Home » Articles » பலதரப்பட்ட உடற்பயிற்சிகள்

 
பலதரப்பட்ட உடற்பயிற்சிகள்


சைலேந்திர பாபு செ
Author:

– முனைவர் செ. ûலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.

உடலுறுதி தாங்கும் சக்தி, வளையும் தன்மை, தியானம், மூச்சுப்பயிற்சி என்று அமைந்த உடற்பயிற்சிகளைத் தேர்ந் தெடுத்து உடற்பயிற்சி செய்வது நல்லது. ஒரே உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்வதும் நல்லது அல்ல. ஒரு வாரத்தில் நான் செய்யும் உடற்பயிற்சிகள்

திங்கள் 1 மணிநேரம் ஓட்டம்

செவ்வாய் 1 மணிநேரம் எடைப் பயிற்சி

புதன் 1 மணிநேரம் கராத்தே பயிற்சி

வியாழன் 1 மணிநேரம் ஓட்டப் பயிற்சி

வெள்ளி 1 மணிநேரம் எடைப் பயிற்சி

சனி 1 மணிநேரம் ஓட்டப் பயிற்சி

ஞாயிறு 1 மணிநேரம் கராத்தே பயிற்சி

மூன்று நாள் ஓட்டம், இரண்டு நாள் எடைப் பயிற்சி, இரண்டு நாள் கராத்தே பயிற்சி. ஆனால் ஒன்றைச் சொல்ல வேண்டும். ஓடுவதற்கு முன்னரும், ஜிம் செய்வதற்கு முன்னரும், கராத்தே பழகுவதற்கு முன்னரும் உடல் தயார் பயிற்சி 15 நிமிடம் செய்து கொள்வேன். இதுவே நான் செய்யும் யோகாசனம். தனியாக யோகாசனம் செய்வது இல்லை. கராத்தே பழகாமலிருப்பவர்கள் அந்த இரண்டு நாளும் யோகாசனம் செய்யலாம்.

சில அனுபவங்களை மற்றவர்களுக்குச் சொல்லி புரிய வைக்க முடியாது. அது அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். சந்தன கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் பணியின் போது, மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் பல நாட்கள் தங்கியிருந்தேன். அங்கு நிலவும் தட்பவெப்பம், மாசற்ற காற்று, சுத்தமான தண்ணீர் ஆகியவற்றை நுகர்ந்த ஒரு அனுபவம் எனக்கு உண்டு. அந்தச் சுகமான அனுபவத்தைச் சொல் மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடி யாது. அதை அனுபவித்துத்தான் தெரிந்து கொள்ள முடியும்.

உடற்பயிற்சியும் அவ்வகையே. உடற் பயிற்சியினை வழக்கமாக செய்து பார்த்தால் தான் அந்த அருமையான இன்பத்தை உணர முடியும். சில வேளைகளில் தசைகளில் ஏற்படும் வலி கூட ஒரு சுகமானவையாகவே இருக்கும். நான் சொன்ன முறையில் உடற்பயிற்சியைத் துவக்குங்கள். ஒராண்டு கழித்து உங்கள் அனுபவத்தை ஒரு கடிதமாக எனக்கு எழுத நீங்கள் விரும்புவீர்கள். அப்படி எழுதப்பட்ட உங்கள் கடிதம் எனக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாக இருக்கும். அது இந்நூன் அடுத்த பதிப்பில் பிரசுரமாகும்.

உடற்பயிற்சிக் கலாச்சாரம் (Exercise Culture)

நம்நாட்டு மக்கள் மத்தியில் உடற்பயிற்சிப் பழக்கம் குறைந்து இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் காட்டிய முனைப்பு கூட இப்போது உள்ள இளைஞர்கள் விளையாட்டில் காட்டுவது இல்லை. நான் சிறுவனாக இருக்கும்போது ஊருக்கு ஊர் வாலிபால் விளையாடுவார்கள். அந்த விளையாட்டு இப்போது குறைந்து விட்டது. அதே போல கால் பந்து மற்றும் கூடைப்பந்து விளையாடுபவர் களின் எண்ணிக்கையும் குறைவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இளைஞர் மத்தியில் கிரிக்கெட் பிரபலமாகி இருக் கிறது. கிரிக் கெட்டில் எத்தனை முறை வெற்றியடைந்தாலும் ஆசிய போட்டியில் பதக்கம் கிடைத்து விடாது. ஏனென்றால் இவ்விரு போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு ஒரு போட்டியாகவே இல்லை. கிரிக்கெட் விளையாட்டைப் பார்ப்பவர்களும், அதைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பவர்களும் கூட கிரிக்கெட் விளையாடுவது இல்லை. விளையாடிவிட்டார்கள் என்றால் அதுவும் ஒர் உடற்பயிற்சி என்று திருப்தி அடைந்து விடலாம்.

தடகளப் போட்டிகள் என்பது ஓடுதல், தாண்டுதல், எறிதல் போன்ற பயிற்சிகளைக் கொண்டவை. இதில் ஒலிம்பிக் போட்டிகளில் 46 தங்கப் பதக்கங்கள், 46 வெள்ளிப் பதக்கங்கள், மற்றும் 46 வெண்கலப் பதக்கங்கள் என்று 138 பதக்கங்கள் உள்ளன. தடகளப் போட்டிகளில் இதுவரை நடந்த 26 போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கம் என்பது வேதனையான விஷயம். இந்திய தடகள வீரர்கள், மில்கா சிங் (1960,ரோம்) பி.டி.உஷா (1980, மாஸ்கோ), அஞ்சுபாபி ஜார்ஜ் (2004, ஏதென்ஸ்) ஆகியோர் இறுதிச் சுற்றில் பங்கேற்று உள்ளனர் அவ்வளவுதான். இதில் பி.டி. உஷா ஒரு வினாடியில் நூறில் ஒரு பங்கு என்ற அளவில் 400 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கத்தை இழந்தார்.

இந்தியா ஒலிம்பிக் பதக்கங்கள் பெறாதது ஏன்?

நமது இளைஞர்களிடம் தடகள விளையாட்டுகள் விளையாடு வதில் ஆர்வம் குறைவாக இருக்கிறது. நாம் அனைவரும் தினமும் ஓடும் பழக்கத்தை ஏற்படுத்தினால் நமது சந்ததியினரும் ஓடுவார்கள். வேகமாக ஒடும் இளைஞனைக் கண்டுபிடிக்க முடியும். விளை யாட்டுப் போட்டியில் வெற்றி பெறும் அந்த வீரனுக்கு மக்கள் மத்தியில் மரியாதை உண்டாகும். அவனுக்கு பரிசும் பாராட்டும் குவியும். அப்படிப்பட்ட இளைஞனை விளையாட்டுப் போட்டி களுக்குப் பெற்றோரும் அனுப்பி வைப்பார்கள். அப்படி ஒரு நிலை இன்று கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் உள்ளது. தடகள வீரர்களுக்கு தகுந்த அங்கீகாரம் இல்லா மலேயே இருக்கிறது. தடகள வீரர்களுக்கு தகுந்த அங்கீகாரம் வேண்டும் என்றால் விளையாட்டு நமது கலாச்சாரமாக வேண்டும்.

உடற்பயிற்சிக் கலாச்சாரம் இல்லாமல் போனதால் வந்த விளைவு என்ன தெரியுமா? 2004-ஆம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் நடந்த ஒம்பிக் போட்டியில் 110 கோடி மக்கள் வாழும் இந்தியா விற்கு ஒரேயொரு பதக்கம்தான் கிட்டியிருக்கிறது. துப்பாக்கி சுடும் வீரர் ராஜ்ய வர்தன் சிங் ரத்தோர் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

நம்மை விட மிகச்சிறிய நாடுகளான தென்கொரியாவிற்கு 30 பதக்கங்கள், ஜெர்மனிக்கு 48 பதக்கங்கள், ஜப்பானுக்கு 37 பதக்கங்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு 103 பதக்கங்கள்!

உடற்பயிற்சிக் கலாச்சாரம் என்பதை இன்னும் தெளிவாக விளக்கவேண்டுமானால் ஜப்பான் நாட்டை எடுத்துக் கொள்ளலாம். தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கினாலும், தனிமனித வருமானம் அதிகமாக இருந்தாலும் ஜப்பானியர்கள் தினமும் விளையாடுகிறார்கள். மிகவும் வயதான முதிர்ந்தவர்கள் கூட விளையாட்டரங்குகளில் ஒடிக் கொண்டிருப் பதைக் காண முடிகிறது. அதனாலோ என்னவோ ஜப்பானியர்கள் சராசரியாக 87 வருடங்கள் வாழ்கிறார்கள். இந்தியர்கள் 67 ஆண்டுகள் மட்டும் வாழ்கிறோம். நம் நாட்டில் சினிமா பார்க்கும் கலாச்சாரம் பரவியிருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது போன்று எல்லா மாநிலங்களிலும் இந்தச் ‘சினிமா கலாச்சாரத்தில் ஒற்றுமை காணப்படுகிறது. தொலைக்காட்சிகளில் Animal Planet, National Geography, Discovery ஆகிய சேனல்கள் அறிவியல் பூர்வமான செய்திகளை மிகவும் ஆச்சரியம் பார்க்காமல் உள்ளூர் சினிமாக்களையே விரும்பிப் பார்க்கிறார்கள். பொழுதுபோக்கு என்பது சினிமா மட்டும் தான் என்றாகி விட்டது.

இந்த நிலை மாறி விளையாட்டே பொழுது போக்காக வேண்டும். சினிமாக்களில் எப்படி தீவிர ஆர்வம் காட்டுகிறார்களோ அதே அளவிற்கு விளையாட்டில் ஆர்வம் காட்டும் போது உடற்பயிற்சிக் கலாச்சாரம் இந்நாட்டில் வளரும். அன்று ஒட்டு மொத்த இந்தியர்களின் உடல்நலம் மேன்மையுறும். இந்தியாவுக்கு ஒ-ம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் கிடைக்கும்.

உடல் நலம் காத்தல் : அன்றாடக் கடமை

உடல்நலம் என்பது சில நாட்கள் மட்டும் பேணிக் காக்கப்பட வேண்டியது அல்ல. தொடர்ந்து பராமரிக்கப்படுதல் வேண்டும். ஒவ்வொரு நாளும் அளவான உணவை உண்டு போதுமான உடற்பயிற்சியைத் தவறாமல் செய்தல் வேண்டும்.

ஒரு சிலர் திடீர் ஆர்வம் ஏற்பட்டு சில நாட்கள் உடற்பயிற்சி செய்து நல்லதொரு உடலுறுதியும், தாங்கும் சக்தியும், வளையும் தன்மையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். பின்னர் உடற்பயிற்சி செய்வதை அப்படியே விட்டுவிடுகின்றனர். இதனால் உடல் மீண்டும் பழைய நிலையை விட மோசமாகிறது. இவர் தொடர்ந்து உடற்பயிற்சியினைச் செய்திருந்தால் அதுவே ஓர் நிரந்தரமான பழக்கமாகியிருக்கும்.

உணவுப் பழக்கத்தை எடுத்துக் கொள்வோம். இன்று நன்றாக சாப்பிடுவோம், நாளை உணவைக் குறைத்துக் கொள்ளலாம் என்று தினமும் முடிவெடுத்தால் சில நாட்களில் உடல் பருமனாகிவிடும். அதுவுமில்லாமல், உடல் பல அங்கங்களும், செல்களும் முதுமை அடைந்துவிடும். பின்னர் இளமையைத் திரும்பப் பெறுவதும், எடையைக் குறைப்பதும் சிரமமாகி விடும்.

அதைப்போல உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீர் என்று அப்பழக்கத்தை விட்டுவிட்டாலும் உடல் தாங்கும் தன்மையை மீட்க பல மாதங்கள் ஆகிவிடும். ஒருவர் ஒரு வருடம் ஓடவே இல்லை என்று வைத்துக் கொள்வோம். பின்னர் திடீர் என்று ஒருநாள் அவரை ஓடச்சொன்னால் அவரால் ஓட இயலாமல் போய்விடும். மீண்டும் பழைய உடல் தகுதிக்கு வர பல மாதங்கள் ஆகும். எனவேதான் சொல்கிறேன், உணவு மற்றும் உடற்பயிற்சியைப் பொறுத்தவரை அன்றைய கணக்கை அன்றே தீர்த்துக் கொள்ளுதல் வேண்டும். அன்றைக்கு தேவைப்படும் உணவை மட்டும் அன்று உண்ணுவோம். அன்று செய்ய வேண்டிய உடற்பயிற்சியை அன்றே செய்வோம்.

உடல்நலம் காக்கவும் உடல் எடையைக் குறைக்கவும் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன நூற்றுக்கணக்கான புத்தகங்களும் எழுதப்பட்டு விட்டன. உண்ண வேண்டிய உணவு வகைகளைப் பற்றி பலவித வாதங்களும் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. புரதத்தை அதிகம் உண்டு கார்போஹைட் ரேட்டை குறையுங்கள் என்று கூறுகிறார்கள் ஒரு சாரார். புரதத்தைக் குறைத்து, கார்போஹைட் ரேட்டுகளை அதிகம் உண்ண வேண்டும் என்கிறார்கள் இன்னொரு சாரார். எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம் ஆனால், உடல் உள்ள ஹார்மோன்களின் அளவைக் கட்டுப்படுத்துங்கள் என்று கூறுகிறார்கள் மற்றவர்கள். மதியம் வரை பழ வகைகளை மட்டும் உண்ணுங்கள், மொத்த உணவில் குறைந்தது 50 சதவீதம் பழங்கள் மற்றும் காய்கறி களை உண்ணுங்கள் என்று கூறுகிறார்கள் சமீப கால ஆராய்ச்சியாளர்கள். இவ்வனைத்து பரிந்துரைகளிலும் அறிவியல் ஆதாரங்கள் உண்டு.

ஆக, உணவைப் பொறுத்தவரை இப்படி பல்வேறு கருத்துகள் நிலவி வருகிறது. அதே வேளையில் அவ்வனைவருமே ஒரேயொரு விஷயத்தில் மட்டும் ஒருமித்த கருத்தினைக் கொண்டிருக்கிறார்கள். அது, உடல் நலம் காக்க வாரத்திற்கு மூன்று நாட்களுக்குக் குறையாமல் ஏரோபிக் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதே ஆகும்.

தொடரும்…

 

2 Comments

  1. m.sakthivel says:

    ஐயா எனது பெயர் சக்திவேல் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவன். நான் இறுதி ஆண்டு பொறியியல் பட்டபடிப்பு படித்து வருகிறேன். உங்கள் மாதஇதழ்களை அனைத்தும் படித்தேன் இது என்னை போன்ற இளைஞ்சர்களுக்கு மிகவும் பயனுள்ள தாக இருக்கும் என நம்புகிறேன். நான் பாலிடெக்னிக் படிக்கும் போது உங்களிடம் பரிசு வாங்கியதை மறக்க முடியாது. எனக்கு சின்ன வயதிலிருந்தே ஒரு பெரிய போலிஸ் ஆக வேண்டும் என்பதே எனது லட்சியம் ஆசை வெறி என்றே கூறலாம் .நான் தமிழ் வழிலேதான் பாடம் கற்றேன். நானும் உங்களை போல ஓரு பெரிய நேர்மயான அதிகாரியாக ஆக வேண்டும் என்பதே எனது ஆர்வம்.அதற்காவழிமுறைகளை தாங்கள் தருமாறு கேட்டு கொள்கிறேன்.மேலும் உங்களுடன் உரையாட ஆசை படுகிறேன் உங்கள் கடிதத்திற்காக காத்திருக்கும் உங்கள் மாணவன்

Post a Comment


 

 


January 2010

அச்சீவர்ஸ் அவென்யூ
மாற்றம் மலரட்டும்!
ஈரோட்டில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்
புத்தாண்டே வருக! புதுப்பொழிவைத் தருக!
தடைகளைத் தகர்த்திடு!
வெற்றியின் வேர்கள்.
பன்றிக் காய்ச்சல் பற்றி…
இங்கிலாந்து சுற்றுலா
NATA-2010, B Arch நுழைவுத்தேர்வு
உன்னதமாய் வாழ்வோம்! நல்கொழுப்பாக வாழ்வோம்!!
விழித்தெழு மனமே…
ஒரு பிடி பேச்சு
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் ‘ரேங்க்’
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் 'ரேங்க்'
வெற்றி மீது வெற்றி வந்து சேரும்
இறைவனின் பிள்ளைகள், இனி நம் பிள்ளைகள்
உன்னைப்பற்றி ஒரு நிமிடம்
முயன்றேன், வென்றேன்
மகிழ்ச்சி
பலதரப்பட்ட உடற்பயிற்சிகள்
தேர்வு என்றால் திகிலா
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
சாதிக்க விரும்பு! சரித்திரம் உனக்கு!!
உள்ளத்தோடு உள்ளம்