Home » Articles » உடல் நலம்

 
உடல் நலம்


சைலேந்திர பாபு செ
Author:

உலகிலுள்ள அனைத்து ஆசீர்வாதங்களிலும்
முதன்மையானது உடல் நலம்
– லார்ட் செஸ்டர் பீல்டு

நம்நாட்டில் நல்ல கலாச்சாரம் ஒன்றுண்டு. தெரிந்த ஒருவரை நாம் சந்திக்கும்பொழுது சுகமாக இருக்கிறீர்களா? மனைவி, மக்கள் நலமாக இருக்கிறார்களா? அப்பா எப்படி இருக்கிறார்? அம்மா பரவாயில்லையா? என்று கேட்கிறோம். இதற்கு பெயர் “நலம் விசாரிப்பது” என்பதுதான். ஆனால், யாருமே உங்களது சொத்துகள் எப்படியுள்ளது என்று முதல் கேள்வியாக கேட்பதில்லை. இதிலிருந்து உடல்நலம்தான் முதன்மையானது என்பது தெரிகிறது அல்லவா?

உடல் பருமனுடன் இருப்பவர்கள் உடல்நலம் உள்ளவர்களா? உடலில் நல்ல வலிமை உள்ளவர்கள் உடல் நலம் உள்ளவர்களா? நோய்கள் இல்லாதவர்கள் உடல்நலம் உள்ளவர்களா?

நல்ல உடல் நலம் உள்ளவர்கள் யார்?

பெரிய உடல் தோற்றத்துடன் பருமனாக உள்ளவர்கள் ஆரோக்கியமானவர்கள் என்று பலர் கருதுகிறார்கள். என்னைப் பார்த்து பலர் நீங்கள் மிகவும் மெலிந்து உள்ளீர்களே

உடல் நலம் இல்லையா? என்றகேட்கிறார்கள். ஏன் என் தாயார் கூட அப்படித்தான் கேட்கிறார்கள். சிலர் நல்ல உடல்வலிமை உள்ளவர்களை உடல்நலம் உள்ளவர்கள்
என்று நினைக்கிறார்கள். எந்த பெரிய நோயும் காணாத பலரும் தாங்கள் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவே நம்பிவிடுகின்றனர்.

உடல் பருமனாக இருப்பதாலோ, உடல் உறுதியாக இருக்கிறது என்பதாலோ, இதுவரை பெரிய நோய் ஏதும் வந்துவிடவில்லை என்பதாலோ ஒருவர் உடல்நலம் உள்ளவர் என்று சொல்லிவிட முடியாது. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு அதிக இரத்த அழுத்தமும் சர்க்கரை வியாதியும் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். உடல் பருமனே ஒரு நோய்தான். இதுகூட விரும்பத் தக்க நிலையல்ல என்று மருத்துவர்கள் அறுதியிட்டுக் கூறுகின்றனர். உடல் உறுதி உள்ளவர்களுக்கு உடலில்டி பல நோய்கள் இருக்கக்கூடும். அது அவருக்குத் தெரியாமல் கூட இருக்கலாம். திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி வரலாம். எனவே உருவத்தை வைத்து உடல்நலத்தை உறுதிசெய்ய முடியாது.

சரி. நோயில்லாத மனிதனை உடல்நலம் உள்ளவர் என்று சொல்லலாமா? முடியாது. ஏனென்றால் நோய்கள் என்பைத நாம் அதற்கான அறிகுறிகளை வைத்துத்தான் சொல்கிறோம். அறிகுறிகள் வெளியில் தெரியாத பல நோய்கள் உடலில் இருக்கலாம். நமது உடல் அங்கங்களிலும், அவற்றின் செயல்களிலும் குறைபாடுகள் இருந்தாலும் நமக்குத் தெரியாமலே போய்விட வாய்ப்பிருக்கிறது. ஆக, ஒருவருக்கு நோய் இல்லை என்பது வரவேற்கத்தக்கது என்றாலும் கூட அதை வைத்து ஒருவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார் என்று சொல்லமுடியாது.

வாகன விபத்தில் சிக்கி ஒருவருக்கு மூளையில் அடிபட்டிருக்கிறது. இவருக்கு நோய் (disease) இல்லை. ஆனால் இவர் நல்ல உடல் நலம் உள்ளவரா? இல்லையே. இவரது உடலின் ஓர் அங்கம் வேலை செய்வதில் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. நோய் இல்லை என்றாலும் இவர் உடல்நலம் உள்ளவர் அல்லர். ஒருவருக்கு இரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்புச்சத்து இருக்கிறது. இவருக்கு இதுவரையில் இதய நோய் வரவில்லை என்றாலும் இவரை நாம் உடல் நலம் உள்ளவர் என்று சொல்ல முடியாது. அப்படியென்றால் உடல்நலம் என்பது யாது?

உலக நல நிறுவனத்தின் வரையறை

“நலம் என்னும் சொல் வெறும் நோயின்மையை மட்டும் குறிப்பதில்லை. உடலளவிலும், மனதளவிலும், சமூக அளவிலும் நோய் அல்லது குறைகள் இல்லாத நிலை என்பதையே இச்சொல் குறிக்கிறது”. இது உலக நல நிறுவனம் (World Health Organisation) தரும் வரையறை. ஒரு மனிதருக்கு நோய் மற்றும் குறைகளற்ற உடல்நலம், மனநிலை, சமூகநலம் இருத்தல் வேண்டும். அப்போதுதான் அவர் நலத்துடன் இருக்கிறார் என்று சொல்ல முடியும்.

உடற்பயிற்சி செய்யாத ஒரு நபருக்கு உடலில் வலிமை (Strength) தாங்கும் சக்தி (Stamina) மற்றும் வளையும் தன்மை (Flexibility) இருக்காது. இவருக்கு நோய் இல்லை என்பதற்காக இவரை உடல் நலம் உள்ளவர் என்று சொல்லிவிட முடியாது. நடக்கும் போது தடுமாறி விழுந்தால் கூட இவரால் சுதாகரித்து நிற்க முடியாது. இவர் நோய் இல்லாதவர் என்றாலும் குறைகள் உள்ளவராகவே இருப்பதால், இவர் நல்ல உடல் நலம் உள்ளவர் அல்லர். சிலருக்கு நல்ல உடல் இருக்கும். ஆனால் மற்றவர்களோடு கூடி வாழும் பண்பு இருக்காது. சிலர் குடிபோதைக்கு அடிமையாகி மற்றவர்களுக்கு இடையூறாகவே இருப்பார்கள். இப்படியாக உடலளவிலும், மனதளவிலும், சமூக அளவிலும் நோயும், குறைகளும் இல்லாத நிலையே நலம் என்கிறோம்.

எல்லா அவயங்களும் எல்லா நேரங்களிலும் நூறு சதவீதம் இயங்கும் முழுமையான நிலைதான் “நலம்” என்கிறது வெப்ஸ்டர் அகராதி (Webster’s Dictionary).

மனித உடல் பற்றிய அறிவியல்

மனிதனின் உடற்செயலை செய்வதற்குத் தனித்தனி உறுப்புகள் உள்ளன. பல உறுப்புகள் ஒன்று சேர்ந்து ஒரே உடற்செயலை செய்யும் போது, அது ஓர் உறுப்பு மண்டலமாகிறது.

உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும், உறுப்பு மண்டலங்களும் சீராக இயங்கும் நிலையினைத்தான் உடல்நலம் என்கிறோம். சீராக இயங்க வேண்டிய உறுப்பு மண்டலங்கள் :

1. எலும்பு மண்டலம் (Skeletal System)

2. தசை மண்டலம் (Muscular System)

3. ஜீரண மண்டலம் (Digestive System)

4. சுவாச மண்டலம் (Respiratory System)

5. இரத்த ஓட்ட மண்டலம் (Circulatory System)

6. கழிவு மண்டலம் (Excretory System)

7. நரம்பு மண்டலம் (Nervous System)

8. நாளமில்லா சுரப்பிகள் (Endocrine System)

9. இனப்பெருக்க மண்டலம்

(Reproductive System)

10. கண் மற்றும் காது மண்டலம்

(Optic and Auditory System)

இந்த அங்கங்கள் சீராக உள்ளதா என்பதை உறுதி செய்ய மருத்துவர்கள் பல பரிசோதனைகளைச் செய்து பார்க்கிறார்கள். அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.

1. இதயத் துடிப்பு (Heart Beat)

இதயம் என்பது ஒரு வாகனத்தின் எஞ்சின் போன்றது. மனித இதயம் 24 மணி நேரத்தில் ஒரு இலட்சம் முறைத் துடிக்கிறது. இதயத் துடிப்பு ஒரு நிமிடத்தில் ஆண்களுக்கு 72 என்றும் பெண்களுக்கு 80 என்றும் இருக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு இதயத்துடிப்பு குறைவாகக் கூட இருக்கும். சிலருக்கு 60க்கு கீழாக இருந்தாலும் அது சாதாரண நிலைப்பாடு (Normal State) தான். உடலிலுள்ள தசைகளுக்கும், செல்களுக்கும் ஆக்சிஜன் வழங்குவது இதயத்தின் முக்கிய பணியாகும். நாம் சாதாரண நிலையில் (Resting state) இருக்கும் போது 70 முதல் 80 முறைவரைத் துடிக்கும் இதயம், உடற்பயிற்சி செய்யும் போது, தசைகளுக்கு அதிக ஆக்சிஜன் வழங்க வேகமாகத் துடிக்கிறது. ஒரு மனிதனுடைய இதயம் ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு வேகமாக துடிக்க முடியும் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு சூத்திரம் (Formula) உண்டு.

220 – வயது ” அதிகபட்ச இதயத்துடிப்பு

எடுத்துக்காட்டாக ஒருவரது வயது 40 என்று வைத்துக் கொண்டால், அவரது அதிகபட்ச இருதயத் துடிப்பு, 220-40 ” 180 ஆகும். இந்த நபரின் இதயம் ஒரு நிமிடத்திற்கு அதிகபட்சமாக 180 முறைத் துடிகும். அதிக வேகமாக ஓடும்போதோ இல்லையென்றால் பெரிய ஆபத்து ஏற்படும் போதோ அதிகபட்சத் துடிப்பை இதயம் எட்டுகிறது.

இதயத்துடிப்பை நாமாகவே எளிதில் அளந்துவிடலாம். கையில் மணிக்கட்டில் ஓடும் இரத்தக்குழாயில் உங்கள் மற்றொரு கையின் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் வைத்துப் பாருங்கள். இரத்தக்குழாயினுள் இரத்தம் அலை அலையாகச் செல்வதை உணர முடியும். இதைத்தான் துடிப்பு (pulse) என்கிறோம். இந்தத் துடிப்பை ஒரு நிமிடம் எண்ணுங்கள். அதுதான் உங்கள் இதயத்துடிப்பு (Heart Beat).

உடற்பயிற்சியின் போது கூட இதயத் துடிப்பை எளிதில் அளவிட முடியும். ஆறு வினாடிகளில் எத்தனை துடிப்புகள் என்று பாருங்கள். அந்த எண்ணைப் பத்தால் பெருக்கினால் உடற்பயிற்சியின் போது உங்கள் இதயத்துடிப்பு தெரிந்துவிடும்.

உடற்பயிற்சியின் போது, இதயத்துடிப்பு, நமது அதிகபட்ச இதயத்துடிப்பில் 80 சதவீதத்துக்கு மேல் போகாதவாறு உடற்பயிற்சி யின் தீவிரத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

40 வயது நபர் உடற்பயிற்சி செய்யும் போது எட்ட வேண்டிய அதிக பட்ச இதயத்துடிப்பை கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்.

ப் அதிக பட்ச இதயத்துடிப்பு 220 – 40 ” 180

ப் உடற்பயிற்சியின் போது எட்ட வேண்டிய அதிக பட்ச இதயத்துடிப்பு ” 180 ஷ் 80/100 “144 100

இவர் உடற்பயிற்சி செய்யும் போது இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 144 ஆக இருந்தால் தனது உடற்பயிற்சியின் வேகத்தைக் குறைக்க வேண்டும். ஓடுவதாக இருந்தால் அதைவிட வேகமாக ஓடக்கூடாது. அதே வேளையில் உடல்நலம் மேம்பட விரும்பும் நபர்கள் உடற்பயிற்சி செய்யும் போது, அதிகபட்ச இருதயத் துடிப்பில் 60 சதவீதத்துக்குக் குறையாமல் இதயம் துடிக்கிற அளவில் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் வேண்டும். அதாவது 40 வயது நபர் நிமிடத்திற்கு 180 இதயத் துடிப்புகளுக்குக் குறையாமல் இருக்கும் உடற்பயிற்சியைச் செய்ய வேண்டும்.

2. இரத்த அழுத்தம் (Blood Pressure)

ஒரு மனிதனின் இரத்த அழுத்தம் 120/80 என்றஅளவில் இருக்க வேண்டும்.

இரத்தக் குழாய்களுக்குள் ஓடிக் கொண்டிருக் கும் ஒரு திரவம்தான் இரத்தம். எனவே இது இரத்தக் குழாயின் மீது ஒரு அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். இதயம் இரத்தத்தைப் பீய்ச்சும் போது அழுத்தம் அதிக மாகவும், இரண்டு பீய்ச்சுகளுக்கு (Pumping) இடையே இரத்த அழுத்தம் குறைவாகவும் இருக்கும்.

பாதரசம் (Mercury) என்றதனிமம் ஒரு குழாயில் எவ்வளவு தூரம் ஏறுகிறது என்ற அளவை வைத்து இரத்த அழுத்தத்தை அளக்கிறார்கள். இதயம் சுருங்கும் போது வெளியேற்றப்படும் இரத்தம் இரத்தக்குழாய் களுக்குள் பீய்ச்சப்படுகிறது. இதனால் ஏற்படும் அழுத்தம் காரணமாக இரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன. இதற்கு Systolic Blood Pressure என்று பெயர். இரண்டு பீய்ச்சுகளுக்கு இடையே இந்த அழுத்தம் குறைவாக இருக்கிறது. இதற்கு Diastolic Blood Pressure என்று பெயர். இரத்த அழுத்தம் 120/80 என்று பதிவு செய்யப்படுகிற போது, 120 என்பது அதிகபட்ச அழுத்தத்தையும் (Systolic), 80 என்பது குறைந்தபட்ச அழுத்தத்தை யும் (Diastolic) குறிக்கும். இருதயத்தைப் பொருத்த வரை நஹ்ள்ற்ர்ப்ண்ஸ்ரீ என்பது இதயம் சுருங்குவதையும், ஈண்ஹள்ற்ர்ப்ண்ஸ்ரீ என்பது இதயம் விரிவதையும் காட்டும். இதில் Diastolic அல்லது Systolic எண் இயல்பான அளவை (Normal Range) விட்டு மாறுபட்டு இருந்தால், அதாவது அதிகமாக இருந்தால் Hypertension என்றும் குறைவாக இருந்தால் அதை ஏஹ்ல்ங்ழ்ற்ங்ய்ள்ண்ர்ய் என்றும் கூறுகிறோம். 120/80 என்பது இயல்பான இரத்த அழுத்தம் என்றாலும், இது ஆளுக்கு ஆள் மாறு படுவதால், ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெற்று உங்களின் இரத்த அழுத்தம் சீராக உள்ளதா என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு, இரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கும். கொழுப்பு இரத்தக்குழாயில் படிந்து விடுவதால் இரத்தக்குழாயின் பாதை குறுகலாகிவிடுகிறது. இதனால் இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இரத்த ஓட்டம் தொடர்ந்து நடைபெற, இதயம் அதிகளவு வலுவுடன் (Force) துடித்து இரத்தத்தைப் பீய்ச்ச வேண்டியுள்ளது. இதனால் இரத்தத்தின் உயர்ந்தபட்ச அழுத்தம் 120ஐ விட மேலே போகிறது. இந்த நிலை கண்டதும், இரத்த ஓட்டம் எங்கேயோ தடைபடுகிறது என்பதும் தெரிந்துவிடுகிறது. அந்த அடைப்பு இதயத்திற்கு இரத்தத்தை விநியோகிக்கும் இதயத் தமனியில் (Coronary Artery) இருந்தால், இதயத்தின் ஒரு பகுதிக்கு இரத்தம் சென்றடையாமல், இதயத் தசைகள் செயலிழக்கின்றன. பாதிக்கப்பட்ட இதயம் தனது பணியைச் செய்ய முடியாமல் போகிறது. இதனைத் தான் இஅஈ (Coronary Artery Disease) என்கிறோம். இதுவே முற்றிப்போய் இதயம் செயலிழந்து விட்டால் மாரடைப்பு (Heart Attack) ஏற்படுகிறது.

மாரடைப்பின் அறிகுறிகளாவன
– அடுத்த இதழில்


Share
 

5 Comments

  1. sureshkumar says:

    The Great
    முனைவர் செ. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.

    He is My Inspiration of IAS.
    Now im Preparing IAS.
    Thanks Sir.

  2. M.J. SYEDABDULRAHMAN says:

    நம் நாட்டில் மட்டும் இல்ல எல்லா நாட்டிலும் முதற்கண் ஹொவ் ஆர் யு
    சொத்து பாத்து இருந்த தானே நலம் விஷரிக்ரங்க இல்லன பார்தாலும் பாக்கமபோரங்க சார்,
    நம்ம காரியம் ஆவனும் அதுக்காக கேக்குற விசியம் அது

    எதோ – சிறப்பு

  3. M.J. SYED ABDULRAHMAN says:

    எல்லாம் சரிதான்
    இதயமும், கார் மொடொறும்
    தொடரும்

  4. agatheeskumar says:

    plz tell me

Post a Comment


 

 


December 2008

உடல் நலம்
மனிதா..! மனிதா..!
எண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களை சீராக்குவோம்
வாழ்க்கைக்கு மதிப்பு
உன்னதமாய் வாழ்வோம்! அடித்தளம் அமைப்போம்!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சர்வதேச நிதி நெருக்கடி ஏன்?
விருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்
உள்ளத்தோடு உள்ளம்
வாழ்ந்து காட்டலாம் வா நண்பா!
ஆர்வம் அவசியம்
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை
தாழ்வு மனப்பான்மையைத் தவிடுபொடியாக்குங்கள்
உங்கள் நிறுவனத்தில் கால அட்டவணை ஒரு வழக்கமாக ஏற்படுத்துங்கள்
வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம்
ஒரு பாதசாரியின் பயணக்குறிப்புகள்
திறந்த உள்ளம்
இளைஞா! எழு!
மனித மனங்களை வெல்லும் கலைகள்