Home » Articles » வேண்டும் வேண்டாம் தெரிந்தால் வெற்றி பெறத் தெரியும்

 
வேண்டும் வேண்டாம் தெரிந்தால் வெற்றி பெறத் தெரியும்


முருகேசன் ஆர்
Author:

– ஆர். முருகேசன்

மனிதர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்கள். வேறுபட்ட சிந்தனைகளும் செயல்பாடுகளும் கொண்ட மனிதர்கள் எவ்வாறு ஒன்றுபட்டு வாழ்கிறார்கள் என்று சிந்தித்தால் மற்றவர்களின் அவசியம் தமக்கு புரியும். தனிமனித வெற்றி என்று எதையும் சொல்விட முடியாது. ஒன்றோடு ஒன்று, மற்றொன்றோடு இன்னொன்று என்பது தான் உலக உயிரினத்தின் உயிர்விதி என சொல்லலாம். இந்த உலகில் ஒவ்வொருவரும் ஒருவரை சார்ந்திருக்க வேண்டும். அதற்கு மற்றவர்களோடு சேர்ந்திருக்க வேண்டும்.

முதல் எப்படியெல்லாம் நாம் வேறுபடுகிறோம் என பார்க்கலாம். பள்ளியில் குழந்தைகளுக்கு பாடம் நன்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது என்றால் எல்லா குழந்தைகளும் நன்றாக, ஆசிரியர் விருப்படுகிற, அல்லது எதிர்பார்க்கிற மாதிரி கற்றுக் கொள்கிறார்களா? என்றால் இல்லை. ஒவ்வொருவரும் வேறுபடுகிறார்கள். சரி பாடம் ஒன்றுதான், சொல்லிக் கொடுக்கும் விதம் ஒரேமாதிரியா என்றால் அதுவும் இல்லை. ஒவ்வொரு ஆசிரியரும் வேறுபடுகிறார்கள்.

வணிகத் தொய்வுக் காரணத்தினால் வணிக மேலாளர்களுக்கு ஊக்கமளிக்க பயிற்சி வகுப்புகளை நடத்தினால் சில பேருக்கு ஊக்கம், சிலருக்கு தூக்கம், வேறுசிலருக்கோ துக்கம் போல் அவர்களின் உடல்மொழி வெளிப்படுகிறது. சரி சிரிப்பு வெடிகளை தூவிப்பார்க்கலாம் என்றால், ஒருவர் விலா நோகச் சிரிக்கிறார். இன்னொருவர், ஏன் தான் இப்படி நோகடிக்கிறார்களோ, என உடல் அசையாமல் வாயசைக்கிறார். ஏன் இந்த வேறுபட்ட வெளிப்பாடுகள் என்றால் ஒவ்வொரு மனிதரும் வெவ்வெறு விதமாக புரிந்து கொள்வதும் ஏற்றுக் கொள்வதுமாக இருக்கிறார்கள் என்பது புரியும். ஒரே மொழி பேசுபவராக இருந்தாலும் அவர்களின் புரிதல் மொழி வேறுபடுகிறது. அந்த புரிதல் மொழி தான் நம்மை மற்றவர்களிடம் ஏற்றுக்கொள்ள வைக்கிறது. அப்படி ஏற்றுக்கொள்வதே நம்முடைய வெற்றியாகிறது. அந்த புரிதல் மொழியை கற்றுக் கொண்டு பேசுவது என்பதே மற்றவர்களை கவரும் பண்புகளாகிறது. இது ஒருமனிதன் இன்னொரு மனிதனை சந்திக்கும் போது ஏற்படுகிற உடனடியாக ஏற்படுகிற மனக்கிரியை தானே. சற்று முன்வீதியில், சந்தையில், பள்ளியில், பயணத்தில் வேலையில் ஈடுபடும்போது உங்களுக்கு நடந்த நிகழ்வுகளை எண்ணிப்பாருங்கள். முன்பின் தெரியாத ஒருவரிடம் சந்தோசமாக பேசியிருப்பீர்கள் அல்லது அவர்கள் உங்களிடம் பேசியிருக்கலாம். இல்லையெனில், இருவரும் என்னவென்று புரியாமல் விலகிச் சென்றிருக்கலாம். இந்த ஈர்ப்பு – விலகு பண்பு தான் நம்முடைய புரிதல் மொழி ஆகும். நம் உடன்பாட்டு எண்ண அலைகள் மற்றவர்களை ஈர்க்கும். எதிர்மறை எண்ண அலைகளோ விலக்கும் அல்லது அவர்களை விலகிச்செல்ல தூண்டும். ஈர்க்கும் பண்பு “வேண்டும்” என்றும், விலகுதல் “வேண்டாம்” என்றும் வகைப்படுத்திக் கொள்ளலாம். எனவே மற்றவர்களின் “வேண்டும்” “வேண்டாம்” தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

நீங்கள் ஒருவேளை வணிகம் செய்பவராக இருந்தால் அந்த பொருள் வாங்குபவருக்கு எந்தப் பயனை கொடுக்கும். எந்தத் தீங்கைக் கொடுக்காது என்பதை அடிப்படையாகக் கொண்டு தான் விற்பனை செய்யமுடியும். கார் உங்களது பொருளாக இருப்பின் இந்த கார் இந்த வசதிகளையெல்லாம் தருகிறது என்றோ இந்த தொல்லைகளையெல்லாம் தராது என்றோ விளக்கம் அளித்து தான் விற்க வேண்டி இருக்கும். நீங்கள் ஒரு இன்சூரன்ஸ் ஆலோசகராக இருந்தால் இந்த நிறுவனத்தின் இந்த திட்டம் இந்த மாதிரி லாபத்தை அல்லது வசதிகளை அளிக்கிறது என்றோ இந்த மாதிரியன நஷ்டத்தையோ அல்லது உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத சேவைக் குறைபாடுகள் இல்லாத திட்டம் என்று விவரித்து தான் விற்பனை செய்ய முடியும். இதில் பயன், வசதி, லாபம் என்பதெல்லாம் “வேண்டும்” என்ற வகையினை சார்ந்தவைகள். தீங்கு, தொல்லை, சேவைகுறைபாடு போன்றவை “வேண்டாம்” என்ற வகையை சார்ந்தவைகளாகும். மனிதர் களுடைய நட்பு, உறவு, வியாபாரம், திருமணம் இப்படி எதுவாக இருப்பினும் “வேண்டும்” “வேண்டாம்” அடிப்படையில் செயல்பட வேண்டி இருக்கும்.

குழந்தைகளை படிக்கச் சொல்லும் போது பல இல்லங்களில் இப்படி நிகழலாம், சந்தோஷமான வசதியான வாழ்க்கை அமையும். இல்லாவிடில் உருப்படியில்லாமல் ஊர்சுற்றிக் கொண்டிருக்கும் அவனை(ளை) போல் நீயும் ஆகிவிடுவாய் என்று பெற்றோர்கள் சொல்லும் போது வேண்டும் என்னும் கருத்தில் ஈர்ப்பையும் வேண்டாம் என்பதில் விலகுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மாறாக நன்றாக படித்தால் நீ விரும்பும் கல்லூரியில்; நீ விரும்பும் படிப்பை தொடர முடியும் அதனால் உன் வாழ்க்கை சந்தோசமானதாக வசதி நிறைந்ததாக அமையும் எனச் சொன்னால் விரும்பிய கல்லூரி, விரும்பிய படிப்பு வசதியோடு சந்தோசமான வாழ்க்கை போன்ற“வேண்டும்” என்னும் ஈர்ப்பை நோக்கி மட்டுமே செல்ல வாய்ப்பு இருக்கிறது.

ஆம். நண்பர்களே, மற்றவர்களின் புரிதல் மொழியில் மற்றவர்களின் வேண்டும் வேண்டாம் எவை எவை எனத் தெரிந்தால் நிச்சயமாக உங்களுக்கு வெற்றி பெறத் தெரியும் என்பது எனக்கு தெரியும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2009

நூற்றுக்கு நூறு
அன்புள்ள அம்மாவுக்கு
இன்று மகிழ்ச்சி நாள்
நலம்தானா?-1
நாங்கள் இளைஞர்கள்
நலம்தானா?
இன்று மகிழ்ச்சி நாள்
வெற்றி என்னும் பூங்கவிதை!
புகழ்பட வாழ…!
அச்சீவர்ஸ் அவென்யூ
இன்று மகிழ்ச்சி நாள்
நிறுவனர் நினைவுகள்
உன்னதமாய் வாழ்வோம்!
ஊக்கமும் சுறுசுறுப்பும்
வெளிச்சம்
சரியான செயல்திட்டம் தேவை
IIT-JEE நுழைவுத்தேர்வு 2010
துணிவுடன் போராடு! – கோபி பயிலரங்கம்
சிந்தனை போதும் மானிடனே… செயல்படு உடனே…
இலக்கு ஒன்று மட்டுமே வெற்றிக்கு விளக்கு!
வேண்டும் வேண்டாம் தெரிந்தால் வெற்றி பெறத் தெரியும்
மேன்மைக்கான வழி
திறந்த உள்ளம்
தேர்வு என்றால் திகிலா
18 ஜில்ஸ்வெர்னி பெற்ற வெற்றி
14 மனிதநேயமே மூலதளங்களின் அடித்தளம்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
ஒருங்கிணைந்து செயல்படுவோம்! ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியேற்றுவோம்!!
உள்ளத்தோடு உள்ளம்