Home » Articles » இங்கு இவர் இப்படி வெற்றியின் எல்லை வெளியிடத்தில் இல்லை!

 
இங்கு இவர் இப்படி வெற்றியின் எல்லை வெளியிடத்தில் இல்லை!


அருணா சுபாசினி C.V
Author:

சிந்திக்க வைக்கும் ‘சித்த ஆயுர்வேத’ மருத்துவ முறைகளால் வந்தவர்களையும் அக்குபஞ்சர் எனும் சன முறைவைத்தியத்தால் விரைவில் நன்கு குணமடைய வைத்து நம்பிக்கை மருத்துவர் என்று அன்பாக அழைகப்படுபவர் டாக்டர் C.V. அருணா சுபாஷினி.

அகில இந்திய அத்லெடிக் யோகாசன சேம்பியன் ஷிப் வரை சென்று 10 தங்க மெடல்கள் வென்றவர்.

இவர் மகளிர்க்கென்றே பிரத்யேகமாக 10 நிமிட யோகாசன சிகிச்சையை பயிற்சி அளித்து சுகப்பிரசவன் ஏற்படுத்தி K.G. மருத்துவமனை சேர்மன் பத்மஸ்ரீ G. பக்தவச்சலம் அவர்களின் பாராட்டுதல் பெற்று அங்கு பணியாற்றி வருபவர்.

குழந்தைகளுக்கு ஞாபகசக்தி, உடல் எடை குறைபாடு, பார்வைத்திறன் குறைபாடுகளுக்கு பள்ளி, கல்லூரிகளில் நல்லமுறையில் பயிற்சி தந்து பேரூர் தமிழக் கல்லூரியின் ஆதினம் மற்றும் முதல்வர் பிரபல யோகாசன நிபுணர் Dr. ஆசனா ஆண்டியப்பன் அவர்களிடமிருந்து “யோகாசன மருத்துவச் செம்மல்” விருதினைப் பெற்றவர்.

காலஞ்சென்ற சித்த மருத்துவ மாமணி தாராபுரம் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சீரிய பயிற்சியில் இந்திய முறை மருத்துவத்தோடு “சித்த மருத்துவ தத்துவமணி” பட்டம் பெற்று இன்று பலருக்கும் பயிற்சி அளித்து வருபவர்.

முடியாது என்பது கூடாது. முடியும். என்பதே வேண்டுமென்று MA, SMA, SMP, DYN, PGDY, MD(ACV) ALT, BEMS என பட்டங்கள் நிறையப் பெற்றிருப்பவர்.

திட்டமிட்டுச் செயல்பட்டால் நேரம் இருக்கத்தான் செய்யும் என்று தற்பொழுது MBAவும் படித்து வருபவர்.

ஜப்பானிய ரெய்க்கி சிகிச்சை முறையினை மதுரை டாக்டர் ரமேஷ் அவர்களிடம் கற்றுக் கொண்டவர்.

அன்னை திருமதி. ராம்பாய் வெங்கட்ராமன் அவர்கள் என்மீது காட்டிய ஆர்வமே எனக்கு பாதையானது! அதுவே வெற்றியானது என்று சொல்லும் இவர் 2006-ல் கோவையின் சிறந்த மருத்துவப் பெண்மணி விருது, 2007-ல் ஹானர்ஸ் இன் யோகா விருது என பல விருதுகளைப் பெற்றிருப்பவர்.

குளோபல் நேச்சுரல் இன்ஸ்டிடியூசன் என்கிற அக்குபஞ்சர் பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருபவர்.

ஆர்வமும், அதற்கேற்ற உழைப்பும், முயற்சியும் இருந்தால் சாதிக்கலாம் என்று கூறும் டாக்டர் C.V. அருணா சுபாஷினி தன்னைப் போலவே மகள் ருமிதாவையும் உருவாக்கியிருக்கிறார்.

செல்வி ருமிதா பேஷன் டிசைனிங் துறையில் பட்டம் பெற்றவர். வித்தியாசமான ஆடை ஆயத்த படைப்புகளால் 2007ல் கோவை பேஷன் பேர் மற்றும் கல்லூரி போட்டியில் “சிறந்த ஆடைவடிமைப்பாளர் விருது” பெற்றவர்.

பரதநாட்டியம், சிலம்பம், துப்பாக்கி சுடுதல், செமிபேலே என பல பயற்சிகளில் ஈடுபட்டு கல்லூரி போட்டிகளில் ஒரே வருடத்தில் 10க்கும் மேற்பட்ட முதல் பரிசுகளைப் பெற்று சாதித்தவர்.

இயற்கை வைத்திம், யோகா, DYN, அக்கு பஞ்சர், BAMS, ரெய்க்கி, டார்ன்தெரபி படிப்புகளை அன்னையைப் போலவே, தொடர்ந்து கற்றுக்கொண்டவர். தனது கல்வியாண்டில் மருத்துவப் பொருட்கள் இணைந்த ஆடை வடிவமைப்பு பணியை “Herbal Medicine Application in Textiles” என்ற புதுமுக யோசனையுடன் மக்களுக்கு வெகுவாகப் பயன்படும் மருத்துவப் பொருட்களான பிளாஸ்திரி, பேண்டெய்டு மற்றும் பஞ்சு, குச்சி ஆகியவற்றில் இயற்கை மூலிகை மருந்துகள் சேர்ப்பதால் நற்பலன்கள் எளிமையாக கிடைக்கிறது என சாதித்துக் காட்டியவர். மேலும் சோற்றுக் கற்றாழையை நாராக்கி செய்த சீட்குஷன், எருக்கம் பஞ்சு தொப்பி என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு பலரின் பாராட்டுகளைப் பெற்றவர்.

பண்பாட்டுக் கல்வி நிறுவனத்தை எதிர் காலத்தில் உருவாக்குவதை இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தாயும் மகளும் நமக்குச் சொன்னது,

“வெற்றியின் எல்லை
வெளியிடத்தில் இல்லை”
நமக்குள்ளே! முயற்சியுங்கள்
முன்னேற்றம் நிச்சயம் உண்டு!

– என். செல்வராஜ்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2008

திறந்த உள்ளம்
பெண்ணின் மேம்பாடு சமுதாயத்தின் மேம்பாடு
உள்ளத்தோடு உள்ளம்
நட்புகள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும்
காலத்தை வெல்வோம்
உங்கள் கவனத்திற்கு
இங்கு இவர் இப்படி வெற்றியின் எல்லை வெளியிடத்தில் இல்லை!
உன்னைத்தேடி வீதிகள் வாரா!
வியாபாரத்தின் ஒரே முதலாளி
வளர்ச்சி! முதிர்ச்சி!
உலகில் புதிய உயிரினத்தை செயற்கை முறையில் உருவாக்க முடியுமா?
வேரில் பழுத்த பலா
ஏற்றுங்கள் நல்ல எண்ணத்தின் தீபங்களை
கேள்வி பதில்
வெற்றிப் படிக்கட்டுகள்
”நினைக்கும்” வகையில்
''நினைக்கும்'' வகையில்
மனிதா மனிதா
சிந்தனைக்கு
நிறுவனர் நினைவுகள்
ஒழுங்கான செயல்
மரபணு மாற்றம் – காலத்தின் கட்டாயம்
துணிவுடன் போராடு வெற்றி வரும்
தேர்வு எழுதும் மாணவர்களே!