Home » Articles » வளமான தேசத்தை உருவாக்க

 
வளமான தேசத்தை உருவாக்க


சிவகண்டன் ம
Author:

இளைஞனே எழுந்து நில்!
துவண்டது போதும்!
துன்பங்களில் புரண்டது போதும்!
இனி நீ எழுது உனக்கென ஒரு வேதம்!
சாதனை என்பது உன் இலக்கு!
இடை தடங்கல் அனைத்தையும்
நீ விலக்கு! உன் எதிர்காலத்திற்கு
நீயே ஒளி விளக்கு!

இகழ்ச்சி சொற்கள் வரும்போது
மனித இயல்புடன் அதனை நீ போக்கு!
கருணையை நெஞ்சில் வைத்திடு!
கடமை உணர்வை போற்றிடு!
ஊழலை யெல்லாம் கலைத்திட
உண்மையையே உறுதியாய் கொண்டிடு!
பொறுப்புகள் உன்னிடம் வரும்போது
புன்னகையோடு அதனை ஏற்றிடு!
வளமான தேசத்தை உருவாக்க
வைராக்கியத்துடன் நீ போராடு!

ம. சிவகண்டன், கடலூர் மாவட்டம்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment