Home » Articles » திறந்த உள்ளம்

 
திறந்த உள்ளம்


admin
Author:

கோவை நகரம் “வரலாற்றுத் தொன்மை ஆய்வு” கட்டுரை மாற்றமிக்க புதிய சிந்தனை களின் மறு தோன்றல் என்று எடுத்துக் கொள்ளலாம். கொங்குக்கும் கோவைக்கும் எத்தனையோ வரலாற்று மெய்ப்புகள் வந்து போய்விட்டன. மக்களின் வாய்மொழி வழக்கு என்ற போர்வையில் புகுந்துகொண்டு சிலரின் “ஜாலரா” சப்தங்களினால் உண்மை நிலையை உயிர்த்துணர முடியாமல் போய்விட்டது. மெய்யான வரலாற்றுச் செய்திகள் இனம், மொழி, மதம், சமயம் சார்ந்து திரித்துக் கூறப்படுவதால் உண்மைக் கோவையை இதுவரை நாங்கள் அறியாமல் இருந்தோம். இந்தக் கட்டுரை அந்தக் குறையைப் போக்கியது. இவ்வளவு புதிய செய்திகள் கொண்ட கோவையைப் பழைமைவாதிகளும், சித்தாந்திகளும் புற்றீசல் இலக்கியவாதி களும், என்ன பாடுபடுத்துகிறார்கள். அடேயப்பா! புனைவு பூசப்படாத புதிய செய்திகளைக் கோ(ர்)வையாகத் தந்த “தன்னம்பிக்கை”யை வாழ்த்துகிறோம்.

வருமானத்தில் செலவு போக மிச்சம் சேமிப்பா அல்லது வருமானத் தில் சேமிப்பு போக மிச்சம் இருப்பது செலவா, சேமிப்பா என்பதை தன்னம்பிக்கை பயிற்சியாளர் பெங்களூர் கே. ரஜினிகாந்த் கேரக்டர்கள் மூலம் வசதி இருக்கும் போதே தேவை களைக் குறைத்துக் கொண்டு சேமிப் புடன் வாழும் பண்பினை பயிற்றுவித்திருந்தார். பாராட்டு கிறோம்!

“மாற்றங்கள் வரட்டுமே” என்ற நேர் காணலில் மாற்றங்களும் முன்னேற்றங்களுமே தனி மனிதனை மட்டு மல்ல ஒரு நிறுவனத்தையே உருவாக்குவதில் உறுதியாய் இருக்கும் என மிகத் தெளிவாக அறிந்து கொண் டோம். நம் நாட்டில் கல்லூரிகள் எண்ணிக் கையைப் பெருக்குவதை விட அதன் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றதுணைவேந்தர் கருத்துக்கு வலுசேர்க்க இன்றைய கல்வியாளர்கள் முனைவார்களே யானால் மேலைநாட்டுப் பல்கலைக் கழகங்கள் நம் நாட்டிற்கு வருவதைத் தவிர்க்கலாம். ஏனெனில் அவர்களின் ஆளுகை அமைந்து விட்டால் மீண்டும் ஒரு சுதந்திர யுத்தம் இந்தியாவிற்கு தேவைப்படும் என்பது திண்ணம்.

“நல்ல காலம் பிறக்குது” கட்டுரையை முழுவதும் படித்து முடித்த வாசகர்களுக்கு நிச்சயம் நல்ல காலம் பிறந்துவிடும் என்பது உறுதி. காலமறிந்து செயல்படுவதில் உள்ள நன்மைகளைக் கட்டுரை ஆசிரியர் அருள்நிதி பன்னீர் செல்வம் பனிமலர் போல் பக்குவப் படுத்தி இருந்தார்.

2010 ஆகஸ்ட் 12ம் தேதியை “சர்வதேச இளைஞர் சக்தி” ஆண்டாக அன்றிலிருந்து ஓராண்டு கொண்டாடும்படி ஐ.நா. சபை அறிவுறுத்தியுள்ளது. வெற்றிப்படிக்கட்டுகளில் ஏறி மன மாற்றமே வெற்றி என முழக்கமிட்டு அகரத்தில் இருப்பவர்களையும் சிகரத்தில் ஏற்றி வைத்து “தன்னம்பிக்கை” அழகு பார்க்கிறது. “தன்னம்பிக்கை” இதழும் இளைஞர் சக்தியைத் திரட்டுவதில் திட்டமிட்டு செயல்பட்டு வருவதை நாடே நன்கு அறியும். நன்றி!

– பூபாளம் ப. முருகேச பாண்டியன்
இயக்குநர், தமிழ் மன்றம்
பார்க் பொறியியல் மற்றும்
தொழில்நுட்பக் கல்லூரி, கோவை

தங்கள் தன்னம்பிக்கை மாத இதழ் பல ஆண்டுகள் ஆகியும் சிறப்புடன் பிரசுரம் ஆகி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நல்ல இதழ். மனிதனின் வாழ்க்கைத் தரம் உயர, அவர் தம் செயல்திறன் ஒளிவீச, வாழ்க்கை படகு புயலில் சிக்கித் தவிக்கும் போது எப்படி அப்புயலைச் சமாளித்து படகைச் செலுத்தலாம் என்பதற்கு வழிகாட்டிட பெருமளவு தங்கள் தன்னம்பிக்கை இதழ் உதவி வருகிறது.
– ஆர் வீ. பார்த்திபன்

“தலையங்கத்தில் சுட்டிக்காட்டியது போல இன்றைய இளைஞர்கள் உண்மையிலேயே திறமை மிக்கவர்கள். ஏதேனும் ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்று துடிப்பவர்கள். சரியான வழிகாட்டுதல்கள் இருந்தால் உலகம் வியக்கும் சாதனையைப் புரிபவர்கள் என்பதற்கு வேலூர் V.I.T. கல்லூரி மாணவர்களும், ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி மாணவர்களும் ராக்கெட் துறையில் நிகழ்த்திய சாதனையே சான்றாகும். தன்னம்பிக் கையின் ஒவ்வொரு பக்கமும் நம்பிக்கையை ஊட்டும் அரும் மருந்தாகத் திகழ்ந்தது”.

– பாவலர் கருமலைத்தமிழாழன்
ஓசூர்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2010

வெற்றிக்கு வேண்டிய தலைமைப் பண்புகள்
முதல் மார்க் வாங்குவது எப்படி
உழைப்பை எடுத்துச் செல்! உயர்வை எட்டி நில்!!
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க வின் சிந்தனை
நம்பிக்கை கொள்
தன்னம்பிக்கையும் தளரா முயற்சியும்
இங்கிலாந்து சுற்றுலா
துவளாத வரை தோல்வியில்லை
காரணம்
திறந்த உள்ளம்
சிற்பி
உன்னதமாய் வாழ்வோம்
சிந்தனை செய் நண்பனே…
இவைகளையும் கவனியுங்கள்
மனமே மனமே மாறிவிடு!
காலத்தை வென்று நிற்கும் நிகழ்வுகள்- II
அமர்நாத் யாத்திரை
உனக்குள்ளே உலகம்
நல்லா இருங்க…
முயன்றால் முடியும்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
உடலினை உறுதி செய்