Home » Articles » இறைவனின் பிள்ளைகள், இனி நம் பிள்ளைகள்

 
இறைவனின் பிள்ளைகள், இனி நம் பிள்ளைகள்


கௌரிசங்கர்
Author:

– கௌரி சங்கர்

கௌரி சங்கர்
சமூக சேவகர்
கோவை மாவட்ட சிறந்த இளைஞர் விருது
இந்திய அரசு

வேகமான பொருளாதார உலகில் தன் தேவையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நமக்கு இந்த நாடே நம் வீடு போல் எங்கு வேண்டுமானாலும்., எப்போது வேண்டு மானாலும் போய் வரவும், தொடர்பு கொள்ள வும் வசதிகிள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைகள் (ரூம்கள்) மட்டுமே உலகமாக கொண்டு யாருமில்லாத ஆதரவற்றவர்களாய் வாழ்ந்து வருகிறார்கள். பண்டிகை நாளாலும் புது துணி உóத்தி அழகு பார்த்து வேண்டிய உணவுகளை செய்து கொடுத்து வெளியில் கூட்டி சென்று மகிழ்விக்க அங்கு தாயுமில்லை. உறவாட எந்த உறவும் இல்லை. உóத்த புது துணியுமில்லை. சொல்லப் போனால் கிடைத்த உணவுகளை உண்டு தான் வாழ்கின்றார்கள்.

தற்போது இந்த வருடம் முதல் அனாதை இல்ல குழந்தைகளை அருகிலுள்ள மாநகராட்சி பள்ளிகளில் கல்வி பயில சேர்த்துள்ளார்கள். வீட்டிருந்து வாழும் பிள்ளைகளின் சுதந்திர வாழ்க்கையை கண்டு தான் அனாதை என்பதை உணர்ந்து தனக்கும் இந்த சுதந்திர வாழ்வு எங்கு கிடைக்கும் என ஏங்கி கிடக்கும் பிள்ளைகளின் தாகம் அனைவரின் முகத்திலும் பிரதிபக் கின்றது.

கடந்த பண்டிகையின் போது பாரதமாத நற்பணி சங்கம் மூலமாக நானும் எமது நண்பர்களும் வழக்கம் போல் சென்றிருந்த போது ஓடி வந்து கட்டியணைத்து எங்களுக்கு முத்தமழை பொழிந்து ஒவ்வொரு குழந்தையும் கேட்ட கேள்வி நான் அனாதையான்னா? எனக்கு அப்பா, அம்மா இல்லையா? என் ஸ்கூல் பிரண்டு கேட்கிறான் சொல்லுங்க? என்றார்கள் அதிர்ச்சியில் உறைந்து போனோம். என்ன தான் அனாதை இல்லங்கள் சிறப்பாக நடத்தப் பட்டாலும் குழந்தைகளின் ஒட்டுமொத்த ஏக்கத்தை எப்படி அவர்களால் துடைக்க முடியும்?

பண்டிகை நாள் முழுக்க இருந்து பாட்டு, கராத்தே, இன்னிசை, உணவு என முழுவதும் ஒரு நாள் இருந்து புறப்படும் போது நாங்கள் சொன்னோம். குழந்தைகளா! உங்களுக்கு வேண்டிய உணவு, பக்ஷ்ங்கள், பிஸ்கெட், எல்லாம் தந்திருக்கிறோமே அóத்த முறைவúம்போது உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்கள். வாங்கி வருகின்றோம் என்று சொல் முடிப்பதற்குள் ஒரு குழந்தை அண்ணா! உணவு, பிஸ்கெட் எல்லாம் வேணாம் எனக்கு அóத்த முறைஒரு அம்மாவும், அப்பாவும் வாங்கிட்டு வாங்க எனக்கு அது போதும் என்றான். வாழ்க்கையின் நடைமுறைஅறியாத பிள்ளையின் ஏக்கத்தை பார்த்து கண்கலங்கி விட்டோம். இன்னொரு குழந்தை, அண்ணா! எனக்கு ஒரு தாத்தா வேணும் வாங்கிட்டு வாங்க தாத்தா நிறைய கதை சொல்லுவாங்களாம் கேட்கணும் சரியா என்றான். கனத்த இதயத்தோடு விடைபெற்று வந்தோம்.

அன்பு நண்பர்களே! வருடம் முழுவதும் தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் ஓடி ஓடி உழைக்கும் நாம் விடுமுறை நாளில் இல்லை இல்லை வருடத்தின் ஒரு பண்டிகை நாட்களி லாவது தனக்கு அருகிலுள்ள ஆதரவற்றவர் வாழும் இல்லங்களுக்குச் சென்று வரலாமே.

இந்த புத்தாண்டில் புது சபதம் எடுப்போம். இந்த ஆண்டில் அந்த ஆதரவற்ற பிஞ்சு குழந்தைகளுக்கு தாயின் அன்பையும், தந்தையின் அன்பையும், தாத்தாவின் அன்பையும் பரிசாக தந்து வாழ்வை பிறர்க்கென வாழ்ந்து பார்ப்போம் வாருங்கள்!

ஆதரவற்றவர்கள் வாழும் இல்லங்களின் உதவிகளுக்கு அழையுங்கள் செல் 99949 76720

குழந்தை வரமின்றி இறைவனை நாடும் தம்பதியர்கள் ஏன் இந்த இறைவனின் பிள்ளை களை தத்து எடுக்கக்கூடாது?

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2010

அச்சீவர்ஸ் அவென்யூ
மாற்றம் மலரட்டும்!
ஈரோட்டில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்
புத்தாண்டே வருக! புதுப்பொழிவைத் தருக!
தடைகளைத் தகர்த்திடு!
வெற்றியின் வேர்கள்.
பன்றிக் காய்ச்சல் பற்றி…
இங்கிலாந்து சுற்றுலா
NATA-2010, B Arch நுழைவுத்தேர்வு
உன்னதமாய் வாழ்வோம்! நல்கொழுப்பாக வாழ்வோம்!!
விழித்தெழு மனமே…
ஒரு பிடி பேச்சு
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் ‘ரேங்க்’
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் 'ரேங்க்'
வெற்றி மீது வெற்றி வந்து சேரும்
இறைவனின் பிள்ளைகள், இனி நம் பிள்ளைகள்
உன்னைப்பற்றி ஒரு நிமிடம்
முயன்றேன், வென்றேன்
மகிழ்ச்சி
பலதரப்பட்ட உடற்பயிற்சிகள்
தேர்வு என்றால் திகிலா
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
சாதிக்க விரும்பு! சரித்திரம் உனக்கு!!
உள்ளத்தோடு உள்ளம்