Home » Articles » பேசத் தெரிந்திடு! வாளை வீசத்தெரிந்திடு!!

 
பேசத் தெரிந்திடு! வாளை வீசத்தெரிந்திடு!!


முருகேசன் .ஆர்
Author:

– ஆர். முருகேசன்

குழந்தையாகவே இருந்திருக்கலாம். எவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்கள் பார்த்தாயா என்ற நண்பரின் வார்த்தை களுக்கு காரணமான குழந்தை களை நோக்கி எனது கண்கள் குவிந்தன. துள்ளி விளை யாடும் அந்த குழந்தைகளின் குதூகலம் சற்று நேரம் என் குழந்தை பருவத்தை நினைவு படுத்தியது. சந்தோசம் மனதில் ஊற்றெடுத்தது. அதே வேளை அவர்கள் விளையாடுவதை சற்று கூர்ந்து நோக்கினால் வெற்றியின் வெளிச்சம் பிரகாசமாக பளிச்சிட்டது. விளையாடிய குழந்தைகள் கீழே விழுவதை பார்த்தேன். ஏறத்தாழ எல்லா குழந்தை களும் ஏதோ ஒரு இடத்தில் அல்லது விளையாட்டின் ஒரு நிலையில் விழத்தான் செய்தனர். ஆனால் விழுந்த அவர்கள் சுற்றும் முற்றும் பார்க்கவில்லை. யாராவது பார்த்தார்களா? என்ற கவலை அவர்களிடம் இல்லை. விழுந்தவர்கள் எழுந்தார்கள். பின்பு அவர்களது விளை யாட்டினை தொடர்ந்தனர். விழுந்ததை தோல்வியாக கருதாமல் விழாமல் இருப்ப தற்கு எப்படி என்பதை கற்றுக் கொள்ளும் அனுபவமாக கருதிக்கொண்டார்கள். விளை யாட்டில் கிடைக்கும் உச்ச கட்ட சந்தோசமே அவர்களது வெற்றி. அதனை நோக்கி மட்டுமே அவர்களது முனைப் புடன் கூடிய செயல். அதனால் கீழே விழும்போது நம்மை யார் பார்க்கின்றனர் அது அவமானமா என்றெல்லாம் மனதை அலைகலைக்க விடாமல் அவர்களின் வெற்றியான சந்தோசத்தை மட்டுமே மனக் கண்ணால் பார்க்கின்றனர். நண்பர்களே, நம்  ஒருவருக்குள்ளும் குழந்தை இருக்கிறது. நமக்கு தோல்வி வரும்போதும் வெற்றியை தவற விடும்போதும் அந்த குழந்தையை கூப்பிடுங்கள். துவண்டு விழுவதில் இருந்து துள்ளி ஒடும் உற்சாகத்தை பெறுவோம்.

வெற்றிக்கு இன்னொருவரும் அவசியம் என்பது போல் மற்றொரு விசயம் என்னவென்றால் பேசத் தெரிய வேண்டும். வெற்றி பெறும் வகையில் பேசத் தெரிய வேண்டும். ஒருவரிடம் அல்லது மற்றவர்களிடம் பேசத் தெரியவேண்டும். அது நேர்முகத் தேர்வாகட்டும் மேடைப்பேச்சாகட்டும் அதில் நீங்கள் திறம்பட பேச தெரிந்தால் வெற்றியின் முகவரி உங்களுக்கு கிடைத்ததாக அர்த்தம். மொழி எதுவாக இருந்தாலும் திறம்பட பேசத் தெரிய வேண்டும். அதற்கான காரணிகள் நிறைய உள்ளன என்றாலும் கீழ்க் கண்டவைகள் உங்களை திறம்பட பேச வைக்க உதவும். பேசுவதற்கு அடிப்படையான மையக்கருத்தைப் பற்றிய அறிவை முழுவதுமாக வளர்த்திடுங்கள். மையக்கருத்தைச்சார்ந்த விசயங்களை நன்கு தெரிந்து வைத்திருந்தால் மடைதிறந்த வெள்ளம் போல் பேச முடியும். ஆனால் அதில் மடைமை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பேசும் சூழலுக்கு தகுந்தவாறு உங்கள் உடைகள் இருக்க வேண்டும். மற்றவர்களின் கவனத்தை சிதறடிக்காமல் இருப்பது மாதிரியும் உங்களை அசௌகரிக்கப்படுத்தாமலும் உங்கள் உடை இருக்க வேண்டும். நேர்முகத்தேர்வுக்கும் மேடைப்பேச்சுக்கும் உள்ள உடை வித்தியாசத்தை கவனத்தில் கொள்ளுங்கள்.

நீங்கள் எதைப்பற்றி பேச போகிறீர்கள் என்பதில் தெளிவுக் கொண்ட உறுதி பெற்றிருங்கள். தன்னம்பிக்கை கொண்டிருங்கள். உங்களால் திறம்பட பேச முடியும் என்ற தன்னம்பிக்கை மற்ற காரணிகளை ஊக்கப்படுத்தும். பேசும் சூழலில் இருந்து எந்த காரணத்தைக்கொண்டும் விலகி செல்ல வேண்டாம். பேசப்போகும் இந்த விசயத்தால் அப்படி நடக்கும் இப்படி நடக்கும் என்ற கற்பனைக்கு இடம் கொடுத்து பேசும் சூழலில் இருந்து விலகி செல்லாதீர்கள்.

அது உங்கள் பேச்சில் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் சில வேளை தடம் மாற்றத்தையும் செய்து விடும் அபாயகரமானது. பதில் சொல்லும் போதாகட்டும் அல்லது கருத்துக் களை எடுத்து வைக்கும் போதாகட்டும் தவறுவது சகசம்; ஆனால் அந்த சூழல் நிலையில் பதற்றப் படாமல் இயற்கையாக நன்கு சுவாசியுங்கள். ஒரு பாடகர் மூச்சிழுப்பது போல் சுவாசியுங்கள் அது உங்களை சாந்தப்படுத்தும்; உற்சாகமூட்டும். உங்கள் நண்பரிடம் பேசுவது போல் (டா, டி போட்டு பேசுவதல்ல) பேசுங்கள். உங்களை முழுவதுமாக இலகுவாக வெளிப்படுத்துங்கள். உணர்ச்சி வசப்படாமல் வெளிப்படுத்துங்கள்.

உங்களை ஆமோதித்து அதற்கான அடையாளமாக முகத்தில் சந்தோசத்தையோ கைதட்டல்களையோ  எதிர்ப்பார்க்காமல்     யமுன்னேற்றச் சிந்தனைகளை வளர்க்கும்     பொருட்டு தன்னம்பிக்கை மாத இதழால் நடத்தப்படும் சுயமுன்றேற்றப் பயிரலங்குகள் சமுதாய முன்னேற்றத்திற்கு சாவியாக செயலாற்றி வருகிறது.

இவ்வகையில் கோபிசெட்டிபாளையத்தில் தன்னம்பிக்கை மாத இதழும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரி, கோபியும் இணைந்து கடந்த ஜுன் மாதம் “தேசம் உன் சுவாசம்” என்ற தலைப்பில் சுயமுன்னேற்றப் பயிலரங்கை சிறப்புடன் நடத்தியது.

பயிலரங்கத்தில் பயிற்சியாளராக கோபி கம்பன் கல்வி நிலைய தாளாளர் திரு. ட.ட. காளி யண்ணன், கௌரவ விருந்தினராக கோபி, பாரியூர் அம்மன் ஸ்பின்னிங் மில்ஸ் (பி) ட் நிர்வாக இயக்குனர் தங்கமணி திரு. ட.ங.  பழனிச் சாமி, கோபி போக்குவரத்து தலைமைக் காவலர் திரு. உ.த. இராமலிங்கசாமி, கல்லூரியின் இணைச்செயலர் திரு. எ.ட.கெட்டிமுத்து, முதல்வர் திரு. ட. தங்கவேல் நயஏடஇ முதல்வர் திரு. க.கனக ரத்தினம், தன்னம்பிக்கை மாத இதழின் மக்கள் தொடர்பு அலுவலர் திரு. ங. நம்பிராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தனது கனிவுடன் கூடிய சிறப்பான சேவைக்காக ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், வ’ள் ஙங்ய் சங்கம் விருதுகளையும், முதலமைச்சர் பதக்கத்தையும் பெற்ற கோபி போக்குவரத்து தலைமைக் காவலர் திரு.உ.த.இராமலிங்கசாமிக்கு பயிலரங்கத்தில் பாராட்டு வழங்கப்பட்டது.

பயிற்சியாளராக கலந்து கொண்டு சிறப்பித்த திரு. ட.ட. காளியண்ணன் தன் உரையில், “தேசம் என் உயிர், தேசத்துக்காக நான் என்ற உணர்வு ஒவ்வொருவர் உள்ளத்திலும் உருக் கொள்ள வேண்டும். பேசுங்கள். உண்மையில் உங்கள் பேச்சை அல்லது உங்களை ஆமோதிக்க வேண்டும் என்பது தான் உங்கள் நோக்கம் என்றாலும் கூட நம் எதிர்ப்பார்ப்பு விளையாத போது உங்களை பேசும் சூழலில் இருந்து வெளியே இழுக்க முற்படும். எல்லாவற்றையும் பேசலாம். பேசி பாருங்கள். ஆமாம் முதலில் உங்களிடம் பேசிப்பாருங்கள். எவ்வளவு நேரம் பேசிப்பார்க்க முடியுமோ அவ்வளவு நேரம் பேசிப்பாருங்கள். பட்டை தீட்ட தீட்ட வைரத்தின் பிரகாசம் அதிகமாவதைப்போல் உங்கள் பேச்சால் உங்களை பட்டைத் தீட்டிக் கொண்டால் …

ஆம் நண்பர்களே,

பேசத் தெரிந்துக்கொள்ளுங்கள்;

வெற்றிக்கான வாளை

வீசத்தெரிந்தவர்களாவீர்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2010

சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
மாற்றங்கள் வரட்டுமே மாமனிதரென்று நாம் வாழ்ந்திடவே…
வரவு எட்டணா… செலவு பத்தனா..
உள்ளத்தோடு உள்ளம்
இங்கிலாந்து பயணம்
குடை வள்ளல்
திறந்த உள்ளம்
உன்னதமாய் வாழ்வோம்
விதை
தேசம் என் சுவாசம்
பேசத் தெரிந்திடு! வாளை வீசத்தெரிந்திடு!!
ஆற்றல் மிகுந்த மனம்
தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியுங்கள்
சிறந்த சாதனைகளை படையுங்கள்
ஈரோடு பயிலரங்கச் செய்தி
மனமே மனமே மாறிவிடு!
முயன்றேன்! வென்றேன்!!
முதல் மார்க் வாங்குவது எப்படி
தீரா வாதம்
நல்ல காலம் பொறக்குது
கோவை நகரம் – வரலாற்றுத் தொன்மை ஆய்வு
உனக்குள்ளே உலகம்
உனதாகும் இனி உலகம்
சிரிப்பே நல்ல மருந்து
பயத்தை விரட்டு