Home » Articles » தாழ்வு மனப்பான்மையைத் தவிடுபொடியாக்குங்கள்

 
தாழ்வு மனப்பான்மையைத் தவிடுபொடியாக்குங்கள்


மர்மா
Author:

தன்னம்பிக்கையைத் தட்டியெழுப்பும் தங்கத்தொடர்
அக்டோபர் இதழ் தொடர்ச்சி…

டிசம்பர் 13, 1900-ல் தந்துகிக் கவர்ச்சியின் பண்புகளைப் பற்றிய ஐன்ஸ்டீனின் முதல் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியானது. ஊக்கம் பெற்ற ஐன்ஸ்டீன் விஞ்ஞானி வில்ஹெல்ம் ஆஸ்ட்வால்ட்டிடம் உதவியாள ராக வேலை கேட்டு கடிதம் எழுதினார். பதில் தான் வரவேயில்லை.

பிறகு டச்சு விஞ்ஞானியாக கேமர்லிங் ஒன்சிடம் வேலை கேட்டு ஒரு கடிதம் எழுதினார்.

வரலாற்றுப் புகழ்பெற்ற கடிதம் அது. இன்றைக்கும் அக்கடிதம் விஞ்ஞானத்தின் வரலாறு பற்றிய லெய்டன் மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஐன்ஸ்டீனுக்கும், டச்சுப் பல்கலைக்கழகத்துக்குமான முதல் தொடர்பு விஞ்ஞானத்துக்கான விதையை அப்பொழுது தான் நடத் துவங்கினார். மேக்ஸ்வெல்லின் மின்காந்தக் கொள்கைக்குள் அணுவியல் கருத்துக்களை லொரண்ட்ஸ் அற்புதமாகப் புகுத்த ஆரம்பித்திருந்த சமயம் அது.

சரியாக இருபது ஆண்டுகள் கழித்து அந்தப் பல்கலைக்கழகத்துக்கு கௌரவ விருந்தினர் பேராசிரியராக இருந்திட ஐன்ஸ்டீன் வலிய வலிய வேண்டிக் கொள்ளப்பட்டார். அந்தப் பல்கலைக்கழகத்தின் கம்பீரமான அரங்கில் ஐன்ஸ்டீன் தனது பொது சார்பியல் தத்துவத்தின் முதல் சொற்பொழிவுகளைத் தர வாய்ப்பும் அமைந்தது. ஆனால், ஐன்ஸ்டீனின் முதல் வேலை விண்ணப்பம் தான் பூஜ்யமாகிப் போனது. கேமர்லிங் ஒன்ஸ் பதில் கடிதம் கூட அனுப்பவில்லை. இத்தனைக்கும் “ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பிக்லி 21 (வழி), மிலேனோ” என்ற சுய விண்ணப்பமிட்ட அஞ்சல் தலைகள் ஒட்டப் பட்ட உறையை ஐன்ஸ்டீனே தன் கடிதத் துடன் அனுப்பியிருந்தார். அந்த பதிலையே எதிர்பார்த்திருந்த ஐன்ஸ்டீனுக்கு பதில் கடிதம் வராதது எத்தனை பெரிய ஏமாற்றத்தைத் தந்திருக்கும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ளத் தான் வேண்டும். ஆனால், பிற்பாடு அந்த சுயவிலாசமிட்ட அஞ்சல் தலை ஒட்டப்பட்ட உறையும் கூட அந்த மியூசியத்தின் பார்வைக் கூடத்தில் கம்பீர மாகப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப் பட்டது.

ஒரு வழியாக ஐன்ஸ்டீனுக்கு ஜீரிச்சில் ஒரு தொழில் நுட்பப்பள்ளியில் வேலை கிடைத்தது. வெறும் ஒரே ஒரு மாதத்துக்கு மட்டும். ஒரு மாதம் முடிந்ததம் சொற்ப சம்பளம் தந்து அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.

வேறு யாராவதாக இருந்தால் அச்சூழ் நிலையில் மனம் சோர்ந்து நொறுங்கிப் போயிருந்திருப்பார்கள். ஆனால், பிற்பாடு உலகையே கலக்கப் புறப்பட்ட விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் அவ்வளவு லேசுப்பட்டவரா என்ன? அவருடைய வாழ்க்கையில் இரண்டு நம்பிக்கைக்கதிர்கள் ஒளிவீசின. ஒன்று, தனது பி.எச்.டி. பட்டத்திற்காக வாயுக்களின் இயக்கக் கொள்கையைப் பற்றி ஓர் ஆய்வு செய்து ஜீரிச் பல்கலைக்கழகத்துக்கு சமர்ப்பித்தார். இரண் டாவது சுவிட்சர்லாந்து காப்புரிமை அலுவலகத் தில் வேலை கேட்டு ஒரு விண்ணப்பம் போட்டு வைத்தார். சில மாதங்கள் கழிந்து அவருக்கு அந்த அலுவலகத்திலிருந்து ஒரு இண்டர்வியூ கார்டு வந்தது. ஜுன் 16, 1902-ல் ஐன்ஸ்டீன் இரண் டாம் காப்புரிமை பொறியாளராக அவ்வலுகத் தில் நியமிக்கப்பட்டார். வருடத் துக்கு 3500 பிராங்க் ஊதியம் நிர்ணயிக்கப் பட்டது. ஐன்ஸ்டீன் போன்ற ஒரு மாமேதை ஒரு அரசு அலுவலகத்தில் சாதாரண வேலை செய்தார் என்பது மிக மிக அசாதாரணமான செய்தியாக இன்றைக்குத் தோன்றலாம். ஆனால், அப்போதைய சூழ்நிலையில் ஐன்ஸ்டீனுக்கு அந்த வேலையை கடலில் தத்தளிப்பவனுக்கு கற்றாழைக்கட்டை போலத் தோன்றியது.

பெர்ன் நகரத்தில் தனது பணியின் தன்மையைப் பற்றி தனது நண்பர் ஹேபிச்ட்டுக்கு ஐன்ஸ்டீன் எழுதிய கடிதத்தில் தனக்கு தினமும் எட்டு மணி நேரம் வேலையும், எட்டு மணி நேரம் சோம்பலும் பிறகு வாரம் ஒரு முழு ஞாயிற்றுக்கிழமையும் கிடைத்ததாகக் கூறுகிறார்.

நான்கு வகையான பிரச்சனைகளை ஐன்ஸ்டீன் சுவிஸ் பேட்டண்ட் அலுவலகத்தில் சந்திக்க வேண்டியிருந்தது. ஒன்று அவருடைய விஞ்ஞான, கணித அறிவுக்கு பொருத்தமில்லாத, சலிப்பூட்டும் வேலை, இரண்டு சம்பளப் பற்றாக் குறையால் ஏற்பட்ட வறுமை, மூன்று சகப் பணியாளர்களின் பொறாமை, நான்கு விஞ்ஞான ஆராய்ச்சிகளைப் பொறுத்த வரை மிகப் பெரிய தனிமை. ஒரு மனிதனுக்குத் தான் செய்யும் பணி சலிப்பைத் தருமானால், அதனால் ஏற்படும் மனச்சோர்வு ஒரு வகைக் கையாலாகாத் தனத்தையும், இயலாமையையும் உருவாக்கு வதோடு தாழ்வு மனப்பான்மை யையும் உருவாக்குகிறது. வறுமை ஏற்படுத்தும் பொருளாதாரத் தாழ்வு மனப்பான்மையும் நன்க்குத் தெரிந்ததே. நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நாம் அடையும் அற்ப முன்னேற்றத்தைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத பொறாமைக் காரர்களாக இருந்தால் நம் கதி தான் எப்படி இருக்கும்? இதுவும் ஒரு வித்தியாசமான உணர்வுத் தாழ்வு மனப்பான்மையையே உருவாக்கும்.

ஆடையே அணியாதவர்கள் வாழும் ஊரில் ஆடை அணிந்து செல்பவரை ஏளனம் செய்வர். கடைசியில் ஆடை அணிந்து செல்பவருக்கே ஒரு வகை காம்ப்ளக்ஸ் ஏற்பட்டுவிடும். அதைப் போன்றசூழல் தான் ஐன்ஸ்டீன் பணியாற்றிய சூழலும், ஐன்ஸ்டீனுக்கு ஏற்பட்ட மற்றொரு பிரச்சனை அவர் விஞ்ஞான உலகில் அனாதர வாக விடப்பட்டார். பல்கலைக் கழக விஞ்ஞானி களின் தொடர்போ, பரிசோதனைக் கூடங் களோ, விஞ்ஞானக் கோட்பாடுகளை விவாதிக்க அறிஞர் கூட்டமோ அவருக்குக் கிடைக்க வில்லை. இதனால் ஒரு வகை “சிண்ட்ரல்லா காம்ப்ளக்ஸ்” கூட ஐன்ஸ்டீனுக்கு ஏற்பட் டிருக்கக் கூடும்

ஆனாலும் ஐன்ஸ்டீன் ஜெயித்துக் காட்டினாரே.

எப்படி?
– தொடரும்….


Share
 

1 Comment

  1. mohan says:

    அருமை

Post a Comment


 

 


December 2008

உடல் நலம்
மனிதா..! மனிதா..!
எண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களை சீராக்குவோம்
வாழ்க்கைக்கு மதிப்பு
உன்னதமாய் வாழ்வோம்! அடித்தளம் அமைப்போம்!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சர்வதேச நிதி நெருக்கடி ஏன்?
விருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்
உள்ளத்தோடு உள்ளம்
வாழ்ந்து காட்டலாம் வா நண்பா!
ஆர்வம் அவசியம்
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை
தாழ்வு மனப்பான்மையைத் தவிடுபொடியாக்குங்கள்
உங்கள் நிறுவனத்தில் கால அட்டவணை ஒரு வழக்கமாக ஏற்படுத்துங்கள்
வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம்
ஒரு பாதசாரியின் பயணக்குறிப்புகள்
திறந்த உள்ளம்
இளைஞா! எழு!
மனித மனங்களை வெல்லும் கலைகள்