Home » Articles » வெற்றிப் படிக்கட்டுகள்

 
வெற்றிப் படிக்கட்டுகள்


செலின் சி.ஆர்
Author:

நேர நிர்வாகம் குறித்த பெரிய பெரிய விஷயங்களை நீங்க அலசி ஆராய்ந்து தெரிஞ்சுக்கிட்டாலும், நாம இதுவரைக்கும் இந்த நேர நிர்வாகம் தொடர்பான அத்தியாயங்கள்ல கத்துக்கிட்ட சின்ன சின்ன யுக்திகளைப் பின்பற்றினாத்தான் நல்ல பலன் கிடைக்கும். நமது தினசரி வாழ்க்கையில் நாம செய்யத் தவறி விடும் சின்ன சின்ன விஷயங்கள்தான் பெரிய பெரிய விளைவுகளுக்குக் காரணமாகி விடுகின்றன. தற்சமயம் உங்கள் கையில் நிறைய பணம் இல்லாம இருக்கலாம்… அதிக தொழில்நுட்ப விஷயங்கள் தெரியாம இருக்கலாம்… ஆனால், விலைமதிக்க முடியாத நேரம் இருக்கிறது. பில்கேட்சுக்கும், அனில் அம்பானிக்கும் கொடுத்திருக்கிற அதே அளவு நேரத்தைத்தான் இயற்கை உங்களுக்கும் கொடுத்திருக்கு. அதை சரியான முறையில பயன்படுத்தினாலே போதும். உங்ககிட்ட தற்போது இல்லாத பல விஷயங்கள், உங்களைத் தேடி ஓடி வரும்.

சுருக்கமா ஒரே ஒரு வாக்கியத்துல சொல்லனும்னா நேரநிர்வாகங்கிறது நீங்க எவ்வளவு நேரத்தைப் பயன்படுத்தறீங்கங்கன்றதுல இல்ல எவ்வளவு பயனுள்ளதா, உபயோகமான முறையில நேரத்தை செலவு செய்யறீங்க என்பதுல தானிருக்கு. சரியா?

சகிப்புத்தன்மை!

இதுதாங்க நாம அடுத்ததா ஏறப்போகிற படிக்கட்டு! சகிப்புத்தன்மைங்கறவார்த்தையை நாம பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியிருப் போம். ஆனால், பெரும்பாலும் குடும்ப விஷயங் களிலும், உறவுகள் சார்ந்த விஷயங்களிலும் தான் இந்த வார்த்தைக்கு முக்கியத்துவம் இருக்கிறதா நினைச்சுட்டிருக்கிறோம். உறவுகளைத் தக்க வைத்துக் கொள்ள மட்டும்தான் சகிப்புத்தன்மை அவசியம் அப்படினு நினைக்கிறோம். “நீதான்மா கொஞ்சம் சகிச்சுக்கனும், குடும்பம்னா அப்படி இப்படித்தானிருக்கும்…” அப்படிங்கற அறி வுரையை சொல்லாத பெற்றோரே இல்லைனு சொல்லலாம். ஆனால், குடும்ப வாழ்க்கை வெற்றி பெறமட்டுமில்லைங்க, தொழிலில் வெற்றி பெறவும் சகிப்புத்தன்மைங்கற இந்த குணம் ரொம்பவே அவசியம். அடுத்தவங் களுக்குக் கீழே வேலை செய்யும் போது வேறவழியில்லாம, “நம்ம மேலே தவறே இல்லாத சமயங்களில் கூட பொறுமையை, சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிக்கிறோம். அதுவே, சுய தொழிலில் இறங்கினபிறகு, ரொம்ப சாதாரண மான விஷயங்களைக் கூட சகிச்சுக்க மாட்டேங் கறோம். சுயதொழிலில் “நமக்கு நாமதான் ராஜா” அதனால் சகிப்புத்தன்மை தேவையில்லை அப்படிங்கற தவறான எண்ணத்தில், கொஞ்சம் முரட்டுத்தனமாகவே நடந்துக்கறோம். ஆனால், நேர்மாறாக…. சுயதொழிலில் ஈடுபடும் போதுதான் அதீத சகிப்புத்தன்மை நமக்குத் தேவை. நம்மைக் கேள்வி கேட்க நமக்கு மேல் வேறு யாருமில்லை (அலுவலகத்தில்) என்ற நிலையில் தான் நமக்கு சுயக்கட்டுப்பாடும், சகிப்புத்தன்மையும் அதிகம் தேவை. ஏனெனில், பெரிய நிறுவனத்தில் வேலை செய்யும் போது, பலருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு எளிதாகத் தப்பிவிட முடியும். சுயதொழிலில், நாமே தனியாக நின்று செயல்படும் போது, அத்தனை விஷயங்களுக்கும், முடிவுகளுக்கும் பொறுப்பேற்றாக வேண்டிய நிலையில்தான் அதிக சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது. இல்லா விட்டால், தொழிலில் எதிர்கொள்கின்றசில எதிர் மறையான விஷயங்களை, விமர்சனங்களை, போட்டியாளர்களின் அற்பமான நடவடிக்கை களை, பொறாமை உணர்வின் வெளிப்பாடுகளை சகித்துக் கொள்ள முடியாமல், நாம் உணர்ச்சி வயப்பட்டு, பதில் வினை புரிந்து விடுவதால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம்.

இவற்றைத் தவிர்த்து, வெற்றிப்படிகளில் எப்படி ஏறலாம் என்பதைப் பற்றி விரிவாக அடுத்த இதழில் பேசலாம்.

அன்பிற்குரிய தன்னம்பிக்கை வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! 2009ல் நீங்கள் வெற்றி மேல் வெற்றி பெற்று, மளமளவென வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறிடுங்கள்!!

(தொடரும்)


Share
 

1 Comment

 1. Govind says:

  nalla arumaiyaana karuthu mikka thodar. naan intha web side ku puthiyavan.
  en iniya sagothariyin ‘aruvurai’ yai thailai mel metkondhu, neram ponnaanathu-kaalam kannaanathu enbathai unarnthu, intha 2009 il…entha aandhum illaatha ‘vetrigalai’ kuvikka itharuname…kangganam’ katti vitten.

  enakku thanggalin aasiyai valangga vendhum.

  thanggalukku enathu ‘iniya 2009 aanggila puthaandhu’ vaalthukkal.
  thannambikkai.net ku enathu iniya nandrigal urithaagattum. 🙂

Post a Comment


 

 


December 2008

உடல் நலம்
மனிதா..! மனிதா..!
எண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களை சீராக்குவோம்
வாழ்க்கைக்கு மதிப்பு
உன்னதமாய் வாழ்வோம்! அடித்தளம் அமைப்போம்!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சர்வதேச நிதி நெருக்கடி ஏன்?
விருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்
உள்ளத்தோடு உள்ளம்
வாழ்ந்து காட்டலாம் வா நண்பா!
ஆர்வம் அவசியம்
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை
தாழ்வு மனப்பான்மையைத் தவிடுபொடியாக்குங்கள்
உங்கள் நிறுவனத்தில் கால அட்டவணை ஒரு வழக்கமாக ஏற்படுத்துங்கள்
வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம்
ஒரு பாதசாரியின் பயணக்குறிப்புகள்
திறந்த உள்ளம்
இளைஞா! எழு!
மனித மனங்களை வெல்லும் கலைகள்