Home » Articles » இசைந்து இசைந்து

 
இசைந்து இசைந்து


நாகராஜன்
Author:

துள்ளித் துள்ளி குதிக்கும் மனதை
அடக்கி வைக்க வேண்டும் – தினம்
“தூய நினைவை” சேர்த்துச் சேர்த்து
துயரம் போக்க வேண்டும்!
சொல்லிச் சொல்லி “பயிற்சி” செய்து
சோகம் போக்க வேண்டும் – மனிதர்
நல்ல நல்ல வழியை தெரிந்து
பயணம் போக வேண்டும்!
வாழ்க்கை நிலையை மேன்மைப்படுத்த
வகுக்கும்கொள்கை வேண்டும் – மனிதர்
குறிப்பை உணர்ந்து பொறுப்பை தெரிந்து
“சிறக்கும்” வாழ்க்கை வேண்டும்!
பகைமை என்னும் நிலையை மறந்து
நட்பை வளர்க்க வேண்டும் – மனிதர்
உலகை எல்லாம் உறவு கொள்ளும்
உண்மை “அன்பு” வேண்டும்!
“வறுமைப்” பிணியில் வாடும் உயிரின்
துயரம் போக்க வேண்டும் – மனிதர்
இருக்கும் பொருளில் “இசைந்து” கொஞ்சம்
இதயம் திறக்க வேண்டும்!
அறிவின் வழியில் நிறைவை அடைந்து
அமையும் வாழ்க்கை வெல்வோம் – மன
இருளைப் போக்கும் “தன்னம்பிக்கை”
ஒளியை ஏற்றிக் கொள்வோம்!

– கவிஞர் “நம்பிக்கை” நாகராஜன்
ஆர்.எஸ்.புரம், கோவை.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2009

இளைஞர்கள் இதயத்தில் எழுச்சி நிலா
உன்னதமாய் வாழ்வோம்! உயிர் இரக்கம் பெறுவோம்!!
வெற்றிப் புதையல்….
எழுந்து வா!……
அ…ஆ..
இசைந்து இசைந்து
நிறுவனர் நினைவுகள்
இன்று மகிழ்ச்சி நாள்
புல் கூட நமை வீழ்த்தும்
மாற்றத்தின் மறுஉருவம் வெற்றி
இளைய பாரதம்
நம்பிக்கை தான் வாழ்க்கை
காணாமல் போன கடிதக்கலை
பழக்கம் வெற்றியின் முழக்கம்
அச்சீவர்ஸ் அவென்யூ
இங்கு… இவர்… இப்படி…
ஆரோக்கியமான சில உணவு வகைகள்
திறந்த உள்ளம்
மனிதா! மனிதா!
பொக்கிஷங்கள்
குழந்தைத் தொழிலாளர் நிலை
உள்ளத்தோடு உள்ளம்