Home » Articles » ஆர்வம் அவசியம்

 
ஆர்வம் அவசியம்


மெர்வின்
Author:

ஆர்வம் இல்லாத மனிதன் இறக்கைகள் இல்லாத பறவைகளுக்கு ஒப்பானவன் என்று ஆங்கிலப் பழமொழி கூறுகிறது. பறவைகளுக்கு இறக்கைகள் இல்லாவிடில் உயரப் பறந்து பல இடங்களுக்கும் சென்று இரை தேட முடியாது.

இரை இல்லாவிட்டால் பறவை உயிரோடு இருக்காது. அதனால்தான் இரை தேடுவதற்குச் சாதகமாக பறவைகளுக்கு இறக்கைகள் அமைந்திருக்கின்றன.

இதேபோல நம்முடைய வாழ்விலும் வெற்றி பெற்று உயர்வடைவதற்கு ஆர்வம் என்ற உணர்ச்சி சாதகமாக இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதுதான் நம்மை செயல்புரியும் படியாகத் தூண்டும். ஆர்வம் மட்டும் நம்மிடம் இல்லாமல் நாம் உலகில் வாழ முடியும்.

சாதனம் இன்றி ஒன்றைச் சாதிப்பார் உலகில் இல்லை என்று கைவல்யம் கூறுகிறது.

நாம் எந்த காரியத்தை வெற்றி காண வேண்டும் என்றாலும் ஆர்வம் தான் அதற்கு முதலாவதாக தேவை.

நம் மனதில் ஒரு காரியத்தை நினைத்து அதனை அடைய வேண்டும் என்றஆர்வம் ஏற்பட்டதும் அதுவே ஆசையாக மாறி நம்மைச் செயல்படவும் வைக்கிறது.

இந்த உணர்ச்சிக்கு வலுவான சக்தி உண்டு. நம்மைச் செயலுக்கு உந்தித் தள்ளக்கூடிய வேகமும் உண்டு.

சக்தியும் வேகமும் பொருந்திய அந்த உணர்ச்சி நிலையை எவ்வளவுக்கு அதிகமாக நாம் பெருக்கிக் கொள்ளுகிறோமோ அந்த அளவுக்குத் திடமாகச் செயல்புரிய முடியும்.

அதுவும் அந்த உணர்ச்சி ஒரு குறிப்பிட்ட காரியத்தைப் பற்றியதாக மட்டும் இருந்து அதனுடன் தொடர்பு கொண்ட விருப்பம் நீடித்து நிலைத்து நின்றால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

பல காரியங்களிலும் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு பலப்பல விருப்பங்களில் மாறி மாறி மன ஊக்கத்தைச் செலுத்த முயன்றால் ஒன்று கூட மனதில் நிலைத்து நிற்காது.

இதன் காரணமாக எந்த விருப்பமும் அதிகமாக வளர்ந்து பெருகி உணர்ச்சியாக மாறாது.

நாம் பலவிதமான விருப்பங்களை மேற் கொண்டு தடுமாறக் கூடாது. குறிப்பாக, ஏதாவது ஒரு முக்கியமான பெரு விருப்பத்தை மட்டும் நமது நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

அதனை மனமாறவிரும்பி ஆசையை அதிகமாகப் பெருக்கி வளர்த்துப் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.

ஒரே சமயத்தில் பல பெரிய விருப்பங்களை ஏற்றுக் கொண்டு நம் மன ஆர்வத்தைப் பல வழிகளிலும் செலுத்தவும் கூடாது. அது பயனும் தராது.

ஒரு முக்கிய காரியத்தில் மட்டும் மனத்தை இடைவிடாமல் ஈடுபடுத்தி அதனை நோக்கமாக மாற்றிக் கொண்டு விருப்பத்தை அதிகமாக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட செயலில் விருப்பத்தை வளர்த்து வந்தால் உணர்ச்சியும் அதிகமாகி செயலாற்றும் தன்மையைப் பெருக்கும்.

பெருகி வளர்ந்த உணர்ச்சிக்குச் சக்தியும் வேகமும் தோன்றும். ஆர்வநிலை வலுப் பெற்றால் செயல்படும் பொழுது நாம் விரும்பிய காரியம் வெற்றியுடன் அமையும்.

செயல் தொடர்ந்து நடைபெறுவதற்கு ஆர்வம் உறுதுணையாக நின்று உதவும். ஆர்வத்தைப் பெருக்கி வருவதுதான் எல்லா காரியங்களின் வெற்றிக்கும் முதல் தேவையாக இருக்கும்.

ஆர்வம் நியாயமான அளவுக்கு உட்பட்டதாக இருப்பது முக்கியம். நம்முடைய தகுதிக்கும் சூழ்நிலைக்கும் ஓரளவு ஏற்றதாக இருக்க வேண்டும்.

நம்முடைய நோக்கத்தை நியாயமான அளவுக்குப் பெருக்கிப் பயன் பெறமுயற்சி செய்ய வேண்டும்.

ஆர்வத்தின் பெருக்கை வேறு வகைகளில் சிதறவிடாமல் பயன்படுத்தி காரியத்தின் எல்லைக்குள் மட்டுமே நிலைப்படுத்தி வைக்க வேண்டும்.

அப்பொழுது நாம் எண்ணிய காரியம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் தாமாக வந்து சேரும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி முழு மனதுடன் செயலில் ஈடுபட்டு வெற்றியைப் பெறமுடியும்.


Share
 

2 Comments

  1. Govind says:

    iththaan ‘power of consentration’ endru koorappadgindrathu… allava?

  2. Govind says:

    ithu thaan ‘power of consentration’ endru koorappadgindrathu… allava?

Post a Comment


 

 


December 2008

உடல் நலம்
மனிதா..! மனிதா..!
எண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களை சீராக்குவோம்
வாழ்க்கைக்கு மதிப்பு
உன்னதமாய் வாழ்வோம்! அடித்தளம் அமைப்போம்!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சர்வதேச நிதி நெருக்கடி ஏன்?
விருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்
உள்ளத்தோடு உள்ளம்
வாழ்ந்து காட்டலாம் வா நண்பா!
ஆர்வம் அவசியம்
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை
தாழ்வு மனப்பான்மையைத் தவிடுபொடியாக்குங்கள்
உங்கள் நிறுவனத்தில் கால அட்டவணை ஒரு வழக்கமாக ஏற்படுத்துங்கள்
வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம்
ஒரு பாதசாரியின் பயணக்குறிப்புகள்
திறந்த உள்ளம்
இளைஞா! எழு!
மனித மனங்களை வெல்லும் கலைகள்