Home » Articles » முதல் மார்க் வாங்குவது எப்படி

 
முதல் மார்க் வாங்குவது எப்படி


தங்கவேலு மாரிமுத்து
Author:

– தங்கவேலு மாரிமுத்து

சூழல் கண்டு சுருங்கி விடலாமா?

our children are not your children
They come through you”

இது, உலகப்புகழ் பெற்ற கவிஞர் கலீல் கிப்ரானின் கவிதை வரிகளில் ஒன்று.

என்ன அர்த்தம் இதற்கு? பல அர்த்தங்கள்.

உங்கள் குழந்தைகள் உங்களுடைய குழந்தைகள் அல்ல.

அவர்கள் உங்களிடமிருந்து தோன்றியவர்கள்.

அவ்வளவுதான். அதாவது…

ஸ் உங்கள் குழந்தைகளின் பிறப்புக்கு மட்டுமே நீங்கள் காரணம்.

ஸ் அவர்களின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் நீங்கள் காரணமாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

ஸ் உங்கள் ஆசைகளை அவர்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஸ் உங்கள் விருப்பப்படியே அவர்கள் நடப்பார்கள் என்ற உத்திரவாதம் இல்லை.

ஸ் அவர்களுக்கென்று, ஒரு ரசனை, பாதை, வாழ்க்கை அமைப்பு இருக்கிறது. அது உங்களுடைய திலிருந்து மாறுபட்டதாக இருக்கலாம் (அவரவர் வாங்கி வந்த வரம்).

இப்படி பல அர்த்தங்களை எடுத்துக் கொள்ளலாம்.

சரி. இப்போது, இதே கருத்தை சற்று எதிர்ப்பக்கமாக இருந்து சொல்லிப் பார்ப்போம்.

உங்கள் பெற்றோர் உங்கள் பிறப்புக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் உங்கள் வளர்ச்சிக்கோ வீழ்ச்சிக்கோ காரணமாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

இதற்கு விரிவான அர்த்தம் என்ன? நமது கோணத்தில் பார்க்கலாம்.

ஸ் உங்கள் பெற்றோர் ஏழைகளாக இருந்தால் நீங்கள் ஏழைகளாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

ஸ் உங்கள் பெற்றோர் கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்தால் நீங்களும் அப்படியே இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஸ் உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.

ஸ் உங்கள் வளர்ச்சிக்கும் வீழ்ச் சிக்கும் நீங்களே முழுப்பொறுப்பு (தீதும் நன்றும் பிறர்தர வாரா)

அதாவது…

ஸ் உங்கள் குடும்பச் சூழல், (ஏழையான பெற்றோர்கள், கல்வியறிவில்லாத பெற்றோர்கள், வசதியற்ற வீடு)

ஸ் நீங்கள் வசிக்கும் ஊரின் தெருவின் சூழ்நிலை, (போக்குவரத்து வசதியில்லாத, தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத, அடிப்படை வசதிகள் கூட இல்லாத பின் தங்கிய சூழ்நிலை)

ஸ் படித்தவர்களும், நாலு விஷயம் தெரிந்தவர்களும், நூலகங்களும் இல்லாத ஒதுக்குப்புறமான பகுதி (Remote area)

இவைகள் எல்லாமே உங்கள் வளர்ச்சிக்கு சவாலான விஷயங்கள்தான். வளர்ச்சியைப் பற்றி சிந்திக்கவிடாத சூழ்நிலைதான். வளர்ச்சியை வழிமறிக்கும் தடைகள்தான்.

ஆனாலும், மனிதன் என்று இந்தப் பூமியில் பிறந்து விட்டீர்களே! வாழ்ந்து தானே ஆக வேண்டும். சராசரி மனிதனாக, கூட்டத் தோடு கூட்டமாக வாழ்ந்து மடிவதில் என்ன சந்தோஷம் இருக்கிறது. என்ன பெருமை இருக்கிறது?

வந்து பிறந்து விட்டோம். வாழ்ந்து காட்டுவோம். வளர்ந்து காட்டுவோம். வளங்களைக் குவித்துக் காட்டுவோம் இப்படியல்லவா நினைக்க வேண்டும். ஐயய்ய. ரொம்ப ரொம்ப கஷ்டமாச்சே என்று கலங்காதீர்கள். இப்படிப்பட்ட சூழல் அமைந்திருந்தும் ஏராளமான இளைஞர்கள், ஊரே வியக்கும் அளவுக்கு உயர்ந்து காட்டியிருக்கிறார்கள்.

சான்றாக,

ஸ் லாட்டரி தொழில் செய்து கொண்டே படித்து, ஐ. ஆர்.எஸ் ஆகிய ஆவடி நந்தகுமார்.

ஸ் தினமும் குடித்துவிட்டு வந்து, மனைவி மக்களை அடித்துவிட்டு தூங்கப்போகும் தகப்பன்: அவன் தூங்கிய பிறகு கண் விழித்துப் படித்து, நல்ல மார்க் வாங்கி, எம்.பி.பி.எஸ் படித்து டாக்டர் ஆகிய சென்னை சண்முகப் பிரியா.

ஸ் அம்மா சுற்றித் தந்த பீடிகளை பண்டல் போட்டு விற்றும், தள்ளு வண்டியில் சுண்டல் விற்றும், படித்து பொறியியல் முடித்த பாளையங்கோட்டை பொன்ராஜ்.

இப்படி எத்தனை பேர் வேண்டும் உங்களுக்கு? இவர்களின் சங்கடங்களும் சாதனைகளும் உங்களுக்குச் சொல்லும் சங்கதி என்ன? “பெற்றோரையும், பிறந்த ஊரையும், வறுமை நிலையையும், வசதிக் குறைவுகளையும் சொல்லிக் கொண்டு சுருண்டு கிடக்காதீர்கள்.

சூழ்நிலை தரும் எதிர்மறை எண்ணங்களை எதிர்கொண்டு, ஏறி மிதித்து, மேலே செல்லுங்கள்”

இது தானே.

மனிதன் சாதிக்கப் பிறந்தவன். நீங்கள் மனிதன். சாதித்தே ஆக வேண்டும். சாதியுங்கள். உங்கள் குடும்பத்தின், உங்கள் ஊரின் பின் தங்கிய சூழலை நீங்களாவது மாற்றுங்கள். பெற்றெடுத்த தாய் தந்தைக்கும் பிறந்த ஊருக்கும் பெருமை சேருங்கள்.


Share
 

1 Comment

  1. balaji.s says:

    Kanndipaka naan yan thaikkum,thathikkum,villageku munmathiriyaka erumpon

Post a Comment


 

 


September 2010

வெற்றிக்கு வேண்டிய தலைமைப் பண்புகள்
முதல் மார்க் வாங்குவது எப்படி
உழைப்பை எடுத்துச் செல்! உயர்வை எட்டி நில்!!
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க வின் சிந்தனை
நம்பிக்கை கொள்
தன்னம்பிக்கையும் தளரா முயற்சியும்
இங்கிலாந்து சுற்றுலா
துவளாத வரை தோல்வியில்லை
காரணம்
திறந்த உள்ளம்
சிற்பி
உன்னதமாய் வாழ்வோம்
சிந்தனை செய் நண்பனே…
இவைகளையும் கவனியுங்கள்
மனமே மனமே மாறிவிடு!
காலத்தை வென்று நிற்கும் நிகழ்வுகள்- II
அமர்நாத் யாத்திரை
உனக்குள்ளே உலகம்
நல்லா இருங்க…
முயன்றால் முடியும்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
உடலினை உறுதி செய்