம்பவங்கள் என்னைப் பாதித்தது. அப்போது தான் நாமே இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து, சிறந்த கண்சிகிச்சையைத் தந்து பலரின் பார்வைக்கு வழித்தடம் ஆக வேண்டும் என்று உறுதி பூண்டேன். அந்தத் திடமான உறுதிதான் இந்தத்துறையில் ஈடுபடவைத்து சாதிக்கத் தூண்டியது.
கண் பார்வை குறித்த விழிப்புணர்வு நம் நாட்டில் எந்த அளவுக்கு உள்ளது?
நாகரீக வளர்ச்சி, கல்வி அறிவு பெருக்கம், இதன் காரணமாக மக்களிடையே நல்ல விழிப்புணர்வு உள்ளது.
அதே சமயம் கண்ணின் பயன்பாடும் இப்போது அதிகரித்துள்ளது. கணினி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவு கூடியுள்ளது. அதேசமயம் கண்ணுக்கு பங்கம் ஏற்படாத வகையில் கணினியை உபயோகிப்பவர்கள் மிகக் குறைவாகவே உள்ளார்கள். கணினியை பயன்படுத்தும்போது கழுத்துத் தசைகளும் பாதிக்கப்படுகின்றது. எனவே பள்ளிகளில், ‘கணினியை உபயோகப்படுத்தும் முறை மற்றும் அதன் பாதிப்பு’ என்ற தலைப்பில் அனைத்து மாணவர்களுக்கும் விழிப்புணர்வை நாங்கள் ஏற்படுத்தி வருகிறோம்.
அச்சில் உள்ள எழுத்துக்களுக்கும், திரையில் தோன்றும் எழுத்துக்களுக்கும் வேறுபாடு உள்ளது.
கணினித் திரையில் உள்ள எழுத்துக்களைப் படிப்பது மிகக் கடினம். அதற்கேற்றாற் போல் வசதிகள் அமைத்துக்கொண்டு கணினியைக் கையாளுதல் அவசியம்.
கணினியால் உருவாகும் கண் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு எப்படிப்பட்டதாக இருந்தால் சிறப்பாக இருக்கும்?
ஒவ்வொரு பள்ளியிலும் “How to use your computer?” என்கின்ற பாடத்திட்டத்தைக் கொண்டு வரவேண்டும். ஒரு மாடல் சேர், ஒரு மாடல் கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் முன் எப்படி அமர்வது, அறை எப்படி இருக்க வேண்டும், எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை இடைவேளை வேண்டும், பிரிண்ட் லெட்டர், பிக்சல் லெட்டரை எப்படிப்பட்ட நிலையில் வாசிப்பது, இவை எல்லாவற்றையும் படிக்கும் காலத்திலேயே மாணவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். கணினி உபயோகிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை எல்லா இடங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
நம் தமிழ்நாட்டில் கண் மருத்துவத் துறையின் வளர்ச்சி குறித்து?
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சிறந்த கண் மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. இதற்குக் காரணம் சங்கர நேத்ராலயா, அரவிந்த் போன்ற முக்கிய மருத்துவமனைகள் இங்கிருப்பதே ஆகும். பேராசிரியர் வெங்கடசுவாமி, டாக்டர் பத்ரிநாத் உள்ளிட்டோர் இதற்காக கடுமையாக உழைத்தார்கள். கிராமத்தில் உள்ளவர்களும் கண் மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்கு இவர்கள் வழிவகை செய்தார்கள்.
இந்தியாவில் ஹைதராபாத், டெல்லி, சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் கண் மருத்துவ பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.
வெளிநாட்டிலிருந்து நம் நாட்டிற்கு கண் சிகிச்சைக்கென்று வருகை புரிகிறார்களா?
வளர்ந்த நாடுகள் எல்லாவற்றிலும் இந்தியாவில் இருக்கும் சிகிச்சை முறைகள் இருக்கின்றன. ஆனால் அச்சிகிச்சைகளைப் பெறுவதற்கு அதிகமாக செலவிட வேண்டி உள்ளது. அங்கு செலவிடும் தொகையில் நான்கில் ஒரு பங்கு தான் இந்தியாவில் சிகிச்சைக்கு செலவாகிறது. இந்தியாவில் சிறு நகரங்களில் வெளிநாட்டவர்கள் சிகிச்சை பெரும் அளவும் மிகவும் குறைவு. அதற்குப் போதிய போக்குவரத்து, தங்கும் வசதி பற்றாக்குறைகளே காரணம். இருப்பினும், ஆப்பிரிக்கா போன்றநாடுகளிலிருந்து கண் சிகிச்சைக்கென்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
கண் சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டங்கள் நம் நாட்டில் எந்தளவுக்கு உள்ளது?
காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவமனைகளுடன் இணைந்து பங்காற்றுவதில்லை. “Third Party Administration” என்று அழைக்கப்படும் மூன்றாவது குழுவின் நிர்வாகம், சிகிச்சை முறைகளில் தலையிடுவதாலும், பணத்தை நேரத்திற்கு மருத்துவமனைகளில் செலுத்தாததாலும், காப்பீட்டுத் திட்டங்கள் சிரமமாக உள்ளது.
இத்துறை உங்களுக்கு முழுத்திருப்தியைத் தந்திருக்கிறதா?
நிச்சயமாகத் தந்திருக்கிறது. கஷ்டங்கள் நிறைய உண்டு என்றாலும் நாளின் முடிவில் சிகிச்சை பெற்றவர்களின் சந்தோச மனநிலையை அவர்களின் வாழ்த்துக்களை நினைத்துப் பார்க்கும்போது எல்லாக் கஷ்டங்களும் மறைந்து போகும்.
கல்வித் துறை, மருத்துவத்துறையில் மட்டுமே இது சாத்தியம்.
எனவே இத்துறை சார்ந்த பணி என்பது பிறரின் மகிழ்ச்சியைக் கண்டு கண்டு மகிழ்ந்து வாழ்கிற அரும்பணி.
விருதுகள் குறித்து?
இண்டர்நேஷனல் லயன்ஸ் கிளப் ‘ஐ கேர் எக்சலன்ஸ்’ (Eye Care Excellence) விருது, கேரள மாநில கண் அறுவைசிகிச்சை அமைப்பின் டாக்டர் சிவா ரெட்டி (Dr. Siva Reddy) விருது, ‘Bausch & Comb’ பெஸ்ட் பர்பாமர் விருது, லிம்கா விருது, தமிழ்நாடு கண் மருத்துவக் கழகம் ‘படக’ விருது, இந்தியன் அச்சீவர்ஸ் விருது இப்படிப் பல விருதுகளைப் பெற்றுள்ளேன்.
உங்களுக்கு பிடித்த புத்தகங்கள்…
பள்ளி, கல்லூரி வயதில் கி.வா. ஜகந்நாதன், சௌந்திர கைலாசம், பூவண்ணன் ஆகியோரிடமிருந்து பரிசும் பாராட்டும் பெற்றிருக்கிறேன். மருத்துவத் துறைக்கு வந்த பின்பு அதில் அதிக ஈடுபாடு காட்ட இயலவில்லை. பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள், சிலப்பதிகாரம், இராமாயணம், கண்ணதாசன் கவிதைகள் போன்ற நூல்களை விரும்பிப் படித்ததுண்டு. இப்போது Good to Great, Built to Last போன்றநிர்வாகத்திறன் சார்ந்த புத்தகங்களைப் படித்ததுண்டு.
உங்கள் குடும்பம்…
எனது மூத்த மகள் S. கவிதா, ஹார்வோர்ட் பல்கலைக்கழகத்தில் அடோலஸண்ட் சைக்கேட்ரி படித்து வருகிறார்.
இரண்டாவது மகள் S. சங்கீதா, சாப்டுவேர் துறையில் உள்ளார்.
மூன்றாவது மகன் S. ராஜா, இப்போது எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
புதிதாக வரும் மருத்துவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது ?
கண் மருத்துவத்துறைமிகவும் அருமையான துறை. மூளையில் கால் பாகம் கண்ணிற்காக உபயோகிக்கப்படுகிறது. எஞ்சியுள்ள முக்கால் பாகமே மற்ற உறுப்புகளால் உபயோகிக்கப்படுகின்றது. அத்தனை முக்கியமான கண்ணின், மருத்துவ சிகிச்சை முறையில் இப்போது பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு முன்னேற வேண்டும் என்பதே என் கருத்து.
தன்னம்பிக்கை வாசகர்களுக்கு ‘வெற்றியின் ரகசியம்’ குறித்துச் சொல்லுங்களேன்?
உங்களையும், மாறும் உலகத்தையும் புரிந்து கொண்டு, கடும் உழைப்புடன், உங்கள் திறமையில் நம்பிக்கை கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். சந்தர்பத்தை சரியாகப் பயன்படுத்தி செயல்படுவதே வெற்றியின் ரகசியம்.
எதிர்கால இலக்கு?
க்ஷி எல்லா மக்களுக்கும் குறைந்த செலவில் நிறைந்த சிகிச்சையை அளிக்கும் தொழில் நுட்பத்தை கொண்டு வருதல்.
க்ஷி கிளினிக்கல் ரிசர்ச் மூலமாக குணப்படுத்த முடியாத கண் நோய்களுக்குப் புதிய சிகிச்சை முறைகளைக் கண்டறிதல்
லோட்டஸ் கண் மருத்துவமனையை இந்தியாவில் இன்னும் பல்வேறு இடங்களில் நிறுவி சேவை செய்ய வேண்டும். குறிப்பாக தேவை அதிகம் உள்ள கிழக்கிந்திய நாடுகளில் நிறுவ வேண்டுமென்றஆசை இருக்கிறது.

 

1 Comment

  1. NBVYO - அறக்கட்டளை says:

    மூத்தோருக்கு வணக்கம்
    உங்கள் திறமைக்கும்
    முன்னேற்றத்திற்கும்
    என்றன் பாராட்டுக்கள்
    உங்களின் சேவைகளுக்கு
    மிகுந்த நன்றி
    -T .RM சந்தர்

Post a Comment


 

 


April 2011

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
பிக்மாலியன்
முயன்றேன்… வென்றேன்…
மேன்மைமிகு மேலாண்மையில் வலிமைமிகு வள்ளுவம்
எல்லாம் எவன் செயல்?
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
நிலைத்திருக்கும் நினைவுகள்
இங்கிலீஸ் ரொம்ப ஈஸி
திருநங்கையர் தினம்
நிதானித்து நட
பிறப்பு தடையல்ல
பெண் இன்றி அமையாது வாழ்வு
மனம் விட்டு கேளுங்கள்
உனக்குள்ளே உலகம்-11
முடியாது என்ற சொல்லுக்கு முற்று புள்ளி வைப்போம்
உள்ளத்தில் திடம்!! வரலாற்றில் இடம்!!
அச்சீவர்ஸ் அவென்யூ
உடலினை உறுதிசெய்
உள்ளத்தோடு உள்ளம்