– கோபி பயிலரங்கம்
கோபிச்செட்டிபாளையத்தில் தன்னம்பிக்கை மாத இதழும், ஸ்ரீ வெங்க டேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரி, கோபி இணைந்து நடத்திய நவம்பர் 2009 மாத சுயமுன்னேற்றப் பயிலரங்கம் “தடை களைத் தகர்த்திடு” எனும் தலைப்பில் சிறப்பாக நடைபெற்றது.
பயிலரங்கத்திற்கு கோபி சங்ககிரி செட்டியார் ஜவுளிக்கடை உரிமையாளரும், சமூக சேவகருமான Y’ Men B. இராமநாதன் அவர்கள் தலைமை தாங்கி பேசினார். கௌரவ விருந்தினராக சத்தியமங்கலம் காமதேனு கலைக்கல்லூரி நிறுவனத்தலைவர் திரு. R. பெருமாள்சாமி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
கல்லூரியின் சார்பில் கல்லூரியின் இணைச்செயலாளர்
திரு. G.P. கெட்டிமுத்து, முதல்வர் திரு. P. தங்கவேல், தன்னம்பிக்கை மாத இதழின் சார்பில்மக்கள் தொடர்பு அலுவலர் திரு. M. நம்பிராஜன் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் ஈரோடு மாவட்ட கௌரவ செயலரும், ஒயஸ்மென் இண்டர்நேஷனல் அகில உலக ஆட்சி மன்றக் குழு உறுப்பினருமான திரு.தாமஸ் V. ஜான் அவர்கள் பயிற்சியாளராக கலந்து கொண்டு திரளாக பங்கேற்ற வாசகர்கள், மாணவ, மாணவியருக்கு தடைகளைத் தகர்த்திடு எனும் தலைப்பில் உரையாற்றினார்.
செயல் நிறைவேற்றம் (Performance) என்பது அனைத்திற்கும் அடிப்படைக் கருவாகும்! செயல் நிறைவேற்றம் என்பது செயல்திறன் மற்றும் செயல் ஊக்குவிப்பின் கலவையாகும் (Performance ‘ ability ‘ Motivation). இக்கலவையால் மட்டுமே ஒருவரால் வெற்றிகரமான செயல்களை செய்ய இயலும். செயல்திறன் என்ற சொல் வேலை அறிவு மற்றும் வேலைத் திறமை என்ற இரு சொற்களை உள்ளடக்கியது (Ability ‘ Job Knowledge ‘ Job Skill).
செயல் ஊக்குவிப்பு என்பது நம்மால் முடியும் என்கிற மனப்பான்மை மற்றும் சாதக சூழ்நிலை இரண்டின் கலவை யாகும் (Motivation ‘ Positive attitude ‘ Good Climate).
நேர்மறை மனப்பான்மை ஒரு தனிமனிதனை தனக்குத் தானே உந்தச் செய்து அவனுள்ளே ஒரு இமாலய சக்தியை ஏற்படுத்தும்.
சாதக சூழ்நிலை என்பது வெளி உந்து விசை போன்றது. செயல் நிறைவேற்றும் சிறப்புடன் நிகழ்வுற நாம் எங்கு வேலை செய்கிறோம்? யாருக்கு உழைக்கின்றோம்? என்கிற வெளி ஊக்குவிப்புக்களும் அவசியமாகிறது.
இறுதியாக ஒரு மனிதன் தடைகளைத் தகர்த்தி தாக்கம் நிறைந்த செயல் நிறைவேற்றம் செய்ய கீழ்க்கண்ட பார்முலா அவசியம். செயல் நிறைவேற்றம் ‘ வேலை யறிவு ‘ வேலைத்திறன் ‘ நேர்மறைப்பாங்கு ‘ சாதக சூழ்நிலை.
மேற்கண்ட அனைத்துத் திறமைகளும் பெற்றிட ஒரு மனிதன் ஒவ்வொரு நாளும் கற்றல் (Learning) மற்றும் பயிற்சி செய்தல் (Practice) அவசியம். கற்றல் மற்றும் பயிற்சி செய்தல் என்கிற தியாகம் செய்யத் தயாராக இல்லா மனிதன் சாதனையாளன் ஆக முடியாது. தியாகம் என்பது வெற்றியாளர்கள் வாழ்க்கையில் தொடர்ந்து நிகழும் அன்றாடச் செயல். ஒருவன் எவ்வளவு உயரம் செல்கிறானோ அவன் அவ்வளவு விட்டுக் கொடுத்திருக்க வேண்டும்.
நாம் இழக்கும் ஒவ்வொன்றிலும் ஏதோ ஒரு ஆதாயம் உண்டு. நாம் ஆதாயமடையும் ஒவ்வொன்றிலும் ஏதோ ஒரு இழப்பு உண்டு என்கிற Ralph Waldo வின் பொன் மொழியை நினைவில் நிறுத்துவீர்! நிச்சயம் தடைகளை தகர்த்துவீர். வாழ்த்துகள்” என்று உரையாற்றினார்.
கல்லூரியின் துணை முதல்வர் திரு. ந. பிரகாசம் நன்றி கூற பயிலரங்கம் நிறைவு பெற்றது.

January 2010
























No comments
Be the first one to leave a comment.