Home » Articles » சிந்தனை போதும் மானிடனே… செயல்படு உடனே…

 
சிந்தனை போதும் மானிடனே… செயல்படு உடனே…


பாலா
Author:

வசந்த், பதினாறாம் வயதில்…

“டேய் டூர் போற, அங்க இங்கன்னு சுத்தக்கூடாது! டீச்சர் சொல்றபடி நடந்துக் கணும். இந்தா! ஐந்நூறு ரூபாய் இருக்கு! பாத்து செலவு பண்ணு. போனவுடன போன் பண்ணு. தினமும் எனக்கு தூங்கறதுக்கு முன்னாடி போன் பண்ணனும்! புரிஞ்சுதா? காசு பத்திரம்!!” என்ற தந்தைக்கு பதிலாய், ஒரு புன்னகையினை உதிர்த்து விட்டு சென்றான்.

சுற்றுலா பயணம் முடிய இரண்டு நாட்கள் இருந்தன. “டேய் ரமேஷ்! ஒரு நூறு ரூபாய் கடன் கொடுடா.. நான் கொண்டு வந்த காசெல்லாம் செலவாயிடுச்சு…” என்று கேட்டவன் வசந்த்.

வசந்த், இருபத்தி மூன்றாம் வயதில்….

“வசந்த் நூறு ரூபாய் மட்டும் கிடைக்கு மாடா? காலேஜ் பீஸ் கட்டணும்!” என்ற நண்பனுக்கு பதிலாய், “டேய் இந்த தடவ வீட்டிலிருந்து வந்த காசெல்லாம் முடிஞ்சிதுடா… அடுத்த அனுப்புற வரைக்கும் என் பாக்கெட்ல சல்லி காசு கிடையாது! நான் உன்கிட்ட ஒரு ஐம்பது ரூபாய் கடன் கேட்கலாமன்னு இருந்தேன்” என்றான் வசந்த்.

வசந்த், முப்பதாம் வயதில்…

“தம்பி வசந்த்! ஏண்டா? மொத்த சம்பளத்தையும் இன்னைக்கே இங்கேயே முடிச்சிருவ போலிருக்கு! என்றார் சம்பத், வசந்தின் அலுவலக நண்பர்.

சம்பளத்திற்கு பதிலாய், “சம்பத்,… நான் இன்னைக்கு ரொம்ப குஷியா இருக்கேன். என்னோட வேலை உயர்வு அத்தோட சம்பள உயர்வு. இரட்டை சந்தோஷம்!! அதனாலதான் இந்த பார்ட்டி….”

“சரிடா! அது ஓகே. ஆனா நீ சம்பாதிக்கிற 15,000க்கு இது ஜாஸ்தி. 5 ஸ்டார் ஹோட்டல், ஏசி ரூம்… இதெல்லாம் தேவையா?” மீண்டும் ஒரு கேள்வியுடன் சம்பத் முன்வர, ” காசு சம்பாதிக்கறது எதுக்கு? வாழ்க்கைய ஜாலியா என்ஜாய் பண்ணதான்…. என்ஜாய் பண்ணுப்பா!!” பெரும் சிரிப் பொலியுடன் தில் வந்தது வசந்திடமிருந்து.

வசந்த், முப்பத்தி ஐந்தாம் வயதில்….

“ஹேய் ஆர்த்தி… உனக்கு தெரிஞ்சவங்க யார் மூலமாவது கொஞ்சம் பணம் ஏற்பாடு பண்ண முடியுமா? உன் பேர்ல, உங்க ஆபீஸ்ல லோன் கொடுப்பாங்கல்ல… முடியுமா…” கெஞ்சாத குறையா கேட்ட வசந்திற்கு பதிலாய் மௌனத்தையே சிந்தினாள் மனைவி.

“என்னடி நான் பேசிக்கிட்டே இருக் கேன். பேசாமலேயே இருக்க? எனக்கொரு கஷ்டம்னா யார போய் கேட்க முடியும்? இந்த லட்சணத்துல நம்ம ரெண்டு பேரும் வேலைக்கு போறோம். புயலாய் கிளம்பி அமைதியானார் வசந்த். அவருக்கு பதிலாய்,

“என்கிட்ட பணம் இருக்கு. அத உங்களுக்கு கொடுத்துட்டா நாளைக்கு நம்ம பையனோட ஸ்கூல் பீஸ், டியூசன் பீஸ், எப்படி கட்டறது? அத யோசிக்காதீங்க… காசை சேமிச்சு வெச்சிருக்கணும்… கெடைக்கிறதை எல்லாம் செலவு பண்ணா…” என்று கண்ணீர் மல்கி பொறிந்து தள்ளினார் மனைவி.

வசந்த், நாற்பதாம் வயதில்….

“ஹலோ! ஹலோ சார்! நான் வசந்த் பேசறேன்…! ஆமா சார், சாப்ட்வேர் என்ஜினியரா உங்க கம்பெனியிலே ஐந்து வருடத்திற்கு முன்னாடி வேலை பண்ணியிருக்கேன். ஆமா சார். இப்.. இப்போ சொந்தமா பிஸினஸ் ஆரம்பிக்கலாமன்னு இருக்கேன். அதான் உங்கள் ஹெல்ப் தேவை. இல்ல சார், அதெல்லாம் வேண்டா… கடனா எனக்கு எட்டு லட்சம் தேவை… ஹலோ! ஹலோ சார்! கேக்குதா? ஹலோ! ஹலோ….” அலைபேசியினை வெடுக்கென்று வீசிவிட்டு தலையை பிடித்து உட்கார்ந்து கொண்டார் வசந்த்.

வசந்த், ஐம்பதாம் வயதில்…

“மேல்படிப்பெல்லாம் வேணான்டா… இங்கேயே ஏதோ வேலைக்கு போக பாரு! சொந்த பிஸினஸ் கிஸ்னஸ் எதுவும் வேணா! வெளிநாட்டுக்கு உன்ன படிக்க அனுப்பிட்டு, நானும், உங்க அம்மாவும் இங்க பயந்துட்டு இருக்கணும். நெறைய செலவாகுமே! அதுக்கு என்ன பண்றது? அதெல்லாம் வேண்டா…” என்று வசந்த் கூறி முடிக்கையில், மனைவியும் மகனும் விரக்தியுடன் அங்கிருந்து சென்றனர்.

வசந்த், இயற்கை எய்தினார், அவரது இறுதி ஊர்வலத்தில்….

“நல்ல மனுசன்தான்! தண்ணி, சிகரெட்ன்னு எந்த கெட்ட பழக்கமும் இல்ல. இப்படி இறந்துட்டாரே….” என்றார் ஒருவன்.

அவனுக்கு பதிலாய், “அட அது சரிப்பா. ஆனா மனுசன் வீட்டுக்கோ, பையனுக்கோ ஒண்ணும் பெருசா சேமிச்சு வெக்கலையே…” என்றான் மற்றொருவன்.

“ஆமா கெடைக்கற காசையெல்லாம் தண்ணியா செலவழிச்சு வாழ்ந்தா இப்படிதான்!” என்று கூறி சிரித்தான் மற்றொருவன். சிரிப்பு களுக்கு நடுவே, ஆழ்ந்த அமைதியில் வசந்த் பயணிக்கலானார், அமரர் ஊர்தியினிலே….

 

1 Comment

  1. padiththathil nampikkaivanthathu

Post a Comment


 

 


December 2009

நூற்றுக்கு நூறு
அன்புள்ள அம்மாவுக்கு
இன்று மகிழ்ச்சி நாள்
நலம்தானா?-1
நாங்கள் இளைஞர்கள்
நலம்தானா?
இன்று மகிழ்ச்சி நாள்
வெற்றி என்னும் பூங்கவிதை!
புகழ்பட வாழ…!
அச்சீவர்ஸ் அவென்யூ
இன்று மகிழ்ச்சி நாள்
நிறுவனர் நினைவுகள்
உன்னதமாய் வாழ்வோம்!
ஊக்கமும் சுறுசுறுப்பும்
வெளிச்சம்
சரியான செயல்திட்டம் தேவை
IIT-JEE நுழைவுத்தேர்வு 2010
துணிவுடன் போராடு! – கோபி பயிலரங்கம்
சிந்தனை போதும் மானிடனே… செயல்படு உடனே…
இலக்கு ஒன்று மட்டுமே வெற்றிக்கு விளக்கு!
வேண்டும் வேண்டாம் தெரிந்தால் வெற்றி பெறத் தெரியும்
மேன்மைக்கான வழி
திறந்த உள்ளம்
தேர்வு என்றால் திகிலா
18 ஜில்ஸ்வெர்னி பெற்ற வெற்றி
14 மனிதநேயமே மூலதளங்களின் அடித்தளம்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
ஒருங்கிணைந்து செயல்படுவோம்! ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியேற்றுவோம்!!
உள்ளத்தோடு உள்ளம்