Home » Articles » வசந்தமே வருக!

 
வசந்தமே வருக!


admin
Author:

– டாக்டர் எஸ். ராஜா

‘வாழ்க்கை வாழ்வதற்கே’ ‘அரிதரிது மானிடராய் பிறப்பதரிது’ அவ்வாறு மானிடராய் பிறந்து மண்ணோடு மண்ணாகி மக்கிவிடுவதற்கு முன்னர் சாதனை படைக்கவும் சரித்திரம் படைத்தவராய் உயரவும் இளைய தலைமுறை கங்கணம் கட்டிக் கொண்டால் நம்நாடு வல்லரசாக வெகு விரைவில் ஆகிவிடும் என்பது உண்மை.

“வாழ்க்கை என்பது சிக்கல் – அவிழ்த்திடு
வாழ்க்கை என்பது புதிர் – தீர்த்திடு”

என்றொரு பழமொழியை நாம் சாதாரணமாகக் கேள்விப் பட்டிருக் கிறோம்.

வெல்வதற்கு வழிகள் ஆயிரமாயிரம் உள. அவற்றை முறையாக பின்பற்றி னால் வெற்றியாளர் பட்டியலில் முதலிடம் கிட்டும் என்பது உறுதி. வெற்றியும் தோல்வியும் வாழ்வில் மாறி மாறியே வரும். அதில் வெற்றி மட்டுமே கிடைக்கின்ற மனிதர்களைப் பார்ப்பது அரிது. தோல்வியைக் கண்டு துவளாது, துயர் அடையாது வெல்லத் துணிந்தவனையே மனிதர்களின் வரிசையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

“நம்பிக்கை இல்லாதவன் நடைப்பிணம்

தன்னம்பிக்கை இல்லாதவன் ஜடம்”

பிறப்பும் இறப்பும் இயற்கை. வெல்லும் வெறியுடன் இருப்பவனுக்கு சாதனைகளும் இயற்கையே!

வென்று காட்டுவதே வைராக்கியமாய் கொண்டவனுக்கு வெற்றி வெளிச்சமாய் தெரியும். வெற்றி கிடைக்க வேண்டுமெனில் முறையான திட்டமிடுதலும் நடைமுறைப் படுத்துதலும் அவசியம்.

வெற்றி பெறுபவன் ஒரு சிறு துரும்பை வைத்துக் கூட முன்னேறி விடுவான். வைரம் பாய்ந்த மனத்தோடு உழைத்தால் வெற்றி எனும் தேவதையை சுலபமாய் காதலித்து மணம் புரியலாம்.

விலாசம் பெறவேண்டுமெனில் விலா எலும்பெல்லாம் நோகும் வரை பாடுபட வேண்டும். ஊரே உறங்கும் போது உயிர்க்காற்றைச் சுவாதித்து உறங்காது படித்தவர் கள் பலர் பல்லோரால் போற்றப்படும் சாதனை யாளர்களாய் உயர்ந்துள்ளார்கள். சோர்ந்து, துவண்டு சோம்பேறிகளாய் இருப்பவர்கள் வெற்றிக்கனியினை நுகர்ந்து கூட பார்க்க இயலாது.

பள்ளி பருவத்திலேயே சாதிக்க வேண்டும் எனும் வித்து விதைக்கப்பட்டால் தான் அது ஆலமரமாய் வளர்ந்து அர்த்தமுள்ள வாழ்வினை வாழச் செய்து வெற்றித் திருமகனாக்கும்.

எதிர்மறை எண்ணங்கள்… வீணாண சாஸ்திர சம்பிரதாயங்கள் வெல்லத்துடிக்கும் தளபதிகளை வெத்து வேட்டுக்களாக்கிவிடும். மனதில் உறுதியோடு போராடும் கள வீரர்கள் தள நாயகர்களாய் மாறும் காலம் மிக நெருக்கமாய் தான் இருக்கும். அன்றாடங் காய்ச்சியாய் அடிப்படை வசதிகளே இல்லா தோர் அடித்தளமே இல்லாதோர் சரித்திர நாயகர் களாய் மாறி இருக்கிறார்கள் என்றால் அதற்கு மூலக்காரணம் அளப்பரியா உழைப்புதான் எனச் சொல்லலாம்.

சாதனை நாயகர்களின் சரித்திரங்களை எழுதினால் எழுதிக் கொண்டே போகலாம். அவற்றில் ஒன்றான மைக்கேல் ஃபாரடேவின் வரலாற்றை இப்போது அறிவோம். ‘டைனமோ’ என்னும் மின்விசை உற்பத்திக் கருவியை கண்டுபிடித்த மைக்கேல் ஃபாரடே எவ்வளவு உழைத்து சாதித்தார் என அறிவோம்?

மைக்கேல் ஃபாரடேவின் தந்தை ஒரு கொல்லராம். சிறு வயதில் ஃபாரடே புத்தக பைண்டிங் செய்யும் நிறுவனத்தில் உதவியாள ராகப் பணிபுரிந்தாராம். அப்போது பைண்டிங் செய்வதற்கு வரும் நூல்களில் விஞ்ஞான நூல்களைத் தேடிப்பிடித்து அவற்றைப் படித்து தமது விஞ்ஞான அறிவை வளர்த்துக் கொண்டாராம். ஃபாரடே. அப்போது எப்படி யாவது ஹம்ஃப்ரி டேவியின் உதவியாளராக சேர்ந்துவிட வேண்டுமென தீர்மானித்து ஒரு திட்டத்தைத் தீட்டினாராம். இதற்காக ஹம்ஃப்ரி டேவி சொற்பொழிவாற்றும் இடங்களுக்குச் சென்று அங்கு அவருடைய பேச்சை கவனத்துடன் கேட்டு குறிப்பு எடுத்து வருவார். அதற்கு பின்னர், அவரின் பேச்சை விரிவாக ஒரு நோட்டு புத்தகத்தில் அழகான கையெழுத்தில் எழுதி வந்தார். அந்த நோட்டுப் புத்தகத்தை நல்ல முறையில் பைண்டு செய்து அதை ஒரு நாள் ஹம்ஃப்ரி டேவிக்கு அனுப்பி வைத்தார். நம்முடைய சொற்பொழிவுகள் ஒரு பிழையும் இல்லாமல் மிகச் சிறப்பாக அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு வியப்படைந்த ஹம்ஃப்ரி டேவி ஒரு கடிதம் எழுதி மைக்கேல் ஃபாரடேவை வரவழைத்தார்.

ஃபாரடேவின் விஞ்ஞான ஆர்வத்தைக் கண்டு மகிழ்ந்து அவரைத் தம் உதவியாளராக ஹம்ஃப்ரி டேவி சேர்த்துக் கொண்டார். ஹம்ஃப்ரி டேவியின் கூட்டுறவினால் தலைசிறந்த விஞ்ஞானியாகி விட்ட மைக்கேல் ஃபாரடே தனது சொந்த முயற்சியினால் ‘டைனமோ’ என்னும் மின் உற்பத்தி சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்து மனித சமுதாயத்திற்கு உதவி, பெரும் புகழ் பெற்றார். இது அவருடைய முயற்சிக்கும் கடும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றியாம்.

இச்சரித்திரத்தை ஏன் சொல்கிறேன் என்றால் சுய முயற்சியால் சுயம்பாக மாறி சாதனை புரிந்த சாதாரண கூலி பைண்டிங் செய்யும் தொழிலாளி உயர்ந்ததைக் கண்டு நாமும் உயர வேண்டும் எனும் உத்வேகமும் உற்சாகமும் பெருக வேண்டும் என்பதற்காகவே.

வெற்றியை நோக்கி பயணிப்பவர்களின் வழித்தடத்தில் சந்திக்கும் தோல்விகள் சிறிது ஓய்வெடுக்கக் கிடைக்கும் சில்லறைத் தடங்கல் களே எனக்கருதி வீறுநடை போட வேண்டும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2009

பன்றி காய்ச்சலுக்கு சிக்காமல் இருப்பது எப்படி?
உன்னை நீ நம்பு!
அச்சீவர்ஸ் அவென்யூ
அச்சீவர்ஸ் அவென்யூ
திறந்த உள்ளம்
இந்திய உயிரியல் தொழில்நுட்ப இளம் விஞ்ஞானிகளை கவர்ந்து இழுக்கும் தென்கொரியா
வசந்தமே வருக!
உடலினை உறுதி செய்
மனிதா! மனிதா!!
எது சந்தோஷம்?
பாலியல் விழிப்புணர்வு
கற்பனையான எதிர்மறையான எண்ணங்களை விட்டுத்தள்ளுங்கள்
சிரமங்கள் இல்லாமல்! சிகரங்கள் இல்லை!!
பார்வை
தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்