Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

கிராமம், நகரம் இடையே உள்ள சமுதாய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கான இடைவெளியை குறைப்பது, அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர், தரமான கல்வி, போதுமான எரிபொருள் கிடைக்கச் செய்வது, விவசாயிகள், தொழில்துறை, சேவைத்துறையில் வேகமாக முன்னேற்றம் காண்பது, மக்களின் அடிப்படை வாழ்க்கை வசதிகளை பெருக்கத் தேவையான தொழில்நுட்பங்களை, விஞ்ஞானிகளை உருவாக்குவது,

ஊழலற்றநேர்மையான ஆட்சி அமைப்பை உருவாக்குவது, தொழில்முனைவோரை அதிக அளவில் உருவாக்கும் வசதி வாய்ப்புகள், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, வறுமை, கல்லாமை முழுமையாக ஒழிக்கப்பட்டு உலகிலேயே அமைதியாக வாழத் தகுந்த நாடாக நம் இந்தியாவை மாற்றுவது என ஒவ்வொருவரும் இலக்குகளை ஏற்படுத்திக்கொண்டு வாழ ஆரம்பித்து விட்டோம் என்றால் நாமிருக்கும் நாடு உலக அரங்கில் வளர்ந்த நாடாக நிமிர்ந்து நிற்கும் என்கிறார் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள்.

“ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெரியோர்கள், பெற்றோர்கள் என எல்லோரும் மனம் வைத்து தினமும் உண்மையாக தேசபக்தியுடன் உழைத்தோமேயானால் இனிவரும் நாளெல்லாம் நமக்கும், நாமிருக்கும் நாட்டிற்கும் திருநாளே!”

அன்புடன்,
ஆசிரியர் குழு

 

1 Comment

  1. S.M.PANNEERSELVAM says:

    dear selvaraj, gts.
    read the issue sep2009
    very good. congratulations to the team of editors. convey regards to all in the office
    spl regards to amma,kalaiselvi&dr. senthil
    with love panneerselvam

Post a Comment