Home » Articles » இந்திய உயிரியல் தொழில்நுட்ப இளம் விஞ்ஞானிகளை கவர்ந்து இழுக்கும் தென்கொரியா

 
இந்திய உயிரியல் தொழில்நுட்ப இளம் விஞ்ஞானிகளை கவர்ந்து இழுக்கும் தென்கொரியா


admin
Author:

இந்தியர்களுக்கு அறிமுகம் இல்லாத கொரிய தீபகற்பம், அங்கு இருக்கும் வாய்ப்புகள் இந்தியர்கள் இன்னும் புரியாமல் இருப்பது அதுவும் தொழில்நுட்பத்துறையில் அங்கு இந்தியர்களுக்கு இருக்கும் வாய்ப்புகளை நாம் அறியாமல் இருப்பது நமது தலைமுறை யின் முன்னேற்றத்திற்கு பெரிய தடைக்கல்.

நாம் தினமும் செய்தித்தாள்களில், தொலைக்காட்சியில் கொரியா பற்றி அதிகம் கேட்கும் செய்திகள், கொரியா அணுகுண்டு ஆப்பிரிக்க அணு உலைகளை நிறுவி வருகிறது. ஏவுகனைகளை ஜப்பான் மீது விட்டு பயமுறுத்து கிறது.இதனால் ஐநா சபை தடைகளை விதித்துள்ளது. எனவே அந்தநாட்டு மக்கள் பட்டினி, பஞ்சத்தில் இருக்கிறார்கள்.

இவை அனைத்தும் வடகொரியா பற்றியவைகள். அதுவும் உலகத்தில் இருந்து தனித்து விடப்பட்ட நாடாக விளங்குகிறது. ஆனால் மிகவும் வளர்ச்சி அடைந்த சாம்சங் டிவி,எல்.ஜி குளிர்சாதனப் பெட்டி என அனைத்து நவீன வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ஹுண்டாய் கார் போன்றவற்றை உலகத்தின் பல நாடுகளில் விற்று தன் அந்தஸ்தை கொண்டுள்ள தென்கொரியாவைப் பற்றி அதிகம் பத்திரிக்கை செய்திகள் வருவதில்லை, மிகவும் வளர்ச்சி அடைந்து அதிக வேலைவாய்ப்புகள், சிறந்த தொழில்நுட்பம் கொண்டுள்ள தென் கொரிய நாட்டை பற்றி நாம் அறியாமல் இருக்கிறோம். அங்குள்ள வாய்ப்பை நம் இளைய தலைமுறைகள் இன்றும் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். இதற்காகத்தான் இந்த கட்டுரை.

தென்கொரிய மின்பொருட்கள், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உற்பத்தியில் சாம்சங், ஹுண்டாய் நிறுவனங்கள் சிறந்து விளங்க காரணம் அங்குள்ள தொழில்நுட்ப திறன், அவர்களிடம் உள்ள அறிவியல் கட்டமைப்பு, மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகளே காரணம். மேலும் தென்கொரிய பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களால் கண்டுபிடிக்கப்படும் கண்டுபிடிப்புகள் தொழிற் சாலைகளில் செயல்பட உபயோகமான ஆராய்ச்சி முடிவுகளாக மாற்றப்பட்டு சந்தை படுத்தப்படுகிறது.

தென்கொரிய பேராசிரியர்கள் தங்கள் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவித்தல், ஆராய்ச்சி செய்வது மட்டும் இல்லாமல், அவர்கள் விரும்பி னால் தங்கள் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை தொழிற்சாலைக்கு எடுத்துச்சென்று அதை சந்தைப்படுத்த இயலும். மேலும் பல்கலைக் கழகத்தில் இருந்து கொண்டே ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை நடத்த இயலும். அதில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை பல்கலைக்கழக வளர்ச்சிக்கு கொடுக்கிறார்கள்.

மாணவர்களும் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி செய்யும் போது தொழிற்சாலைக்குத் தேவையான ஆராய்ச்சிகளை செய்து அதன் மூலம் லாபகரமான புதிய பொருட்களை சந்தைக்கு கொண்டு வர முடியும் என்பதை நிறுபனம் செய்கிறார்கள். மாணவர்கள் படித்து முடித்த உடன் எந்த தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லலாம் அல்லது எந்த தொழில் தொடங்கலாம் என தெளிவான முடிவுடன் கல்லூரி விட்டு வெளிவருகின்றனர். இப்படி வரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பற்றி கவலை இருப்பதில்லை.

இதைப்போன்ற முறைகளை இந்தியா வில் செயல்படுத்தலாம் இதனால் வரும் நன்மை கள் என்ன என்பதை இந்திய அரசு தீவிரமாக சிந்தித்து வருகிறது. புதிய கல்வி கொள்கைகளில் இதுவும் முக்கிய அம்சமாக இருக்கிறது.

கடந்த மாதம் அவனாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தில் இருந்து அதன் துணை வேந்தர் முனைவர் சரோஜா பிரபாகரன் அவர் களும்,உயிர் வேதியியல், உயிரியல் தொழில் நுட்பம் மற்றும் உயிர் தகவலியல் துறை விரிவுரை யாளர் மற்றும் விஞ்ஞானியாக விளங்கும் முனைவர் கலைச்செல்வி செந்தில் அவர்களும் தென்கொரிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான திட்டத்தில் ஆகஸ்டு 6-ம் தேதி கையெழுத்து இட சென்று இருந்தனர்.

தமிழகத்தை பொருத்தவரையில் நமது உணவு முறை மிகவும் பழமை வாய்ந்தது. அதுவும் நம் முன்னோர்கள் பல வகையான ஆராய்ச்சி செய்து சிறந்த உணவு முறையை நம்மிடம் விட்டுச் சென்றுள்ளனர். தற்போது நடந்துவரும் கலாச்சார மாற்றத்தினால் நமது உணவுப் பழக்கங்கள் பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. அவனாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தில் உணவு சம்மந்தமான பலவகையான ஆராய்ச்சி கள் கடந்த 30 வருடங்களாக மேற்கொண்டு வருகின்றனர். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தென்கொரிய பல்கலைக்கழகத்தின் உணவு மரபியல் விஞ்ஞான கழகம் இந்திய உணவு பழக்கங்களும் அதனால் மரபணுவில் ஏற்படும் நிரந்தர விளைவுகளும் பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவு செய்தனர்.

தற்போது அதிகமாக பரவிவரும் நோய் களாக கருதப்படும், புற்றுநோய், நீரிழிவுநோய் இவை இரண்டும் உணவு பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் பின்விளைவுகளே. மேலும் பெறுகி வரும் உடல் பருமன் சம்பந்தமான குறைபாடு களுக்கு உணவுபழக்கமே முக்கிய காரணம். இன்றும் உலகம் முழுதும் பல ஆராய்ச்சி யாளர்கள் பல கோடிக்கணக்கான டாலர்கள் செலவு செய்து புற்றுநோய், உடல்பருமன் மற்றும் நீரிழிவுநோய் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்திய உணவு முறைகளில் உள்ள நன்மைகளும், அதனால் நாம் புற்றுநோய், நீரிழிவுநோய் ஆகியவற்றை உயிரியல் தொழில் நுட்பம் மூலமாக அதை வராமல் தடுக்க என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி ஆய்வுகள், நமது பிற்கால சந்ததிகளுக்கு உண்மையில் பெரிதும் உதவும்.

அவனாசிலிங்கம் பல்கலைக்கழகம் தென்கொரியா உடன் கைசேர்த்து இந்த புதிய முயற்சியில் இறங்கி இருப்பது, இந்திய உணவு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பல்கலை கழகங் களுக்கு முன்உதாரணமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லைÐ

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2009

பன்றி காய்ச்சலுக்கு சிக்காமல் இருப்பது எப்படி?
உன்னை நீ நம்பு!
அச்சீவர்ஸ் அவென்யூ
அச்சீவர்ஸ் அவென்யூ
திறந்த உள்ளம்
இந்திய உயிரியல் தொழில்நுட்ப இளம் விஞ்ஞானிகளை கவர்ந்து இழுக்கும் தென்கொரியா
வசந்தமே வருக!
உடலினை உறுதி செய்
மனிதா! மனிதா!!
எது சந்தோஷம்?
பாலியல் விழிப்புணர்வு
கற்பனையான எதிர்மறையான எண்ணங்களை விட்டுத்தள்ளுங்கள்
சிரமங்கள் இல்லாமல்! சிகரங்கள் இல்லை!!
பார்வை
தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்