Home » Articles » வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம்

 
வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம்


தங்கவேலு மாரிமுத்து
Author:

அதான் தெரியுமே என்று அவசரக் கமெண்ட் அடிக்காம மேல படியுங்க சார்.

ஓட்டப் பந்தயங்களில் பல வகை உண்டு.

1) 100 மீட்டர், 200 மீட்டர் போன்ற குறுகிய தூர பந்தயம்
இதில் வெற்றி பெற என்ன வேண்டும்?

  • ஸ்டார்ட் – என்று சொல்லி முடிப்பதற் குள்ளாகவே முதல் அடியை எடுத்து வைக்கும் ஆரம்ப வேகம் (Quick start)
  • “இதோ ஸ்டார்ட் சொல்லப் போகிறார்கள்; இதோ ஸ்டார்ட் சொல்லப் போகிறார்கள்” என்று மிக மிகக் கவனமாகக் காத்திருக்கும் ஆயத்த நிலை. (Readiness)
  • மின்னலுக்கு ஈடான வேகம். (Lighting speed)
  • – நினைவிருக்கட்டும்; பி.டி. உஷாவின் நான்கு வருடக் காலக் கடும்பயிற்சி கூட பலனளிக்காமல் போனது வெறும் 0.01 விநாடியால் தான்.

    2) மராத்தன் ரேஸ் – நெடுந்தூர பந்தயம்

    இதில் வெற்றி பெற என்ன வேண்டும்?

  • அலுக்காமல் சளைக்காமல் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கவேண்டும். அதற்குத் தேவை அசதி தட்டாமல் தாக்குப் பிடிக்கும் உடல் சக்தி (Stamina).
  • கடைசி நிமிடங்களில், அதிகபட்ச வேகமெடுத்து ஓடக் கூடிய உடல் வலிமை (Strength).
  • 3) தடை ஓட்டம் – Hurdle race

    இதில் வெற்றி பெற என்ன வேண்டும்?

  • ஓடும் பாதையில் எத்தனை தடைகள் வைக்கப்பட்டிருந்தாலும், தயங்காமல் தாண்டி ஓடும் மன உறுதியும் வல்லமையும் லாவகமும்
  • 4) தொடர் ஓட்டம் – Relay race

    இதில் வெற்றி பெற என்ன வேண்டும்?

  • தோல்வி வந்தாலும், அது தன்னால் இருக்கக் கூடாது என்றநினைவுடன் (பொறுப்புடன்) முடிந்த அளவுக்குக் காட்டும் வேகம்.
  • மற்ற மூன்று பேர்களில் ஒருவனின் வேகம் குறைவாக இருந்தாலும் அதனால் தோல்வி வந்து விடக்கூடாதே என்றஎண்ணத்துடன் (கூடுதல் பொறுப்புடன்) காட்ட வேண்டிய கூடுதல் வேகம்.
  • குச்சியைக் கொடுக்கும் போதும் வாங்கும் போதும் காட்ட வேண்டிய முழுக்கவனம்; வேகம்.

இவைகளில், எப்படிப்பட்ட பந்தயமாக இருந்தாலும் அடிப்படையாக, ஜெயிக்க முடியும் என்றதன்னம்பிக்கை, ஜெயிக்க வேண்டும் என்றதுடிப்பு, அதற்குத் தேவையான கடும்பயிற்சி… ஆகியவைகளும் வேண்டும்.

இது மட்டுமா?

எதிர்பாராத விதமாகத் தோற்றுவிட்டாலும், அடுத்த முறைஎப்படியும் ஜெயித்து விட வேண்டும் என்றதணியாத வெற்றித் தாகமும், ஜெயிப்பதற்கான துல்லிய திட்டங்களைத் தீட்டும் சிந்தனைத் திறனும் வேண்டும்.

இத்தனை வேண்டும்களும், வாழ்க்கை என்னும் ஓட்டப் பந்தயத்திற்கும் வேண்டும். எப்படி?

  • குறுகிய கால லட்சியங்களில், சிறிதளவு கூட நேரத்தை வீணாக்காத தீவிரமான, வேக உழைப்பு வேண்டும்.
  • நீண்டகால லட்சியங்களில், வேகமும் வேண்டும்; லட்சியத்தை அடையும் வரை, அலுப்பும், பயமும், கவலையும் அடை யாமல், சிரமங்கள் எதுவாயினும் சகித்துக் கொண்டு, தொடர்ந்து கடமைகளை ஆற்றும் பொறுமையும் வேண்டும்.
  • இடையூறுகளும் பிரச்னைகளும் புதிது புதிதாக முளைத்துக் கொண்டே யிருந்தாலும், அஞ்சாமல் அயராமல் அவைகளைத் தாண்டி முன் செல்லும் விடாமுயற்சியும் வேண்டும்.
  • முக்கியமாக, என்னால் முடிந்த அளவுக்கு உழைத்து உழைத்து, ஏதோ இந்த அளவுக்கு வாழ்க்கையில் முன்னேறி விட்டேன்; நீங்களும் என்னைப் போலவே அக்கறையுடன் உழைத்து, இன்னும் பெரிய நிலையை அடைய வேண்டும்”, என்று பொறுப்பை அடுத்த வாரிசுகளிடம் கொடுக்கவும் வேண்டும். அவர்கள் நம்மை விட வேகமாக, கவனமாக முன்னேறவழி காட்டவும் வேண்டும்.
  • இப்படியெல்லாம் வெற்றி பெறும் போதுதானே வாழ்க்கையில் வளம் இருக்கும்; அர்த்தமும் இருக்கும்.

எங்கே, இனியாவது, கவனமாக, லட்சியம் நோக்கி ஓடலாமா? ரெடி. 1, 2, 3 …….

அச்சீவர்ஸ் அவென்யூ

  • மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருமே எதிலும் வெற்றி பெறவேண்டும்; எதையாவது சாதிக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். விரும்ப வேண்டும் – அதுதான் முன்னேற்றம்.
  • அதற்கு முதல் தேவை, தன்னால் சாதிக்க முடியும் என்று மனப்பூர்வமாக, முழுமையாக தன்னை நம்பும் தன்னம்பிக்கை தான்.
  • அந்தத் தன்னம்பிக்கை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால், அவ்வப்போது குறையலாம். அந்த நேரங்களில் நமது தன்னம்பிக்கை சற்றும் தாழாமல் பார்த்துக் கொள்வது எப்படி?
  • ஏற்கனவே சாதித்துக் காட்டிய பல சாதனையாளர்கள் சென்றபாதையை, அந்தப் பாதையில் அவர்கள் சந்தித்த சவால்களை, கடந்து சென்றகாட்டாறுகளை, தகர்த்து எறிந்த தடைகளை, சகித்து மீண்ட சோகங்களைப் பற்றித் தெரிந்து கொண்டாலே போதும்.
  • அவைகளைத் தெரிந்து கொள்ளத் தெரிந்து கொள்ள, நமது மனங்கள் விரிந்து கொள்ளும். விரிந்த மனம் எந்த வேதனைக்கும் சுருங்காது, சுருளாது. விரிந்த மனதில் தான் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறந்து கொண்டே இருக்கும்.
  • சாதனைச் சாலையிலே, நமது பயணத்தை எளிதாக்கக்கூடிய, விரைவாக்கக்கூடிய, அந்த் தன்னம்பிக்கைத் தகவல்களை, “அச்சீவர்ஸ் அவென்யூ” என்றதலைப்பில், வரும் 2009 ஜனவரி மாதம் முதல், தன்னம்பிக்கை இதழில் தொடர்ந்து வழங்க இருக்கிறார், சுயமுன்னேற்றஊக்குவிப்பாளர்

திரு. தங்கவேலு மாரிமுத்து.
படிக்கத் தவறாதீர்கள், வெற்றிகளைப் பிடிக்கத் தவறாதீர்கள்.
– ஆசிரியர்


Share

Tags:

 

1 Comment

  1. siroj says:

    good work. thangawealu maarimuththu is best

Post a Comment


 

 


December 2008

உடல் நலம்
மனிதா..! மனிதா..!
எண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களை சீராக்குவோம்
வாழ்க்கைக்கு மதிப்பு
உன்னதமாய் வாழ்வோம்! அடித்தளம் அமைப்போம்!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சர்வதேச நிதி நெருக்கடி ஏன்?
விருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்
உள்ளத்தோடு உள்ளம்
வாழ்ந்து காட்டலாம் வா நண்பா!
ஆர்வம் அவசியம்
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை
தாழ்வு மனப்பான்மையைத் தவிடுபொடியாக்குங்கள்
உங்கள் நிறுவனத்தில் கால அட்டவணை ஒரு வழக்கமாக ஏற்படுத்துங்கள்
வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம்
ஒரு பாதசாரியின் பயணக்குறிப்புகள்
திறந்த உள்ளம்
இளைஞா! எழு!
மனித மனங்களை வெல்லும் கலைகள்