Home » Articles » அச்சீவர்ஸ் அவென்யூ

 
அச்சீவர்ஸ் அவென்யூ


தங்கவேலு மாரிமுத்து
Author:

சீனாவை சேர்ந்தவர். ஜப்பானியப் படைக்குப் பயந்து, ஹாங்காங்கில் குடியேறிய குடும்பம். இளமையிலேயே தந்தையை இழந்ததால் குடும்ப பாரம் தலையில் விழுந்தது.

சிறிய தொழிற்சாலை ஒன்றில் லாப்ட் கலாய் வேலை. பிறகு, பிளாஸ்டிக் பொருள்களை வீதியில் விற்கும் வேலை. பிறகு சில பதவி உயர்வுகள். திருப்தியடைந்துவிடவில்லை. ஷிங் தானே ஒரு சிறிய பிளாஸ்டிக் கம்பெனியை ஆரம்பித்தார். நல்ல லாபம்தான். திருப்தி அடையவில்லை. ஷிங் லைனை மாற்றினார். ரியல் எஸ்டேட் பக்கம் திரும்பினார். நல்ல லாபம். திருப்தி அடையவில்லை. ஷிங், யோசித்தார். இம்முறை லைனை மாற்றவில்லை. புதுமையைப் புகுத்தினார். நிலம் வைத்திருப்பவர்களிடம் ஒப்பந்தம் போட்டார். நிலம் அவர்களுடையது. ஃப்ளாட்டுகளை கட்டுவது இவருடையது. இருவரும் லாபத்தைப் பிரித்துக் கொள்ள வேண்டியது.

கிடுகிடுவென்று பிஸினஸ் வளர்ந்தது. லாபம் கொழித்தது. கோடிக்கணக்காய் கொட்டியது. திருப்தியடையவில்லை ஷிங். பங்கு மார்க்கெட், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் என்று பல துறைகளிலும் கால் பதித்தார்.

ஓயாது உழைக்கத் தெரிந்த உடலும், போதாது என்று நினைக்கத் தெரிந்த மனமும் தான் இந்த மனிதரின் உயரங்களுக்கு அடித்தளம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2009

பன்றி காய்ச்சலுக்கு சிக்காமல் இருப்பது எப்படி?
உன்னை நீ நம்பு!
அச்சீவர்ஸ் அவென்யூ
அச்சீவர்ஸ் அவென்யூ
திறந்த உள்ளம்
இந்திய உயிரியல் தொழில்நுட்ப இளம் விஞ்ஞானிகளை கவர்ந்து இழுக்கும் தென்கொரியா
வசந்தமே வருக!
உடலினை உறுதி செய்
மனிதா! மனிதா!!
எது சந்தோஷம்?
பாலியல் விழிப்புணர்வு
கற்பனையான எதிர்மறையான எண்ணங்களை விட்டுத்தள்ளுங்கள்
சிரமங்கள் இல்லாமல்! சிகரங்கள் இல்லை!!
பார்வை
தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்