Home » Articles » வாழ்க்கைக்கு மதிப்பு

 
வாழ்க்கைக்கு மதிப்பு


கருப்பையா ஆ
Author:

சென்ற இதழ் தொடர்ச்சி

தனிக்குடித்தனங்கள் அதிகம் பெருகிவரும் இக்கால கட்டத்தில் கூட்டு குடும்பமாக இருக்கிறீர்கள் என்று கேட்பதே பெரிய சந்தோசத்தை தருகிறது. கூட்டுக் குடும்பம் எப்படி உங்களுக்கு சாத்தியமாகிறது? அதன் சிறப்புகள் பற்றி கூறுங்களேன்.

அப்பாவுடன் நாங்கள் வாழ்ந்த காலம் ஐந்து, ஆறு ஆண்டுகள் தான். ஆனால் அம்மாவுடன் வாழ்ந்த ஆண்டுகள் முப்பது. எங்கள் தாயார் எல்லா விதத்திலும் எங்களை அற்புதமாக தயார்படுத்தினார். சின்ன சின்ன விசயங்களில் கூட எங்கள் கவனத்தை நன்கு பதிய வைத்து எங்களை சாதிப்பிற்குரியவர்களாக உருவாக்கினார். எங்களுக்கு திருமணம் ஆனவுடன் தனிக்குடித்தனத்திற்கு ஏற்பாடு செய்யாமல் எங்களோடு இருந்து விருப்பு வெறுப்புகளை புரிய வைத்தார். விட்டுக் கொடுத்து போவதால் உண்டாகும் நன்மைகளை அனுபவத்தின் வாயிலாக உணர வைத்தார்கள். உயர்வு தாழ்வு குடும்பத்திற்குள் எழுவதால் என்னென்ன சிக்கல்கள் எழும் அதனால் உருவாகும் பாதிப்புகள் யாரைத் தாக்கும் என வாழச் சொல்லி வழிகாட்டினார். அதனால் எங்கள் இருவரின் துணைவியாரும் நன்கு உணர்ந்து ஒருவரை ஒருவர் புரிந்து செயல்பட ஆரம்பித்தார்கள். 30 ஆண்டுகால இல்லறம் இணைந்தே இனிக்கிறது. கூட்டுக் குடும்பத்தின் சிறப்பைக் கூட்டுக் குடும்பமாய் வாழும்போதுதான் உணர முடியும்.

குழந்தைகளின் கவனிப்பிலிருந்து செய்யும் தொழில் வரை எந்த இடர்ப்பாடுகளையும் சந்திக்காமல் அடுத்தவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் நமக்குள்ளேயே எல்லாவற்றையும் நன்கு கவனித்துக் கொள்ள முடியும். ஒரு திருப்தி இருக்கும். எப்போதும் வீடு கலகலவென்று மகிழ்ச்சியாக இருக்கும். நம்மைச் சுற்றி எப்போதும் நாலுபேர் இருக்கிறசந்தோசம் தனிமையில் கிடைப்பதில்லை.

ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாதல், விட்டுக் கொடுத்தல் இல்லாதிருத்தல், எண்ண வித்தியாசங்கள் இவைகள் தான் தனி குடித்தனத்திற்கு காரணமாகிறது.

எதிர்வரும் காலங்களில் பார்மஸித் துறையில் வேலை வாய்ப்பு என்பது எந்தளவு இருக்கும்?

மேலை நாடுகளில் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு “எக்ஸ்பிளைன்” செய்வதற்கான நேரம் மருத்துவர்களுக்கு இல்லை. அதைக் கொடுப்பது ஒரு “பார்மிஸ்ட்” தான். இம்முறைஇப்போது நமது இந்தியாவில் வர ஆரம்பித்திருக்கிறது. மருத்துவர்களின் நேரம் காலம் கருதி இம்முறைபார்மிஸ்ட்களுக்கு முழுமையாக வரும் போது வேலைவாய்ப்பு நம்நாட்டில் பன்மடங்கு அதிகமாகும். ஒரு நாளில் குணமாகும் மருந்துகளும் உண்டு. குணமானாலும் ஆகாவிட்டாலும் ஒரு “கோர்ஸ்” முழுமையும் எடுத்தாக வேண்டும் என்கிறமருந்துகளும் உண்டு. இதையெல்லாம் சரியாக எடுத்துச் சொல்வது பார்மிஸ்ட் கடமையாகும்.

மேலை நாடுகளில் மருத்துவர் எழுதி கொடுப்பதுடன் சரி. மற்றவை எல்லாம் மருந்தாளுனர் தான் கவனிப்பார். இம்முறைநமது நாட்டிலும் கூடிய விரைவில் பரவலாகும். அப்போது நிறைய இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.

இளைஞர்களுக்கு நீங்கள் தரும் வெற்றிக்கான முன்னேற்றக் கருத்துக்கள்

 • வெற்றியின் போது அதிகம் மகிழ்ச்சியடைதலும், தோல்வியின் போது அப்படியே துவண்டு போவதும் கூடாது. இந்த வெற்றி என்பதும் தற்காலிகமானதுதான். தோல்வியும் வாழ்க்கையில் ஒரு பகுதிதான் என்பதை உணர்ந்து செயல்படுதல் வேண்டும்.
 • எடுத்த எடுப்பிலேயே பெரிய இடத்தில் அமர்ந்து விடவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு. அப்படி அமையாத போது சோர்வுக்கு உள்ளாகுதல் கூடாது.
 • கடின உழைப்பின் மூலமே உயர்ந்த இடத்தைப் பெறமுடியும் என்று வெற்றியாளர்களைப் பார்க்கும் போது எண்ணுதல் வேண்டும்.
 • முதலீட்டாளர்களுக்கு நீங்கள் தரும் யோசனை…

  முதலாளி என்ன சொல்கிறாரோ அதற்கு அப்படியே கீழ்ப்படிகிறநிலை என்பதெல்லாம் இன்று இல்லை.

  நமக்கு கீழே பணிபுரிபவர்கள் சொல்லும் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும்.

  நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது போன்றமனநிலை கூடாது.

  “தன்னம்பிக்கை” குறித்து?

  இன்றைய இளைய சமுதாயத்திற்கு தேவையே “தன்னம்பிக்கை” தான். அதனால் இது போன்ற இதழ்கள் பன்மடங்கு பெருக வேண்டும். சமுதாய அக்கறை நிரம்ப இதழைக் கொண்டு வருவது பாராட்டுக் குரியது. மேலும் பயிலரங்குகளை இலவசமாக நடத்தி இளைஞர் களை ஊக்குவித்து வருவது சிறப்பிற்குரியது. தங்கள் பணியால் நிறைய சாதனையாளர்கள் எதிர்காலத்தில் உருவாகுவார்கள் என்று உறுதியாக கூறமுடியும்.

  சமூகப் பணியில் உங்களின் பங்கு…

  ஆன்மீகப் பணியில் நிறைய சேவைகளை செய்து வருகிறோம். மேலும் எங்கள் பள்ளியின் மூலமாக உயர்தரக் கல்விக்கூடம் தரும் கல்வி அறிவினை மிகக் குறைந்த கட்டணத்தில் மாணவ மாணவியருக்கு கொடுத்து வருகிறோம். படிப்பவர்கள் தரும் வருமானத்தைக் கொண்டு பள்ளியை நடத்தாமல் எங்களின் வருமானத்தில் குறிப்பிட்ட அளவு கல்விக்கூடத்திற்கு கொடுத்து கல்விப் பணியைச் சிறப்பாகச் செய்து வருகிறோம். ஆரம்ப கல்விக்கூடம் தான் ஒரு மாணவனை சிறந்தவனாக உருவாக்கித் தருகிறது. எனவே எங்கள் பள்ளியில் படித்துச் செல்லும் மாணவன் சிறந்த குடிமகனாகத் திகழ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதற்கான பணிகளைத் திறம்பட செய்து வருகிறோம்.


  Share
   

  No comments

  Be the first one to leave a comment.

  Post a Comment


   

 


December 2008

உடல் நலம்
மனிதா..! மனிதா..!
எண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களை சீராக்குவோம்
வாழ்க்கைக்கு மதிப்பு
உன்னதமாய் வாழ்வோம்! அடித்தளம் அமைப்போம்!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சர்வதேச நிதி நெருக்கடி ஏன்?
விருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்
உள்ளத்தோடு உள்ளம்
வாழ்ந்து காட்டலாம் வா நண்பா!
ஆர்வம் அவசியம்
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை
தாழ்வு மனப்பான்மையைத் தவிடுபொடியாக்குங்கள்
உங்கள் நிறுவனத்தில் கால அட்டவணை ஒரு வழக்கமாக ஏற்படுத்துங்கள்
வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம்
ஒரு பாதசாரியின் பயணக்குறிப்புகள்
திறந்த உள்ளம்
இளைஞா! எழு!
மனித மனங்களை வெல்லும் கலைகள்