Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


ஆசிரியர் குழு
Author:

எந்த இன மக்களை அடிமையாக நடத்தினார்களோ அந்த இன மக்களில் ஒருவரை அதிபராகத் தேர்ந் தெடுத்திருக்கிறார்கள் அமெரிக்க மக்கள். அவர்தான் மாற்றத்தை நம்மால் சாத்தியப்படுத்த முடியும் என்று முழங்கிய “பராக் ஓபாமா”.

தன்னம்பிக்கைக்கு சரியான எடுத்துக் காட்டாக திகழ்கிறார் இன்று அவர். வெள்ளை ஆதிக்கம் நிறைந்த நாட்டில் ஒரு கறுப்பர் அதிகாரத்தில் எப்படி அமர முடிந்தது ஆச்சர்யம் பலருக்குள் இன்னும் இருக்கவே செய்யும்.

கறுப்பின தந்தைக்கும் வெள்ளை இன தாயுக்கும் மகனாகப் பிறந்து, தாய் வழிப் பாட்டியின் வளர்ப்பில் கல்லூரிப் படிப்பை முடித்து சமூக சேவகராக தன்னை மாற்றிக் கொண்டு படிப்படியாக வெள்ளை உள்ளங்களில் இடம் பிடித்தார். காலத்தின் மாற்றம் “வெள்ளை மாளிகையை” அவருக்கு கொடுத்திருக்கிறது.

எதையும் மறைக்காமல் உண்மையைச் சொல்லி “இன்று நான் ஒரு அமெரிக்கன் என் நாட்டிற்கு நன்மையைச் செய்வேன் அதற்கான திட்டங்கள் என்னிடம் உண்டு” என்று பேச்சில் கம்பீரத்தை வெளிப் படுத்தினார். சாதித்துக் காட்டி விட்டார்.

அவர் நமது நாட்டிற்கு உறவாவாரா? ஆக மாட்டாரா? என்பது ஒருபுறம் இருக்கட்டும். எந்தளவு நம்பிக்கையும், எதிராளியை சமாளிக்கும் திறமையையும் அவர் வளர்த்திருக்க வேண்டும் என்பதை நினைத்து பார்த்து ஒவ்வொருவரும் செயல்படத் தயாரானால் பகையாளியையும் நண்பனாக்கி சாதித்துக் காட்டி விடலாம்.

எழுங்கள்! புதுவருட தன்னம்பிக்கை வழிகாட்டி 2009-ல் உங்களது சாதிப்பிற்குரிய குறிக்கோளை பதிவாக்கிவிட்டு அதற்கான முயற்சியில் இறங்குங்கள்! வாழ்த்துகள்!

அன்புடன்,
ஆசிரியர் குழு


Share
 

1 Comment

  1. Govind says:

    Ninanaitha mudikkum puthiya MGR ivarthano?
    Puthaandil aarambham.
    Puthu Vegamaana oru utharanam.
    Ennilum oru puthu utvegathai edpaduthi vittahu
    unggal “thannambikkai’ yin intha padaippu.
    Intha 2009 ai en vasappadutha itho iranggi vitten seyalile.
    Vaalga Thannambikkai.net. Valarga unggal ‘thru thondu’ 🙂

Post a Comment


 

 


December 2008

உடல் நலம்
மனிதா..! மனிதா..!
எண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களை சீராக்குவோம்
வாழ்க்கைக்கு மதிப்பு
உன்னதமாய் வாழ்வோம்! அடித்தளம் அமைப்போம்!!
வெற்றிப் படிக்கட்டுகள்
சர்வதேச நிதி நெருக்கடி ஏன்?
விருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்
உள்ளத்தோடு உள்ளம்
வாழ்ந்து காட்டலாம் வா நண்பா!
ஆர்வம் அவசியம்
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை
தாழ்வு மனப்பான்மையைத் தவிடுபொடியாக்குங்கள்
உங்கள் நிறுவனத்தில் கால அட்டவணை ஒரு வழக்கமாக ஏற்படுத்துங்கள்
வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம்
ஒரு பாதசாரியின் பயணக்குறிப்புகள்
திறந்த உள்ளம்
இளைஞா! எழு!
மனித மனங்களை வெல்லும் கலைகள்