Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

ஐயா! படிப்பதென்பது எனக்கு கடினமாக இருக்கிறது? எவ்வளவோ உழைக்க வேண்டி இருக்கிறது? என்னால் முடியவில்லை” அதனால் இனி நான் பள்ளிக்கு வருவதாக இல்லை என்றான் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன்.

ஆசிரியர் பதில் ஏதும் பேசவில்லை. கடைத் தெருவுக்கு அந்த மாணவனை அழைத்துச் செல்லும் வாய்ப்பொன்று அவருக்கு அன்று கிடைத்தது. இருவருமாக சென்று கொண்டிருக்கும் போது கடைத்தெருவில் பலாப்பழங்களின் மணம் எங்கும் வீசிக்கொண்டிருந்தது.

“ஐயா! பலாப்பழம் ஒன்று வாங்கி சுவைக்கணும் போல் இருக்கிறது” என்றான் மாணவன்.

“பலாப்பழமா? வேண்டாம். வெளியே முட்கள் இருக்கும். அதைக்கத்தியால் அறுத்தால் கையில் பிசின் ஒட்டும். கூடவே சக்கைகள் வேறு இருக்கும். இத்தனையும் கடந்து அதற்குப் பின்புதான் பழத்தின் சுளைகளை சுவைக்க முடியும்” என்றார் ஆசிரியர்.

“ஐயா! தொல்லைப்பட்டாலும் பரவாயில்லை. சுவையான சுளைகள் கிடைக்கும். பலா பழத்தை வாங்குவோம்” என்றான் மாணவன்.

“தம்பி! படிப்பும் பலாப்பழம் போன்றதுதான்” என்றார் ஆசிரியர்.

“ஐயா!! என் தவற்றை உணர்ந்து கொண்டேன். நான் இனிமேல் நன்றாகப் படிப்பதற்கு ஆர்வம் கொண்டவனாக இருக்கிறேன்” என்றான் மாணவன்.

தக்க தருணத்தில் சரியான பாடம் புகட்டி ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் வெளிச்சமாக்கும் “நல்” ஆசிரியர்களுக்கு தன்னம்பிக்கையின் மனம் நிறைந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2010

வெற்றிக்கு வேண்டிய தலைமைப் பண்புகள்
முதல் மார்க் வாங்குவது எப்படி
உழைப்பை எடுத்துச் செல்! உயர்வை எட்டி நில்!!
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க வின் சிந்தனை
நம்பிக்கை கொள்
தன்னம்பிக்கையும் தளரா முயற்சியும்
இங்கிலாந்து சுற்றுலா
துவளாத வரை தோல்வியில்லை
காரணம்
திறந்த உள்ளம்
சிற்பி
உன்னதமாய் வாழ்வோம்
சிந்தனை செய் நண்பனே…
இவைகளையும் கவனியுங்கள்
மனமே மனமே மாறிவிடு!
காலத்தை வென்று நிற்கும் நிகழ்வுகள்- II
அமர்நாத் யாத்திரை
உனக்குள்ளே உலகம்
நல்லா இருங்க…
முயன்றால் முடியும்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
உடலினை உறுதி செய்