Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நமது இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் தீவிரத்தை எப்படி அடக்குவது என்பது குறித்து கருத்துக் கேட்கப்பட்டிருக்கிறது.

அப்போது சர்ச்சில், இந்த காந்தி துப்பாக்கி ஏந்தி போரிட்டால் நான் பீரங்கியால் நசுக்கி இருப்பேன். பீரங்கி கொண்டு போராடினால் விமானம் கொண்டு அழித்திருப்பேன். ஆனால் அவரோ ஆயுதங்களைப் புறக்கணித்துவிட்டு அகிம்சை, சத்தியம் இவைகளைப் அல்லவா ஆயுதமாகக் கொண்டு போராடுகிறார். அவைகளை மழுங்கடிக்கக் கூடிய ஆயுதங்கள் உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் அவரை வெற்றி கொள்ள முடியவில்லை. பணிந்து போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார் என்றால் எந்தளவு காந்திஜியின் கொள்கை அவரை பாதித்திருக்க வேண்டும். சிந்தித்துப் பார்க்க வேண்டும் நாம்.

அகிம்சை, சத்தியத்தால் நம் நாட்டிற்கு தனியொரு அந்தஸ்தை, சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த ‘மகாத்மா’வின் பிறந்த தினம் அக்டோபர் 2.

ஓர் ஆங்கிலப் பத்திரிகையாளர் மகாத்மாவை ஏளனம் செய்யும் நோக்கத்துடன், “காந்திஜி, உங்கள் மக்கள் ஏன் உங்களைத் தங்கள் பிரதிநிதியாக ஏற்றுக் கொண்டனர்? வேறு சிறந்த தலைவர்களே அவர்களுக்கு கிடைக்கவில்லையா?” என்று கேட்டிருக்கிறார்.

உடனே மகாத்மா “உங்களை சமாளிக்க நானே போதும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்” என்றாராம்.
எந்தச் சூழலிலும் தன்னை உயர்த்திக் கொள்ளாமல் தான் வாழும் நாட்டையும், மக்களையும் உயர்த்திய அவர் வழியில் நம் பயணம் தொடர்ந்து, உலக நாடுகளுக்கு நடுவே உயர்ந்து, ஒன்றுபட்டு வாழ்வதில் தான் இருக்கிறது மகாத்மாவுக்கு
நாம் தரும் மரியாதையின் உன்னதம்.

 

2 Comments

  1. sam10 says:

    nice………

Post a Comment


 

 


October 2010

கிராமம் என முடங்காதே சிகரம் உண்டு மறக்காதே!!
சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல
வரி சில வரிகளில்
உடலினை உறுதி செய்
விதை
தன் வினை தன்னை சுடும்
பயத்திற்கு குட்பை
ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிக்க ஆலோசனைகள்
கதையும் கருத்தும்
உனக்குள்ளே உலகம்-5
கோபத்தை அகற்றுங்கள்
ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது?
சாதனை வாழ்விற்கான சந்தோஷ வழிமுறைகள் 50
இடத்தை மாற்று வெற்றி நிச்சயம்
சோம்பலை சாம்பலாக்கி வெற்றி பெறு!
வெற்றி விலாஸ்
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்
வல்லமை தாரோயோ
உள்ளத்தோடு உள்ளம்